ஆமை வேகத்தில் விழுப்புரம் - திண்டுக்கல் 2வது ரயில்பாதை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : தென்மாவட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளதால், தினசரி, "ஹவுஸ் புல்'லாகவே இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களுக்கு அதிக ரயில்களை இயக்க, இரண்டாவது பாதை மிகவும் முக்கியம். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால், அவசியமான இந்த இரண்டாவது பாதைப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.செங்கல்பட்டு - விழுப்புரம்:


இரண்டாவது அகல ரயில் பாதை பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு உள்ளதால், தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. வரும் ஜூன் மாதத்திற்குள் பணி முடிக்கப்படும் என்கின்றனர். விழுப்புரம் - திண்டுக்கல் இடையே இரண்டாவது அகல ரயில் பாதை, 1,280.83 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு, இவ்வாண்டு பட்ஜெட்டில், 227.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இன்னும், 994.63 கோடி ரூபாய் தேவை.நான்கு ஆண்டுகள்:


விழுப்புரம் - திண்டுக்கல் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ரயில்வே பட்ஜெட்டில் ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் ஒதுக்கினாலும். இத்திட்டப் பணிகள் முழுவதுமாக முடிக்க, இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் செலவினங்கள் அதிகரிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்.தமிழக அரசு மனது வைத்தால் முடியும்:


மாநிலங்களில் புதிய ரயில் பாதை அமைக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசு, 50 சதவீதம் நிதி ஒதுக்கீடு வழங்கினால், மத்திய ரயில்வே அமைச்சகம் மூலம், 50 சதவீதம் நிதி ஒதுக்கப்படும் எனவும், திட்ட கமிஷன் அனுமதி வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வசதியில், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், 12 புதிய திட்டங்களுக்கு தங்கள் அரசு மூலம், 50 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளதால், ரயில்வே போர்டு ஒப்புதல் அளித்து உள்ளது.தமிழகத்தில், போக்குவரத்து மேம்பாடு அடைவதற்கு விழுப்புரம் - மதுரை இரண்டாவது ரயில் பாதை மிகவும் முக்கியம். தமிழக அரசு இத்திட்டத்திற்கு, 50 சதவீத நிதி ஒதுக்கீடு செய்தால், பணிகள் விரைவாக முடியும்.பயணிகள் விரும்புவது என்ன:


பேருந்து பயணம் குறித்து தென்மாவட்ட மக்கள் கூறியதாவது:போதிய பராமரிப்பு இல்லாததாலும், கால தாமதமான பயணத்தாலும் அரசு பேருந்துகளில் பயணிப்பதை தவிர்த்து வருகிறோம். பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு. ரயிலில் படுத்துக்கொண்டு பயணம் செய்யலாம். கழிவறை வசதி உள்ளது.ஆம்னி பேருந்துகளில் படுத்துக்கொண்டு பயணம் செய்யும் வசதி இருந்தாலும், போதுமான காற்றோட்ட வசதி இருக்காது. முதியோர்களுக்கு இவ்வசதி முழுவதும் ஏற்றதாக இல்லை. கட்டணமும் அதிகம். கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட விபத்துகளை பொறுத்தவரை, ரயில்களை காட்டிலும், பேருந்து பயணத்தில் ஏற்பட்ட விபத்துகளே அதிகமாக உள்ளன. ஆகையால், பேருந்து பயணத்தை விட ரயில் பயணம் பாதுகாப்பானது, காலதாமதம் ஏற்படுவதும் குறைவு தான். இதனால், ரயில் பயணம் மக்களிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொலை தூரம் செல்லும் பயணிகளின் நலன் கருதி, தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்கவேண்டியது அவசியம். இதற்கு, இரண்டாவது ரயில் பாதை மிக முக்கியம்.நடவடிக்கை தேவை:


திருச்சி, மதுரை உட்பட தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு, சென்னை எழும்பூரிலிருந்து, தினசரி, 18 எக்ஸ்பிரஸ் ரயில்களும், வாரத்தில் இரண்டு நாட்கள் மற்றும் வாராந்திரம் என, எட்டு ரயில்களும் என, மொத்தம், 26 ரயில்கள் இருவழி மார்க்கத்திலும் இயக்கப் படுகின்றன.இவ்வழித்தடத்தில், 18 பெட்டிகளுடன், 10 ரயில்களும், 21 பெட்டிகளுடன் ஏழு ரயில்களும், 23 பெட்டிகளுடன், மூன்று ரயில்களும், 24 பெட்டிகளுடன், ஆறு ரயில்களும் இயக்கப்படுகின்றன.72 ஆயிரம் பயணிகள்:


இந்த ரயில்கள் அனைத்தும் தினசரி, "ஹவுஸ் புல்'லாக உள்ளன. ஒரு ரயிலுக்கு சராசரியாக 1,400 பயணிகள் வரை பயணம் செய்கின்றனர். இந்த ரயில்களில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், அங்கிருந்து சென்னை எழும்பூருக்கும் என, இருவழி மார்க்கத்திலும், 72,800 பேர் வரை பயணம் செய்கின்றனர். ஒரு ரயிலில், 1,400 பேர் பயணம் செய்தால், கிட்டத்தட்ட, 35 பேருந்துகளுக்கு சமம் என கொள்ளலாம்.டீசல் செலவு ரூ 96.96 லட்சம்:


பொதுவாக, ஒரு லிட்டர் டீசலுக்கு, 5 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை இயக்கலாம். இதன் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு, தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பகுதிகளுக்கு சென்று வருவதற்கு, சராசரியாக ஒரு பேருந்திற்கு, 465 லிட்டர் வீதம், 403 பேருந்துகளுக்கு, 1.88 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 51.78 ரூபாயாக இருக்கும் பட்சத்தில், டீசல் செலவாக, 97 லட்சம் ரூபாய் செலவு செய்ய நேரிடுகிறது. ஆண்டிற்கு, 350 கோடி ரூபாய் வரை செலவாகிறது.சுற்றுச்சூழலை காக்க நடவடிக்கை தேவை :


தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் மற்றும் பேருந்துகளுக்கு ஆண்டுக்கு, டீசல் செலவு, 452 கோடி ரூபாய் ஆகிறது. இதில் பெரும்பகுதி வெளிநாட்டு எண்ணெய் கம்பெனிகளுக்கு செல்கிறது. இரட்டை ரயில் பாதை பணி விரைவாக முடிக்கப்பட்டால் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். பஸ் போக்குவரத்துகள் குறைக்கப்படவும், டீசல் சிக்கனம் ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.ஆய்வு நடந்தும் பயனில்லை:


மதுரை - கன்னியாகுமரி இடையே, இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்யப் பட்டும், இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை இந்த திட்டம் மேற்கொள்ளப்படவில்லை.இந்த முக்கிய திட்டத்திற்கே இந்நிலை என்றால், மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது போல, குறைந்த நிதி ஒதுக்கீடு, இப்பணி நிறைவு பெறுவதற்கான அறிகுறி தென்படவில்லை.மதுரை வரை மின் பாதை எப்போது :


எழும்பூரிலிருந்து மதுரை இடையே மின்மயமாக்கும் திட்டம் இம்மாதத்துடன் முடிந்துவிடும். இதன் பிறகு தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் மின்சார இன்ஜின் மூலம் மதுரை வரை இயக்கப்படும். மதுரை - திருநெல்வேலி மற்றும் வாஞ்சி மணியாச்சி ?-??தூத்துக்குடி இடையே ரயில் பாதை மின் மயமாக்கும் பணி இன்னும், 6 மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும் என, மின்மயமாக்கும் பிரிவு உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.இப்பாதை மின்மயமாக்கப்படுவதால், ரயில்கள் அதிக வேகத்துடன் இயக்கவும், டீசல் சிக்கனம் ஏற்படும் வாய்ப்பு இருந்தாலும், செங்கல்பட்டு - மதுரை வரை மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு ஒரே ரயில் பாதை உள்ளதால், இப்பாதையில், 140 சதவீதம் ரயில் போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது.இத்துடன் சரக்கு ரயில் போக்குவரத்தும் இப்பாதையில் அதிகரித்துள்ளன. இதனால், தண்டவாளங்கள் விரிசல் பாதிப்புகள் இயல்பான தடைகளாகின்றன. இவற்றிற்கு அடிப்படை கட்டமைப்பு சீரமைப்பு செயலுக்கு, ரயில் நிர்வாகம் நிதி ஒதுக்கி முனைப்பு காட்டுமா என்பது இனி தெரியும். அதே சமயம் இரண்டாவது பாதை என்பது சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்தை அதிகரிப்பதுடன் பொருளாதார வளத்தை அதிகரிக்கும்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
22-ஏப்-201315:42:17 IST Report Abuse
Rameeparithi ஏன் காலம் தாள்துகிறார்கள் என்றால், புல்லெட் train விடத்தான் ... அதனால் தான் நம்மூரு அரசியல் வாதிகள் பார்லிமெண்டில் போயும் போகாமலும் உட்காந்து யோசிக்கிறங்கே அப்பு...
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
22-ஏப்-201310:20:29 IST Report Abuse
KMP பொறுப்பற்ற அரசுகள் அரசு அதிகாரிகள் ...
Rate this:
Share this comment
Cancel
rjas - theni,இந்தியா
22-ஏப்-201309:52:50 IST Report Abuse
rjas தேனி அகல ரயில் பாதை திட்டம் எப்போது நிறைவேறும்
Rate this:
Share this comment
Cancel
Raja Jack - Kochi,இந்தியா
22-ஏப்-201307:49:22 IST Report Abuse
Raja Jack இதற்கு ஒரே தீர்வு தமிழ் நாட்டில் இருந்து ஒரு ரயில்வே மந்திரி வேண்டும்
Rate this:
Share this comment
NavaMayam - New Delhi,இந்தியா
22-ஏப்-201312:08:05 IST Report Abuse
NavaMayamஇருக்கிற தண்டவாளமும் காணாமல் போயிடும்.......
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
22-ஏப்-201307:26:07 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி பீகாருக்கு 12000 கோடி சிறப்பு நிதி. தமிழகத்தின் வரட்சி நிவாரண கோரிக்கைக்கு மௌனம். இந்த லட்சணத்தில் கட்டுரையாளர் தமிழகம் மனசு வச்சா முடியும் என்று சொல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Prem - Chennai,இந்தியா
22-ஏப்-201307:13:55 IST Report Abuse
Prem இது எவ்வளவு முக்கியமான ஒரு விஷயம் என்று மாநில அரசுக்கும் தெரியாதா..?...இதனால் எவ்வளவு நன்மைகள் உள்ளது..போடுங்க போடுங்க..எவ்வளவு நாள்தான் போடுறீங்கன்னு பார்ப்போம்..
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
22-ஏப்-201306:11:28 IST Report Abuse
Loganathan செங்கல்பட்டு விழுப்புரம் மீட்டர் கேஜ் அகலப் பாதையாக மாற்றும் திட்டம் மிக மெதுவாக நடக்கிறது.வட இந்தியா வில் சில மாநிலங்களில் பயண சீட்டு வாங்காமல் ரயில்வேக்கு இழப்பு ஏற்படுத்துகின்றனர் இங்கு தமிழகத்தில் இவ்வாறு இழப்பு ஏற்படுவதில்லை.ஆகவே தமிழக திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
22-ஏப்-201305:38:08 IST Report Abuse
villupuram jeevithan ஆமை வேகத்திலாவது நடக்கிறதே? ஆமையிடம் முயல் தோற்றுபோன கதை தெரியாதா?
Rate this:
Share this comment
NavaMayam - New Delhi,இந்தியா
22-ஏப்-201312:09:33 IST Report Abuse
NavaMayamஆனால் குமுதா மெஸ் காரர் சொன்னபடி முயலாமை எப்பவுமே தொத்து போகும்.......
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
22-ஏப்-201302:13:06 IST Report Abuse
பொன்மலை ராஜா கர்நாடகம், பீகார், மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெற்றத் திட்டங்கள் எல்லாம் 50% நிதி ஒதுக்கி அல்ல .. .. அம்மாநிலங்களை சேர்ந்தவர்கள் மந்திரி சபையில் தங்கள் அதிகாரங்களைச் செலுத்திப் பெற்றத் திட்டங்கள் அதிகம் ... தங்கள் மாநிலங்களுக்கு வேலை வாய்ப்பை ஒதுக்கிக் கொண்டதும் வெகு அதிகம் ... நம் மாநிலத்திலிருந்து இரயில்வேத் துறை ராஜாங்க மந்திரிப் பொறுப்பு வகித்தவர்களோ நம் தமிழ் நாட்டை விட்டுவிட்டு அம்மாநிலங்கள் வளம் பெற்றிடத்தான் உதவியுள்ளார்கள் ... வைகோ அவர்கள் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கும் இரயில்வே தொழிலாளர்களுக்கும் பெற்றுத் தந்த திட்டங்கள் அளவிற்குக் கூட மந்திரிகள் இரயில்வேத் திட்டங்களை பெற்றுத் தராததால் தான் இத்தகைய பின்னடைவுகள் ... இவைகளை மனதில் வைத்து வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலை மக்கள் பயன்படுத்தி தமிழ்நாட்டை புறக்கணிக்கின்றவர்களுக்குப் பாடங் கற்பித்து புதியத் திட்டங்களைப் பெற்றிட வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்