தூக்கில் போடணும்: மாமியார் ஆவேசம்| Dinamalar

தூக்கில் போடணும்: மாமியார் ஆவேசம்

Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

முசாபர் நகர்:"ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மனோஜ்குமாரை தூக்கில் போட வேண்டும்' என, அவனின் மாமியாரும், "கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனைவியும் வலியுறுத்தியுள்ளனர்.


டில்லியில், ஐந்து வயது சிறுமியை, நான்கு நாட்களாக அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, கொல்ல நினைத்த, பீகாரைச் சேர்ந்த கொடூரன் மனோஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளான்.பீகாரின் முசாபர் நகரில் வசிக்கும் அவனின் மாமியார் நிர்மலா தேவி நேற்று கூறும் போது, ""மனோஜ்குமார் தான், அந்தக் கொடுமையை செய்தான் என்பது ஊர்ஜிதமாகத் தெரிந்தால், அவனை தூக்கில் போட்டு கொல்ல வேண்டும்,'' என கூறினார்.


ஓராண்டுக்கு முன், நிர்மலா தேவியின் மகள், அர்ச்சனா தேவியை காதலித்து திருமணம் செய்த மனோஜ் குமார் குறித்து, அவன் மனைவி கூறும் போது, ""என் கணவர் தான் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது கண்டறியப்பட்டால், அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்,'' என்றார்.கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனோஜ்குமார், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான்; மே மாதம், 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
22-ஏப்-201307:35:37 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி ஆனால் மனிதகழிவு உரிமை வாரியத்திற்கு அரசு பயபடுகிரதே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை