பெங்களூரு குண்டு வெடிப்பு கேரளாவை சேர்ந்த இருவர் கைது| Dinamalar

பெங்களூரு குண்டு வெடிப்பு கேரளாவை சேர்ந்த இருவர் கைது

Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆலப்புழா:பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில், குண்டு வைக்கப்பட்ட வாகனம் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த இருவரை, தமிழக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


பெங்களூருவில், கடந்த வாரம், பா.ஜ., அலுவலகம் அருகில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வுப் பிரிவினருடன், தமிழகம் மற்றும் பெங்களூரு போலீசாரும் இணைந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.வெடிகுண்டு வைத்ததாக கூறப்படும், இருŒக்கர வாகனம், சென்னை, மீனம்பாக்கம் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிந்ததால், சென்னையில் விசாரணை நடத்தினர். புதுப் பெருங்களத்துரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வாகனம் என்பது தெரிந்தது.


அவர், வாகனத்தை ஏற்கனவே விற்பனை செய்துவிட்டதால், வாகனத்தை விற்பனை செய்து கொடுத்த, வேலூரைச் சேர்ந்த முருகன், அன்வர் பாஷா இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அந்த வாகனத்தை அவர்கள் இருவரும், வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.வாகன எண் உள்ளிட்டவற்றில் குழப்பங்கள் நிலவியதால், தமிழக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தலைமையில், போலீஸ் குழுவினர் கடந்த இரு தினங்களுக்கு முன், பெங்களூரு சென்று, அங்குள்ள போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்தனர்.


இதன் தொடர்ச்சியாக, வாகன புரோக்கர்கள். முருகன், பாஷா இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த இருவருக்கும் இதில் தொடர்பிருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து, தமிழக போலீஸ் குழுவினர், கேரளா மாநிலம், ஆலப்புழாவுக்கு சென்று, வாகனத்தை வாங்கி, பெங்களூருவுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்பட்ட, இருவரை கைது செய்து சென்னைக்கு நேற்று அழைத்து வந்தனர்.சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து, புரோக்கர்கள் மற்றும் ஆலப்புழாவில் கைது செய்யப்பட்டவர்களிடம், போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
22-ஏப்-201314:24:51 IST Report Abuse
K.Sugavanam சுத்தி சுத்தி எல்லாம் கேரளாவுகுள்ளேயே நடக்குதே..
Rate this:
Share this comment
Karthi - Kerala,இந்தியா
23-ஏப்-201309:37:25 IST Report Abuse
Karthiவட கேரளா இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை