சிறுமி பலாத்கார சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பா?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:டில்லியில், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவத்தில், மேலும் ஒரு நபருக்கு தொடர்பு இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

டில்லி, காந்தி நகர் பகுதியில், ஐந்து வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசித்த, மனோஜ் குமார், 22, என்ற நபர், தன் வீட்டில், நான்கு நாட்களாக அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, தப்பி ஓடினான்.இந்த கொடூர சம்பவம், டில்லியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அடுத்து, பீகாரில், மாமனார் வீட்டில் பதுங்கியிருந்த, மனோஜ் குமாரை, நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, இந்த விஷயத்தில், திருப்பம் ஏற்பட்டுள்ளது.


ஆதாரம் இல்லை:

இதுகுறித்து, டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், மனோஜ் குமாரை தவிர, வேறு ஒரு நபருக்கும், தொடர்புள்ளதாக, பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.இருந்தாலும், இந்த சம்பவத்தில், இரண்டாவது நபருக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்திலும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள, மனோஜ் குமாரிடம், இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.இதுவரை நடந்துள்ள விசாரணையில், இந்த சம்பவத்தில், மேலும் ஒரு நபருக்கு தொடர்புள்ளதாக, மனோஜ் குமார், எந்த தகவலும்
தெரிவிக்கவில்லை; தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று ஆஜர்:எந்த ஒரு வழக்கிலும், குற்றவாளியை கைது செய்தால், 24 மணி நேரத்துக்குள், சம்பந்தபட்ட கோர்ட்டில், அவரை ஆஜர் படுத்த வேண்டும் என, விதிமுறை உள்ளது. மனோஜ் குமார், இன்னும், டில்லி கோர்ட்டில், ஆஜர் படுத்தப்படவில்லை. "மனோஜ் குமார், பீகாரில் கைது செய்யப்பட்டதால், அவனை, டில்லி கோர்ட்டில் ஆஜர் படுத்துவதில், சில சட்ட பிரச்னைகள் உள்ளன. இந்த பிரச்னைகள், சரி செய்யப்பட்டவுடன், இன்று அவனை, கோர்ட்டில் ஆஜர் படுத்துவோம்' என, டில்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒதுக்கி வைப்பு:

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, மனோஜ் குமாரின், சொந்த மாநிலம், பீகார் என்பதால், இது தொடர்பாக, அங்கும் பதற்றம் நிலவுகிறது. மனோஜ் குமாரின் சொந்த கிராமத்தில், அவனது தாயார் வசித்து வந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு வசிக்கும் பொதுமக்கள், மனோஜ் குமாரின் தாயாரை, ஆவேசத்துடன் திட்டி தீர்த்தனர். அவரை, கிராமத்தை விட்டு, ஒதுக்கியும் வைத்துள்ளனர்.


சோனியா வீடு முற்றுகை:

சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யபட்டதை கண்டித்து, டில்லியில் நேற்றும், பல இடங்களில், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பா.ஜ., மகளிர் அணியினர், காங்., தலைவர் சோனியாவின் வீடு முன் திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார், கைது செய்தனர்.பிரதமர், மன்மோகன் சிங்கின் வீட்டு முன், ஏழை மக்கள் கட்சியினர், போராட்டம் நடத்தினர். டில்லி போலீஸ் தலைமை அலுவலகம், எய்ம்ஸ் மருத்துவமனை முன்னரும், ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். "டில்லி போலீஸ் கமிஷனர், நீரஜ் குமார், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, அவர்கள், கோஷம் எழுப்பினர். பதற்றமான சூழல் நிலவியதால், டில்லியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, உயர் அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.


சிறுமி உடல் நிலையில் முன்னேற்றம்:

டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சிறுமியின் உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர், டி.கே.சர்மா கூறியதாவது: சிறுமியின் உடல் நிலை, படிப்படியாக தேறி வருகிறது. அபாய கட்டத்தை தாண்டி விட்டாள். உடலின் மற்ற பகுதிகளுக்கு, தொற்று பரவாமல் இருப்பதற்கான, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவில், நன்றாக தூங்கினாள்.நினைவுத் திறன், நன்றாக இருக்கிறது. பெற்றோர், மருத்துர்கள், நர்சுகளுடன், நன்றாக பேசினாள். சிறிய அளவில், காய்ச்சல் உள்ளது.இவ்வாறு, டாக்டர் சர்மா கூறினார்.


மத்திய பிரதேசத்திலும் கொடுமை:

மத்திய பிரதேச மாநிலத்திலும், ஐந்து வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ம.பி., போலீசார் கூறியதாவது:சிவ்னி மாவட்டத்தை சேர்ந்த, ஐந்து வயது சிறுமியை, பிரோஸ் கான், 35, என்ற நபர், பாலியல் பலாத்காரம் செய்து, அருகில் இருந்த ஒரு, வயலுக்குள் தூக்கி வீசி விட்டு, தப்பி ஓடிவிட்டான். நினைவிழந்த நிலையில், அந்த சிறுமி, மீட்கப்பட்டாள்.தற்போது, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், சிறுமி சிகிச்சை பெற்று வருகிறாள். பலாத்காரம் செய்த நபர், பீகார் மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து, போலீசார், அங்கு விரைந்துள்ளனர்.இவ்வாறு ம.பி., போலீசார் கூறினர்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
daadi oru davuttu - kandy,இலங்கை
22-ஏப்-201315:20:01 IST Report Abuse
daadi oru davuttu இந்திய பீனல் கோர்ட்டு சட்டமெல்லாம் செத்த பாம்பு னே, இதில இந்திய ஏழை களை மட்டுமே தண்டிக்க முடியும்.சுகந்திரதிக்கு பின்பு இதுவரை எத்தனை அரசியல்வாதிகள்,உழல் செய்தவர்கள், அரசியல் கொலைகாரர்கள், தண்டிக்கப்பட்டனர் .எல்லாமே பொய்ங்க.அல்கொய்தா பயங்கரவாதி சரி,நமக்கு இஸ்லாமோடு விரோதமில்லையே .ஏன் சவூதி சட்டத்த அமல் செய்யகூடாது? என்னா கழுத்து வெட்டப்படும் முக்கால் வாசி பேர் vip இருக்கும்.பிறகு இந்த மாதரி நியூஸ் கூட வராது. நாடு சீர்படும்.
Rate this:
Share this comment
Cancel
suthesi - covai,இந்தியா
22-ஏப்-201315:13:13 IST Report Abuse
suthesi 3 நாட்களில் மறந்தே விடுவர் இந்த நாடும் இந்த மக்களும்....
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
22-ஏப்-201309:58:29 IST Report Abuse
R.BALAMURUGESAN ...பிள்ளைகளை நல்லவர்களாக, தைரியமானவர்களாக வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு முதலிடம் பிடிக்கிறது... பெற்றோர்கள்தான் பிள்ளைகளை வீட்டிலும், வெளியிலும், பள்ளியிலும், கல்லூரிகளிலும், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்... அவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் உடனே தடுக்க வேண்டும் நல்லவற்றை உணர்த்தவேண்டும்... பொதுவாக பிள்ளைகளை படிப்பதர்க்காகவோ, விளையாடுவதர்க்காகவோ, மற்ற விஷேசங்களுக்காகவோ நண்பர்களின் வீடுகளுக்கு தனியாக அனுப்புவதை தவிர்க்க வேண்டும்... அப்படியே அனுப்பினாலும், உன்னிப்பாக அடிக்கடி அவர்களிடம் தொடர்பு கொண்டு, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொள்ள வேண்டும்... அவர்களின் எந்த விதமான சின்ன தவறுக்கும் நீங்கள் உடன் படாதீர்கள்... அவர்களிடம் நீங்கள் (அம்மாவோ அப்பாவோ, யாரோ ஒருவர்கூட...) நண்பர்களாக பழகுங்கள்... நீங்களே அவர்களின் முன்னுதாரணம்... இவை எல்லாம் ஆபத்து வரும் முன் தடுப்பதற்கு உங்களுக்கு ஓரளவுக்கு பயன்படலாம்... பிறகுதான் மனித மிருகங்களை தண்டிப்பது, தூக்கில் போடுவது எல்லாம்... ஆதலால் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்ப்போம், உலக நடப்புகளை விளக்கிச்சொல்லுவோம்... அவர்களுக்கு புரிய வைப்போம்... கெட்ட சூழல்கள் வலுப்பெறும் போது, அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளுவது என்றுதான் முதலில் பார்க்க வேண்டும்... டாஸ்மாக் கடையருகில் போகும் போது, யாரும் அதிகமாக குடித்துவிட்டு, நம் மீது வந்து வீழாமல் இருக்க, எப்படி ஒதுங்கி நடந்து போகிறோம், அது போல்தான் இதுவும்... அதலால் மக்களே, பெற்றோர்களே உஷார்...
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
22-ஏப்-201309:33:49 IST Report Abuse
R.BALAMURUGESAN ...மனிதர்கள் மிருகங்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள், மக்களே... உஷார் உஷார்... நாம்தான் நமது பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்... அவர்களை தனியாக விடாதீர்கள்... விடுமுறை நாட்கள் தொடங்கிவிட்டது... அவர்கள் எங்கு இருக்கிறார்கள், எங்கு விளையாடுகிறார்கள், என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், என்று கவனித்துக் கொண்டே இருங்கள்... யாரும் அவர்களிடம் தவறாக பேசுகிறார்களா என்று அவர்களிடமே கேளுங்கள், கண்காணியுங்கள்... யாரும் புதிதாக நடமாடுகிறார்களா என்று கவனியுங்கள், உஷாராக இருங்கள் மக்களே... நாம் மிருகங்களுக்கு நடுவே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம், நாமும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டுமல்லவா... பெண் பிள்ளைகளிடம் நல்ல நல்ல விஷயங்களை சொல்லுங்கள், தைரியத்தை ஊட்டுங்கள், ஜாக்கிரதையாக இருக்க பழக்கி விடுங்கள்... புதியவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்... நண்பர்களின் வீட்டுக்கோ, சொந்தக்காரர்களின் வீட்டுக்கோ தனியாக அனுப்பாதீர்கள்... பிள்ளைகளின் குணாதிசயங்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்... அவர்கள் எல்லா விஷயங்களையும் தங்களுடன் (பெற்றோர்களிடம்...) பகிர்ந்து கொள்கிறார்களா என்று கண்டு பிடியுங்கள்... வலைதளங்களில் பிள்ளைகள் எவற்றையெல்லாம் பார்க்கிறார்கள் என்று கண்காணியுங்கள்... கெட்டுக் கொண்டே போகும் சூழ்நிலைகளில் நாம்தான் உஷாராக இருக்க அவர்களை பழக்க வேண்டும்... வந்த பின் கவலைபடுவதைவிட, வரும் முன் கவனமாக இருப்பதுதான் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
Gobiraj - Bangalore/Madurai,இந்தியா
22-ஏப்-201309:05:07 IST Report Abuse
Gobiraj இதே மாறி வெறிபிடிச்ச ....களுக்கு , விசாரணை எதுவும் தேவை இல்லை. ஈராக் , ஈரான் மாறி அவனை தண்டனை தரே வேண்டும்ம். மக்கள் மத்தியில் நிற்க வைத்து , .....
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
22-ஏப்-201308:51:43 IST Report Abuse
PRAKASH டெல்லி போலீசுக்கு என்கவுன்ட்டர் பண்ண தெரியாதா ?? தமிழ்நாடு போலீஸ் உதவி வேணுமா ??
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22-ஏப்-201308:49:45 IST Report Abuse
kumaresan.m " இன்னும் கொஞ்ச நாளில் மக்களும் மறந்து விடுவார்கள் ....ஆட்சியாளர்களும் மற்றும் அதிகாரிகளும் மறந்து விடுவார்கள் ....நமக்கு ஞாபக மறுதி ரொம்ம அதிகம் சாமி "
Rate this:
Share this comment
Cancel
devan arasan - boonlay,சிங்கப்பூர்
22-ஏப்-201308:30:51 IST Report Abuse
devan arasan தூக்கில் போட வேண்டும் .... இந்த வெறி புடிச்ச ...க்கு எதுக்கு விசாரணை???????????
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
22-ஏப்-201305:48:31 IST Report Abuse
K.Sugavanam தூக்கில் போட வேண்டும்.தூக்கு வேண்டாம் என்னும் புண்ணியவான்கள் அவங்க வீட்டுல இப்படி ஒரு நிகழ்வுன்னா,போனால் போகட்டும் போடான்னு இருந்துடுவாங்களா?
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
22-ஏப்-201305:39:05 IST Report Abuse
mangai இந்த வெறி புடிச்ச நாய்க்கு எதுக்கு விசாரணை..?? அதன் தெள்ள தெளிவா தெரியுதே... பெண் குழந்தைகளை வசிருக்குரவங்க எந்நேரமும் காவு குடுக்கதயாரா வச்சிருக்கணுமா.. இதன் இந்த நாட்டுல பொறந்ததுக்கு தண்டனையா.. போங்கடா நீங்களும் உங்க சட்டமும்.. அந்த டெல்லி பொண்ண கற்பளிச்சவுனுங்களை அப்போவே கொடூரமான தண்டனை குடுத்து கொன்னுருந்தா இபோ இவ்ளோ தைரியமா இன்னொருத்தன் இப்படி பண்ணிருப்பானா.. இதுல பொண்ணுங்க டிரஸ் பண்ணிக்குறத பத்தி ஆயிரத்தெட்டு வியாக்கினம் வேற.. இந்த பாப்பாகு என்ன தெரியும்?? அநியாயமா இவனோட வக்கிரத்துக்கு பலியாகிருசே.. உடம்பிலிருந்து மெழுகுவர்த்தி ellam எடுத்தாங்களாம்.. இப்படி பட்ட கொடூரன எதுக்கு நம்ம சட்டம் பாதுகாக்க சொல்லுது.. இந்த சட்டம் engalukku தேவை இல்ல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்