Sri Lanka guilty of major human rights violations in 2012: US report | அச்சுறுத்தி பணம் பறிக்கும் தேவானந்தா கட்சி : அமெரிக்க வெளியுறவுத்துறை புகார்| Dinamalar

அச்சுறுத்தி பணம் பறிக்கும் தேவானந்தா கட்சி : அமெரிக்க வெளியுறவுத்துறை புகார்

Added : ஏப் 22, 2013 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Sri Lanka guilty of major human rights violations in 2012: US report

கொழும்பு : சட்ட விரோத கொலைகள், ஆட்கள் காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல்கள், கடந்த ஆண்டு இலங்கையில் நடந்ததாக, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து கடந்த ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அறிக்கையில் கூறியுள்ளதாவது:இலங்கையில் சமூக ஆர்வலர்கள், தொண்டு செய்பவர்கள் மீது விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அரசுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் படி பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.கடந்த ஆண்டில், அரசு படைகளால், சட்ட விரோத கொலைகளும், ஆட்கடத்தலும் நடந்துள்ளன. மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டுமே, அரசால் விசாரிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் விசாரணை நடைபெறவில்லை.

இலங்கை அரசுடன் கூட்டணி வைத்துள்ள, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, யாழ்பாண பகுதியில், மக்களை மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல், ஊழல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க, இலங்கை அரசு தவறி விட்டது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்ற குற்றச்சாட்டை கடந்த வாரம், பிரிட்டிஷ் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanjaithamilar - Qatar,இந்தியா
23-ஏப்-201311:12:47 IST Report Abuse
Thanjaithamilar மறவன்: நீங்கள் சொல்வதை பார்த்தால் "சுபாஸ் சந்திரபோசை,வாஞ்சி நாதனை, பகத் சிங்கை" எல்லாம் தீவிரவாதிகள் போல பேசுகிறீர்கள். சுபாஸ் சந்திரபோசுக்கு "உலக நாடுகளில்" அதரவு கிடைத்ததுபோல "விடுதலை புலிகளுக்கு" ஏன் ஆதரவு கிடைக்க வில்லை என்பதை புரிந்து கொண்டால் சரி.
Rate this:
Share this comment
Cancel
R.Sappuramanian - Chennai,இந்தியா
22-ஏப்-201311:42:09 IST Report Abuse
R.Sappuramanian உரலுக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல ஈழத்தமிழர்களுக்கு சிங்கள்வனும், சோரம் போன ஒட்டுக்குழுக்களுமே எமன்.
Rate this:
Share this comment
Cancel
selva - salem  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201311:42:06 IST Report Abuse
selva if u dont take sword u cant live in srilanka stop blamming about ltte.tamil nadu guys cant live single day in there life.
Rate this:
Share this comment
Cancel
selva - salem  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201311:39:55 IST Report Abuse
selva words cant change anything actions only need hope after parliment election indian government dont betroy again tamil people.
Rate this:
Share this comment
Cancel
Thanjaithamilar - Qatar,இந்தியா
22-ஏப்-201311:18:04 IST Report Abuse
Thanjaithamilar திரு சுப்ரமணி அவர்கள் தெளிவாகத்தான் சொல்கிறார். வெளி மாநிலத்தவர் தமிழகத்தில் நுழைந்து, தமிழகத்தை இரண்டாக பிரித்து ஒன்று பழைய தமிழர்களுக்கு, மற்றொண்டு எங்களுக்கு என்று சொன்னால் எப்படியோ அப்படிதான் இலங்கையும். "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரந்தான் என்பது போல" அன்று இலங்கை தமிழர்கள் விடுதலை புலிகளின் அடாவடிதனதால்தான் பல தவிரவாதி குழுக்களாக பிரிந்தனர். "எந்த தீவிரவாதி" பெரியவன் என்ற சண்டையில் பல குழுக்கள் பிரபாகரனால் கொல்லப்பட்டனர். விடுதலை புலி தலைவனாக இருந்து கொண்டு அவரால் கொல்லப்பட்ட தமிழர்கள் எத்துனை பேர். சிட்னியில் இருக்கும் "சாணி" க்கு தெரியாதா? இன்னமும் இலங்கையில் திரும்பவும் "விடுதலைப்புலிகள்" தலை எடுத்து விடுவார்களோ என்ற அச்சம் உலக நாடுகளுக்கு உண்டு. ஒரு முறை "உலக வர்த்தக மையம்" தகர்த்தபின் எப்படி "தாலிபான்" களுக்கு அவர்களின் மேல் அடக்கு முறை கையாள பட்டதோ, அப்போது உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கை பார்த்தது. அரபு நாடுகளும் இதற்கு மறுப்பு தெரிவிக்க வில்லை. ஏன்? தீவிரவாதத்தின் கொடுமை அப்படி. இந்த ஊரிலும் இலங்கை தமிழ் பத்திரிக்கைகள் வருகிறது. அந்த நாளேடுகளும் அப்படி ஒன்றும் இலங்கையில் இன்று மோசமான சூழ்நிலை இருப்பது போல சொல்வதில்லை. ஆனால் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்று வாழும் தமிழர்களுக்கு "தமிழீழம்" என்ற கணுவு இன்றும் உண்டு. அதனால் தமிழகத்தில் உள்ள தமிழர்களிடம் "விடுதலைப்புலிகள்" செய்த தவறுகளை மறைத்து தங்களுக்கு அதரவு திரட்ட பார்கின்றனர். தமிழக மக்கள் நிச்சயம் ஏமாற கூடாது.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22-ஏப்-201310:32:48 IST Report Abuse
kumaresan.m " ஏன் இது போன்ற ஈன பிழைப்பு ? இரத்தம் குடித்த பிறகும் இந்த ஓநாய்களுக்கு வெறி அடங்கவில்லை ' இறைவன் ஒருவன் இருக்கிறான் மிக விரைவில் அடக்கப்படுவார்கள் "
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
22-ஏப்-201310:17:32 IST Report Abuse
K Sanckar துரோகிகள் எல்லா நாட்டிலும் உள்ளார்கள். இலங்கையில் என்ன, தமிழ் நாட்டில் இல்லையா? அமெரிக்கா தமிழ் நாட்டுக்கு வந்து இங்கு நடப்பதை பார்த்து கட்டுரை எழுதட்டும். பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இலங்கையின் பெயரால் இங்கே துரோக வேலைகள் செய்கின்றன. பணம் புரட்டுகின்றன.
Rate this:
Share this comment
Cancel
Haris David - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201309:47:28 IST Report Abuse
Haris David சுப்ரமணியம் ஒரு காங்கிரஸ் அல்லக்கை. காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது கனவிலும் நடக்காது. மோடிதான் அடுத்த பிரதமர்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
22-ஏப்-201309:16:59 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இந்த குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றே நினைக்கிறேன்..ENNUDAM பணியாற்றும் யாழ்ப்பாண நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன்."நாங்கள் அவருடைய கட்சிக்கு ஓட்டு போடுவதில்லை...இது அவருக்கும் தெரியும்..ஆனாலும் நாங்கள் எதாவது உதவி வேண்டி சென்றால் அவர் செய்யாமல் இருந்ததே இல்லை என்று"..ஈழ தமிழ் தலைவர்களிலேயே அதிக முறை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டும் தப்பித்த ஒருவர் இவராகத்தான் இருக்க முடியும்.."தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்..கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் "...என்ற mgr படப்பாடலுக்கு சரியான உதாரணம் இவர்..
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
22-ஏப்-201307:42:05 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி தமிழ்நாட்டில் ஒரு அரசியல்வாதி உங்களை நாராயண சாமி யுடன் இணைத்து பேசி இருக்கிறார். அவர்மேல் மான நஷ்ட வழக்கு தொடரும் எண்ணம் எதுவும் உங்களுக்கு இருக்கா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை