ரயில் மோதி பலியாகும் நபர் அதிகம்: மூன்று மாதங்களில் 28 பேர் பலி| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை : அதென்னவோ தெரியவில்லை.... ரயில்வே "ஒவர் பிரிட்ஜ்' இருந்தாலும் தண்டவாளத்தை தாண்டி செல்வதை, சிலர் போதையாகவே நினைக்கின்றனர். இந்த போதைதான், வாழ்வில் அவர்கள் இறுதியாக பயணம் செய்யும் பாதையாக மாறி விடுகிறது. போதுமான விழிப்புணர்வும் தடுப்பு நடவடிக்கைகளும் இல்லாததால், கோவை நகரில் ரயில் மோதி பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் போது

கவனக்குறைவுடன் செயல்படுவதால், விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் ரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. கேட் பூட்டப்பட்ட ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதை, பள்ளி மாணவர்கள் பலர் சாதனையாக கருதுகின்றனர். இது போன்ற அலட்சியப் போக்குதான் சமயத்தில் ஆபத்தாக முடிந்து விடுகிறது. கடந்த மூன்று மாதங்களில் ஆண்கள் 23 பேர், பெண்கள் 5 பேர் என, மொத்தம் 28 பேர், ரயில்களில் அடிபட்டு இறந்துள்ளனர். இதில் ஐந்து ஆண் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.
குற்ற வழக்குகள் அதிகரிப்பு:பயணிகளின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜன., 1 முதல் மார்ச் 31 வரை, மொத்தம் 15 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன; அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐந்து லட்சத்து 27 ஆயிரத்து 200 ரூபாய்மீட்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்துக்குட்பட்ட பகுதிகளில், புகைபிடித்தல், மதுஅருந்துதல் உள்ளிட்ட 422 சிறிய அளவிலான குற்றங்கள் நடந்துள்ளன. இதுதவிர, மோட்டார் வாகன சட்ட விதிமீறல்கள் தொடர்பாக 1,076 வழக்குகள் பதிவாகியுள்ளன; 71,950 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ரயில் பயணத்தின் போது, நள்ளிரவு 1.00 முதல் அதிகாலை 3.30 வரைதான் அதிகளவிலான குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து செல்வதை தவிர்த்தல்,

Advertisement

தங்களின் உடமைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துதல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதன் மூலம் மட்டுமே, ரயில்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.

கோவை ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் கூறியதாவது:ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக விழிப்புணர்வுதுண்டு பிரசுரங்கள் வினியோகிப்பதில் துவங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பான பயணத்துக்கு முதலில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை 99625 00500 என்ற மொபைல்போன் எண்ணிலும், அவசர உதவிக்கு 0422-230 0043 என்ற தொலைபேசி எண்ணிலும் பயணிகள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்றினால் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தலாம். குற்றச்சம்பவங்களை தடுப்பதில், போலீசாருக்கு பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
22-ஏப்-201320:36:48 IST Report Abuse
R Bala Sundaram எவ்வளவு சொன்னாலும் திருந்துபவன் தான் திருந்துவான் .பெற்றோர் எவ்வழியோ அவ்வழியே பிள்ளைகளும் .
Rate this:
Share this comment
Cancel
ram, nigeria - Lagos,நைஜீரியா
22-ஏப்-201317:15:45 IST Report Abuse
ram, nigeria Simple logic. Where ever it is possible the access road should be blocked. Only staff room (gate man room ) should have access to railway track from his side of entrance. Road dividers with 3 ft height will stop two wheel drivers to cross . Govt /Railway to sp money. The road stoppers on the railway gate should not have a pipe alone. A tin sheet, which covers the road completely, should be fixed , so that no one go under the rods and cross the track . Gates should not be closed for more than 5 minutes. i have witnessed some places gate is closed for 15 to 20 mins - which should be avoided 100 % . A lower waiting time, will make our brothers and sisters to wait .
Rate this:
Share this comment
Cancel
Abdul Kareem - Doha Qatar,கத்தார்
22-ஏப்-201315:58:40 IST Report Abuse
Abdul Kareem மக்கள் அதிக நடமாடும் இடமாக இருக்கும் பட்சத்தில், (over bridge) அமைத்தல் விலைமதிபற்ற உயர், சேதம் குறைய வைப்பு உள்ளது..
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
22-ஏப்-201311:58:15 IST Report Abuse
NavaMayam லஞ்சத்துக்கும் , கற்பழிப்புக்கும் , மரண தண்டனை அளித்தால் குற்றம் குறையும் என்கிறார்கள் ... அனால் இங்கு மீறினால் மரணம் என்றால் கூட அதை கடைபிடிக்க முடியவில்லை , மரணத்தை தவிர்க்க முடிய வில்லை .... இரண்டுக்குமே முதலில் விழிபுனற்சிதான் முக்கியம் ...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201310:58:13 IST Report Abuse
Srinivasan Kannaiya இக்காலத்தில் இளம் வயது காரர்கள் சட்டத்தை மீறும்பொழுது பெற்றோர்கள் அதை உடனடியாக கண்டிக்கவேண்டும். ஆனால் தற்காலத்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அநியாயத்துக்கு செல்லம் கொடுத்து குட்டிசுவரக்கிவருகின்றர்கள் என்பதுதான் உண்மை. பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கத்தை போதியுங்கள்,சட்டத்தை மீறும் பொழுது நாசுக்காக எடுத்து அதன் பின் விளைவுகளை சொல்லுங்கள். சட்டத்தை மீறுவதையே கடமையாக கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் எப்படிஇருக்கும். விவேகானந்தர் கண்ட கனவை நினைவாக்குங்கள்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22-ஏப்-201308:07:16 IST Report Abuse
kumaresan.m " இது போன்று கடந்து செல்பவர்களை ...எப்படி தவிர்ப்பது? அபராதத்துடன் தண்டனை மற்றும் பள்ளி பாட புத்தகத்தில் இதன் விளைவுகளை எடுத்து கூறலாம் மற்றும் வானொலி தொலைகாட்சியின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் "
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.