பாலியல் பலாத்கார சம்பவங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும்: பிரதமர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""பெண்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய நேரமிது; பாலியல் பலாத்கார சம்பவங்கள், சமூகத்தில் அறவே ஒழிக்கப்பட வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

டில்லியில், எட்டாவது சிவில் சர்வீசஸ் தின விழாவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு விருது வழங்கி, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:


எச்சரிக்கை:

டில்லியில், கடந்த டிசம்பர் மாதம், மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு பலியான சம்பவம், சமீபத்தில், ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை ஆகியவை, பெண்களின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை எச்சரித்துள்ளன.இக்கொடூரமான சம்பங்கள், சமூகத்தில் இருந்து அறவே ஒழிக்கப்பட, அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். பெண்களின் பாதூப்பு, கண் காணிப்பு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.இந்த இரண்டு சம்பவங்களுக்கு பின், பல்வேறு தரப்பினரும் நடத்திய போராட்டத்தின் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க, சட்டத்தை வலிமையாக்குவதில், அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.இந்த விஷயத்தில் நாம் அனை வருக்கும் பொறுப்பு இருக்கிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்கவும், அவர்களை மேம்படுத்தவும், சமூக பொருளாதார அளவில் பங்களிப்பு அவசியம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அரசு செயல்பாட்டில் வெளிப்படையான தன்மையை மேம்படுத்த, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; ஊழலை ஒழிக்க, தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.அரசின் மானியங்கள், மக்க ளுக்கு நேரடியாக, தாமதமின்றி போய் சேர வேண்டும் என்பதற்காக, "உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த விரும்புகிறது. இவற்றுடன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான உங்களின் ஒத்துழைப்பும் தேவை.நாட்டு மக்கள் அனைவருக்கும், "ஆதார்' அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை கொண்டு, "உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம் துவக்கப்பட்டது.


சர்வதேச தரம் :

இதன் மூலம், மூன்றாவது நபர் தலையீடு இல்லாமல், அரசின் மானியம் மக்களுக்கு சென்று சேரும்; பொதுச் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்பது தான். நமது பொதுச் சேவையின் தரம் சர்வதேச தரத்திற்கு இணையாக உள்ளதை, நாம் அங்கீகரிக்க வேண்டும்.சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு, கல்வி, சுகாதாரம் கிடைக்கும் வகையில் பேணி காப்பதே, அரசின் முக்கிய கடமை. நம் மக்கள் தொகையில், 50 சதவீத மக்கள், நகரங்களில் வசிக்கின்றனர். இதன் காரணமாக, நகரமயமாக்கலுக்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். 20 ஆண்டுகளை இலக்கு வைத்து இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரம், பல இக்கட்டான நிலைமைகளைத் தாண்டி வந்துள்ளது. பொருளாதார சிக்கலில் இருந்து நாம் மீண்டு வருவதற்கு, முதலீடுகளை ஊக்குவிப்பதே சிறந்த வழி.தற்போது, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே. இதை சரி செய்து, வளர்ச்சிப் பாதைக்கு விரைவில் செல்வோம். இதற்காக, தொழில் மற்றும் கட்டுமானத் திட்டங்களை விரைவுபடுத்த, முதலீடுக்கு என்று காபினட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


பங்களிப்பு :

நம் முன் உள்ள சவால்களைச் சந்தித்து, துணிச்சலுடன் பணியாற்றுவதற்கும், அரசின் லட்சியங்கள் நிறைவேறுவதற்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பங்களிப்பு தேவை.இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

விழாவில், நக்சல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய சத்தீஸ்கர் மாநிலம், தாண்டேவாடா மாவட்ட கலெக்டர், ஓ.பி. சவுத்ரி, உ.பி., மாநிலத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த மக்களை விடுவித்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அமித் குப்தா ஆகியோருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருது வழங்கி கவுரவித்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (36)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - bangalore,இந்தியா
26-ஏப்-201316:01:00 IST Report Abuse
N.K இதை இவர் சொல்றதுக்கே இதனை நாளாச்சு. இனி இவர் ஆட்சியில் இதை செயல்படுத்த இன்னும் எதனை காலம் ஆகுமோ தெரியவில்லை. அதற்குள் இன்னும் எதனை பெண்கள் சிறுமிகள் அழ வேண்டி இருக்குமோ. 5 வயது குழந்தையை கூட கற்பழித்து இருக்கிறார்கள். இதை விட நம் நாட்டுக்கு என்ன அவமானம் தேவை. என்னை பொறுத்த வரை இன்னும் நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க வில்லை. என்று எந்த பெண்ணும் பயம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் நடக்கிறாலோ அன்று தான் நமக்கெல்லாம் சுதந்திரம். முடிந்தால் உங்கள் ஆட்சியில் சுதந்திரம் பெற்று தாருங்கள் நம் நாட்டிற்கு. (பெண்களுக்கு)
Rate this:
Share this comment
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
22-ஏப்-201320:48:38 IST Report Abuse
s.r.ramkrushna sastri முதலில் காங்கிரஸ் தலைமையிலான உங்களுடைய அரசு ஒழிக்க பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Mahendra Babu R - Chennai,இந்தியா
22-ஏப்-201319:45:47 IST Report Abuse
Mahendra Babu R அந்த போட்டோ-ல கும்பிடுரீங்கல்ல. அதே மாதிரி நாங்களும் உங்கள கையெடுத்து கும்பிடுறோம். தயவு செய்து எங்கள வுட்ருங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
Mahendra Babu R - Chennai,இந்தியா
22-ஏப்-201319:41:03 IST Report Abuse
Mahendra Babu R நான் சொல்லல இவரு இப்படிதான் அடிக்கடி காமெடி பண்ணிக்கிட்டு இருப்பார்ன்னு
Rate this:
Share this comment
Cancel
Mahendra Babu R - Chennai,இந்தியா
22-ஏப்-201319:28:45 IST Report Abuse
Mahendra Babu R பிரதமர் அவர்களே எங்களுக்கு நீங்க போதும் வேற பிரதமர் வேணும்.
Rate this:
Share this comment
Cancel
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201319:10:43 IST Report Abuse
Sivramkrishnan Gk காங்கிரஸ் கட்சி நாட்டிலிருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும் என நாங்கள் சொல்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
jhakir hussain - thajavur,இந்தியா
22-ஏப்-201317:46:23 IST Report Abuse
jhakir hussain வாயால் பேசி காரியம் இல்லை. தண்டணைய கொடுத்து செயலில் காட்டுங்கள். .
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
22-ஏப்-201314:14:29 IST Report Abuse
v j antony பிரதமர் இதில் தலையிட்டு மாநில காவல் துறையை மேம்படுத்த முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் .இவ்வாறு பேசி கொண்டிருக்க மக்கள் இவருக்கு இந்த பதவியை கொடுக்கவில்லை
Rate this:
Share this comment
Cancel
Theodore - Chennai,இந்தியா
22-ஏப்-201313:42:21 IST Report Abuse
Theodore தயவு செய்து வேறு எதாவது பேசுங்க பிரதமர் அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201313:15:04 IST Report Abuse
Rajasekaran Palaniswamy ஒரு பெரிய அரசியல்வாதியின் பேத்தி அல்லது கொள்ளு பேத்திக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும்வரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்