TN government not take steps to reduce water shortage: Karunanidhi | குடிநீர் பஞ்சத்தை முன்கூட்டியே தடுக்க அரசு தவறிவிட்டது: கருணாநிதி | Dinamalar
Advertisement
குடிநீர் பஞ்சத்தை முன்கூட்டியே தடுக்க அரசு தவறிவிட்டது: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : ""தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதைப் பற்றி, முன்கூட்டியே கணித்து, வரும்முன் காத்திட வேண்டிய அ.தி.மு.க., அரசு, தண்ணீர் பஞ்சம் வருவதற்கு முன் காக்க தவறிவிட்டது'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகம் முழுவதும், குடிநீர் பஞ்சம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., அரசு, குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், குடிநீர் திட்டங்களை, 110வது விதியின் கீழ் அறிவிப்பதிலேயே, காலத்தைச் செலுத்தி வருகிறது.நெம்மேலியில், கடல் நீரைக் குடிநீராக்க, 1,000 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் ஒன்றை, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருக்கிறார். வெறும் காகித அறிவிப்பு, தமிழ் மக்களின் தண்ணீர் தாகத்தைத் தணித்திடுமா?

பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டிருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது. மேட்டூர் அணையும் வறண்டுவிட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், கடும் வறட்சியில் சிக்கி தவித்து வருகின்றன.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கிணறுகள் மற்றும் போர்வெல்களிலே இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து, சென்னை நகரிலே, தனியார் லாரி உரிமையாளர்கள், பெரிய ஓட்டல்களுக்கெல்லாம் விற்பனை செய்து வருகின்றனர்.தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதைப் பற்றி முன்கூட்டியே கணித்து, வரும்முன் காத்திட வேண்டிய அ.தி.மு.க., அரசு, தண்ணீர் பஞ்சம் வருவதற்கு முன் காத்திடத் தவறிவிட்டது.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (135)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201300:51:30 IST Report Abuse
Matt P தண்ணீர் பஞ்சத்தையும் தீர்க்க தவறி விட்டது ....மின் பஞ்சத்தையும் தீர்க்க தவறி விட்டது. அரசும் அதிகாரிகளும் அமைச்சர்களும்.........நாட்டில் மக்களை காக்க வேண்டிய அரசுகளே ...அமைச்சர்களே .....கொள்ளையடிச்சா எங்கே நாட்டில் மழை பெய்யும்..?....சில வூர்களில் போலி கொடும்பாவிகளை கட்டி வூர் முழுக்க இழுத்து மார்படித்து ,,,மேளம் அடித்து ....இறைவனை வேண்டி கொள்வார்கள் ....பாவி மகன் போய்விட்டான் இறைவா பஞ்சங்களை தீர்த்து விடு என்று....உண்மை கொடும்பாவிகள் அழிந்தால் மாதம் மும்மாரி பொழிந்து எல்லா பஞ்சங்களும் விலகலாம்,......இலக்கியவாதி ...சமூக சேவகன் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று .......வாழும் வள்ளுவனுக்கு தெரியாததா?
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
22-ஏப்-201321:23:26 IST Report Abuse
Raju Rangaraj இந்த பால்கனி பாவை ஆட்சியில் வெய்யில் கூட அதிகமாக அடிக்கிறது. மழையே காணோம். இதற்கெல்லாம் அரசு முன் கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். பே னும் மிக்சியும் கிரைண்டரும் தருவதைவிட குடும்பத்திற்கு ஐந்து குடை என்று கொடுத்திருக்கலாம். வெயிலுக்கும் மழைக்கும் அதுவே சரியாகும். அம்மையார் கொஞ்சம் இதை பற்றி ஆலோசிப்பது நல்லது. இப்படி ஒரு அறிக்கை கலை ஞரிடமிருந்து நாளை வருமா ?ஆவலோடு எதிர் பார்க்கிறோம்
Rate this:
8 members
0 members
5 members
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201320:40:43 IST Report Abuse
மதுரை விருமாண்டி எந்த அரசுங்கண்ணா?
Rate this:
1 members
0 members
28 members
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
22-ஏப்-201318:32:33 IST Report Abuse
T.C.MAHENDRAN ஏதோ தாத்தா ஆட்சியில் மாதம் மழை மும்மாரி பொழிந்து, முப்போகம் விளைந்து மக்கள் எதுவுமே கஷ்டமில்லாமல் வாழ்த்து போலவும், இந்த ஆட்சியில் தான் மக்கள் எல்லா கஷ்டங்களையும் அனுபவிப்பது போல கருத்து சொல்ல வந்துட்டாரு .
Rate this:
14 members
0 members
50 members
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
22-ஏப்-201318:26:24 IST Report Abuse
T.C.MAHENDRAN ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம், ஆனால் இந்த ஓநாய் அழுவது எதற்கு என்று மக்களுக்கு நன்றாக தெரியும்
Rate this:
45 members
1 members
29 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஏப்-201316:34:17 IST Report Abuse
Nallavan Nallavan "ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகளுக்கான சாதனைப் பணிகளை நிறைவேற்றி விட்டோம்" என்று ஸ்டாலின் ஏற்கனவே திருவாய் மலர்ந்தருளி விட்டாரே இன்னுமா தமிழ் நாட்டுல பிரச்னை இருக்கு?
Rate this:
45 members
0 members
70 members
Share this comment
Cancel
Gunaseelan Subramanian - Brisbane,ஆஸ்திரேலியா
22-ஏப்-201315:02:39 IST Report Abuse
Gunaseelan Subramanian அய்யா, நீங்க 2பேரும் மாறி மாறி, ஏரி, குளம் குட்டை எல்லாத்தையும், அரசு அலுவலகமாகும், நீதி மன்றமாகவும், பேருந்து நிருத்தமாகவும், விளையாட்டு கூடமாகவும் மாற்றி கட்டி கல்லா கட்டியபோது யோசிச்சிருக்க வேண்டியது.
Rate this:
7 members
28 members
59 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22-ஏப்-201316:59:59 IST Report Abuse
சு கனகராஜ் மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் என்று நீலி கண்ணீர் வடிக்கிறார் கருணா...
Rate this:
62 members
0 members
3 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22-ஏப்-201317:01:28 IST Report Abuse
சு கனகராஜ் பிள்ளைகளை நினைத்து ரத்த கண்ணீரும் ஆட்சியில் இல்லாததால் கட்சிகாரகளுக்காக சோக கண்ணீரும் தமிழக மக்களுக்காக போலி முதலை கண்ணீரும் வடித்து வருகிறார் கருணா...
Rate this:
13 members
0 members
2 members
Share this comment
Cancel
Jasmine Meena - hyderabad,இந்தியா
22-ஏப்-201314:38:46 IST Report Abuse
Jasmine Meena கலைஞர் அவர்கள் ஆட்சி புரிந்தால் தண்ணீர் பிரச்னை வராது இது நிஜம், ஆயிரம் பிறை கண்ட மகான் எங்கள் தமிழின தலைவர்
Rate this:
147 members
2 members
182 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22-ஏப்-201317:04:29 IST Report Abuse
சு கனகராஜ் இப்படி எத்தனை பேருமா கிளம்பிருக்கீங்க ?...
Rate this:
24 members
0 members
3 members
Share this comment
Ramakrishnan Mutharaiyar - try,இந்தியா
22-ஏப்-201317:54:07 IST Report Abuse
Ramakrishnan Mutharaiyarபகுத்தறிவாதிகளுக்கு ஆயிரம் பிறையும் ஒன்றுதான்.... ஒரு பிறையும் ஒன்றுதான்......
Rate this:
20 members
0 members
3 members
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
22-ஏப்-201318:42:39 IST Report Abuse
Sundeli Siththarஇறைவன் எப்பொழுதும் துன்பங்களை ஒரே நேரத்தில் தருவதில்லை. மக்களுக்கு துன்பம் வந்தால் எந்த அரசு நிவர்த்திக்குமோ, அந்த நேரத்திலே துன்பங்களை தருவார். கருணா ஆட்சி என்பதே மக்களுக்கு பெருந்துன்பம் என்பதால் தண்ணீர் பிரச்சினை வராது போலும்......
Rate this:
9 members
0 members
3 members
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
22-ஏப்-201314:37:55 IST Report Abuse
G.Prabakaran கேள்வி கேட்பவரை தான் நாம் எதிர்க்கட்சி ஆக்கி விட்டோமே இன்னமும் இவர் காலத்தில் செய்யவில்லை என இப்போது கூவுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் செய்யவில்லை என்பது தான் கேள்வி.
Rate this:
25 members
1 members
117 members
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
22-ஏப்-201313:19:33 IST Report Abuse
Pasupathi Subbian இப்படி புலம்புவதை நிறுத்திவிட்டு தங்களின் அதிபுதிசாலிதனத்தை உபயோகபடுத்தி , இப்போவாவது ஒரு நல்ல யோசனையை கூறினால் மக்கள் உங்களுக்கு நல்லறிவு இருப்பதை ஒத்துகொள்வார்கள் .
Rate this:
56 members
27 members
93 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22-ஏப்-201317:05:42 IST Report Abuse
சு கனகராஜ் அவருக்கு புலம்ப மட்டுமே தெரியும். யோசனை தெரிந்து இருந்தால் அவரது ஆட்சியிலேயே செய்திருப்பாரே...
Rate this:
23 members
1 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்