சிதம்பரம் பகுதியில் கொலை, கொள்ளை முதல்வரிடம் மா.கம்யூ., எம்.எல்.ஏ., மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் பகுதியில் கொலை, கொள்ளை முதல்வரிடம் மா.கம்யூ., எம்.எல்.ஏ., மனு

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமும், பீதியும் அடைந்துள்ளனர் என மா.கம்யூ., எம்.எல்.ஏ., முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அளித்த மனு:
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து திருட்டு கொலை. கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமும், பீதியும் அடைந்து வருகின்றனர். தொடர் சம்பவம் குறித்து போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
காவல் துறையின் மெத்தனத்தால் சிதம்பரம் பகுதியில் சமூக விரோத செயல்கள் சிதம்பரம் பகுதியில் அதிகரித்து வருகிறது. இது குறித்து நாளிதழ்களில் விரிவான செய்திகள் வெளி யாகியுள்ளது. பரங்கிப்பேட்டை அகரம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் வக்கீல் குமாஸ்தாவாக பணியாற்றிய ராஜா கடந்த 15ம் தேதி கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டுள்ளார்.
இதனால் பரங்கிப்பேட்டை பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் சிதம்பரம் போலீசார் உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை.
முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண் அடைந்த பின்னரும் மற்ற குற்றவாளிகளை கைது செய்யவில்லை. ராஜாவை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்து, இந்த கொலை வழக்கை எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, ஏழை குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை