Rajnath Singh in no hurry to declare BJP's PM choice | பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் அவசரம் காட்ட வேண்டியதில்லை: ராஜ்நாத் சிங்| Dinamalar

பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் அவசரம் காட்ட வேண்டியதில்லை: ராஜ்நாத் சிங்

Updated : ஏப் 23, 2013 | Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (25)
Advertisement
Rajnath Singh in no hurry to declare BJP's PM choice

புதுடில்லி : ""எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில், அவசரம் காட்ட வேண்டியதில்லை; அதேநேரத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உடனான பிரச்னைகள், சுமூகமாக பேசித் தீர்க்கப்படும்,'' என, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

வலியுறுத்தல்:"லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் மற்றும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தி வருகின்றன. அதேநேரத்தில், குஜராத் பா.ஜ., முதல்வர் நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
பா.ஜ.,வில், பிரதமர் பதவிக்கான போட்டியில் யாரும் இல்லை; எந்த ஒரு தலைவரும், தன்னை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் அல்லது முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என, கோரவில்லை. யாரை பிரதமர் வேட்பாளராக்குவது என்பது குறித்து, கட்சியின் உயர்மட்ட அமைப்பான, பார்லிமென்ட் போர்டு கூடி முடிவு செய்யும்.அதேபோல், பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதிக்க, தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டமும், உரிய நேரத்தில் கூடும். பிரதமர் வேட்பாளர் விஷயத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியிடமிருந்து, எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.எந்த சூழ்நிலையிலும், ஐக்கிய ஜனதா தளம் உடனான கூட்டணி முறிவடைவதை, பா.ஜ., விரும்பவில்லை. அந்தக் கட்சி உடனான பிரச்னைகள் பேசித் தீர்க்கப்படும்.


துரதிருஷ்டமானது:

குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 12 ஆண்டுகளாக உள்ளது. அங்கு, 2002ல் நடந்த வன்முறைகளைத் தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை. 2002ல் நடந்த வன்முறையும் துரதிருஷ்டமான ஒன்று என, மோடி கூறியுள்ளார்; அதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம்.நரேந்திர மோடி, ஒரு பிரிவினைவாதி அல்ல. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு தலைவர். சாதி, மதம் அடிப்படையில், எந்த விதமான பாகுபாடும் காட்டாதவர். மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரின் நலனிலும் அக்கறை கொண்டவர்.இவ்வாறு, ராஜ்நாத் சிங் கூறினார்.


பார்லி.,யில் போராட்டம்:

டில்லியில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் பேசியதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், முன்னாள் பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வாஜ்பாய் பெயரையும், காங்கிரஸ் கட்சியினர், தேவையில்லாமல், இழுத்துள்ளனர். நாட்டில் உள்ள, ஊழல் கறைபடியாத தலைவர்களில், வாஜ்பாயும் ஒருவர்.அவரின் நற்பெயருக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில், காங்., கட்சியினர் செயல்படுகின்றனர். இதற்கு, தக்க பதிலடி கொடுப்போம். காங்கிரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், புயலை கிளப்புவோம்.இவ்வாறு, ராஜ்நாத் சிங் கூறினார்.

உமாபாரதி பா.ஜ., துணை தலைவர்: மோடியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என, சொல்லும் தகுதி எனக்கில்லை. இருந்தாலும், பயங்கரவாதம், நக்சல்வாதத்தை ஒழிக்கக் கூடிய, ஊழலை வேரறுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கூடிய தலைவர், நாட்டிற்கு தேவை என, மக்கள் நினைக்கின்றனர். அந்த பலமான தலைவர் மோடியே என, அவர்கள் நம்புகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஏப்-201315:33:24 IST Report Abuse
Pugazh V பி ஜ பி ஒரு நாளும் பெரும்பான்மை இடங்களில் வென்ற கட்சியாக இருக்கப் போவதில்லை. ஆட்சி அமைக்க 272 எம் பி க்களின் ஆதரவு தேவை. பி ஜே பி தனியாக ஒரு 120 இடங்களில் ஜெயிக்கலாம். அவ்வளவு தான். காங்கிரஸ் எத்தனையோ ஜெயிக்கட்டும் , அந்தப் பிரச்னைக்கு அப்புறம் வருவோம். ஆனால் அதற்குப் பிறகு பி ஜே பி யால் எத்தனைக் கட்சிகளை ஒருங்கிணைத்து, அவர்களின் டிமாண்டுகளை கண்டிஷன்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, நிறை வெற்றி, அப்புறம் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க முடியும்? 4 ரயில்வே மந்திரி வைத்துக் கொள்ள முடியுமா அல்லது 3 நிதி மந்திரி வைத்துக் கொள்ள முடியுமா? தகவல் தொடர்புக்கு 5 பேரை வைத்துக் கொள்ள முடியுமா? இதெல்லாம் யோசிக்க வேண்டாமா? சும்மா, மோடி மோடி என்று ஒரு கும்பல் கத்துகிராது. மோடிக்கு அவரது கட்சியிலேயே ஒரு மனதான சப்போர்ட் இல்லை. அவரது சட்ட மன்றத் தொகுதியிலேயே 42% அவருக்கு எதிராக வாக்களித்தார்கள். என்ன அடிப்படையில் மோடி மோடி என்று பிதற்றுகிறார்கள்? கனமான சூட் கேஸ் கொடுத்துவிட்டாரோ? ப்ராக்டிகலாக மோடி பற்றி சொன்னால் வாசகர் பார்வைக்கு வருமா?
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
22-ஏப்-201314:20:13 IST Report Abuse
ANBE VAA J.P. ஆமாம் அப்பறம் அப்படி கட்டினா உங்களுக்குள்ள .,உங்க கூட்டணி கட்சிகளுக்குள்ள அபச்சாரமா ஆகிறது என்ன பண்ண எங்குட்டு போனாலும் சிக்கல் //
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
22-ஏப்-201314:19:10 IST Report Abuse
v j antony வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கரஸ் பிஜேபி மற்றும் 3 வது அணி பிரதமர் யார் என்பதை அறிவித்து போட்டியிட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Balaji Natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201311:51:49 IST Report Abuse
Balaji Natarajan அட விடுங்க ...... தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு .....அதுக்குள்ள டெல்லி ஐ வைத்து காங். டப்பா டான்ஸ் ஆடிடும் .......... காங். க்கு பிரதமர் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்க பட்டு விட்டதா ? இல்லை இப்பவும் "நான் அவனில்லை " என்கிற நபர் தானா ?
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
22-ஏப்-201311:35:43 IST Report Abuse
Sundeli Siththar இஸ்லாமியர்கள் வசிக்கும் குஜராத் தொகுதிகளில் பாஜக வெல்வதன் மூலம், மோடி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்பவர் என்பது விளங்கும். அதை கவனிக்க, திமுக, காங்கிரஸ், ஜனதாதளம் போன்றவை மறுப்பதற்கு அவர்களுக்கு கிடைக்கும் வசதிவாய்ப்புக்கள் பறிபோகும் என்ற பயமே காரணம்...
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
22-ஏப்-201311:03:44 IST Report Abuse
mirudan மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து அதற்க்கான நடவடிக்கைளை மேற்கொண்டால் அடுத்து மெஜாரிட்டி பலத்துடன் மோடி பிரதமராகலாம்.
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
22-ஏப்-201311:00:57 IST Report Abuse
Ambaiyaar@raja இப்படி நீங்கள் சொல்லி கொண்டு இருந்தால் அவளவுதான் யானை படுத்துகிசு அப்படி என்று சொல்லி சிவசேனா கட்சி, நிதிஷ், அகாலி தளம், போன்ற எலிகள் எல்லாம் நல்ல ஏறி விளையாடும் அவ்வளவுதான். பிஜேபி யை பார்த்தால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி போல் தெரியவில்லையே பிறகு எப்படி நீங்கள் பிரதமர் அறிவித்து ஆட்சிய பிடித்து நாட்டு நடப்பு பட பாடலின் படி இப்போது ரொம்ப வீக்கா பிஜேபி இருக்குது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201309:27:31 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆண்டவனே ஒரே ஒரு கட்சிக்கு பெரும்பான்மையை கொடுத்து நேர்மையான மக்களுக்கு சேவை செய்யும் நபர்களுக்கு சந்தர்பத்தை கொடுத்து பாமர மக்களின் வயிற்றில் பாலை எப்பொழுது வார்ப்பாய் ,
Rate this:
Share this comment
Cancel
kochadaiyan - ,இந்தியா
22-ஏப்-201309:22:19 IST Report Abuse
kochadaiyan இது மோடிக்கும் மோடியை தூக்கி பிடிக்கும் மீடியகளுக்கும் புரிய வில்லையே. சில கோமாளிகள் நிதிஷை கழட்டி விடு தூக்கி எறி, இனி அவர் வேண்டாம் நாமே பார்த்து கொள்வோம், என்றெல்லாம் பிதற்றினார்கள். இப்போதும் அதை செய்து கொண்டு தான் இருகிறார்கள் நிலவரம் புரியாமல். அதுவேற விஷயம். இப்போது புரிந்திருக்கும் பாஜகவின் உண்மையான நிலைமை. பா.ஜ.,வில், பிரதமர் பதவிக்கான போட்டியில் யாரும் இல்லை அதே சமயத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி உடனான பிரச்னைகள், சுமூகமாக பேசித் தீர்க்கப்படும் என்றால் பார்த்து கொள்ளுங்கள் எப்படி எல்லாம் உண்மையில் பாஜக அடக்கி வாசிகிறது என்று. விரல் விட்டு எண்ணக்கூடிய மீடியகளை கையில் வளைத்து போட்டு ஆதிகம் செலுத்தும் சில கோமாளிகள் மட்டும் தான் இந்தியாவையே குஜராத்தாக கருதி கனவு காணுகிறார்கள் புகழ்த்து தள்ளிகொண்டிருகிரார்கள் விவரம் புரியாமல். ஒரு தகுதி உடையவர் பிரதமர் வேட்பாளர் என்றால் ஏன் பாஜக அறிவிக்க சொந்த கட்சியே தயங்கவேண்டும் ?? சிந்திக்க வேண்டாமா. சற்றும் தகுதி இல்லாலத குற்றம் சாட்டப்பட்டவரை அவரு வல்லவரு நல்லவரு என்று சும்மா ஏத்தி விட்டால் நாடு தாங்குமா ??
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201309:10:33 IST Report Abuse
Swaminathan Nath பிஜேபி வந்தால் இந்தியாவிற்கு நல்லது, இந்த தீவிரவாதம் பேசும் மதவாதிகளை அடக்க முடியும், ... மக்கள் சிந்தித்து வாக்கு அளிக்கவேண்டும்,.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை