chennai district | "தினமலர்' போட்டோ கிராபர்கள் மீது தாக்குதல்கவுன்சிலர் உறவினர் உட்பட மூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"தினமலர்' போட்டோ கிராபர்கள் மீது தாக்குதல்கவுன்சிலர் உறவினர் உட்பட மூன்று பேர் கைது

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:வாகனம் மோதிய பிரச்னையில், அ.தி.மு.க.,வினர் இரு பிரிவாகப் பிரிந்து, சண்டையிட்ட போது, தடுக்கச் சென்ற, "தினமலர்' நாளிதழ் போட்டோகிராபர்கள் மீது, கொலை வெறித் தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
வாக்குவாதம்:சென்னை, சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், 29, கணேஷ், 29; அ.தி.மு.க., கட்சியினர். @நற்று, இவர்கள், தங்கள் காரில், சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றம் அருகில் வந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த, முகமது யாஷித், 21, சாகுல் ஹமீது, 34, ஆகியோருடன், வாகனம் உரசியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், கார்த்திக், கணேஷ் மீது மற்ற இருவரும் தாக்குதல் நடத்தினர். அங்கு வந்த முகமது யாஷித் ஆதரவாளர்கள் மேலும் சிலரும் சேர்ந்து கொண்டு தாக்கினர்.சேப்பாக்கம், அரசினர் தோட்டம் அருகில் நடந்த இந்த சம்பவத்தை, அப்போது, அந்த வழியாகச் சென்ற, "தினமலர்' நாளிதழ் போட்டோகிராபர்களான ரமேஷ், ராஜேஷ் இருவரும் பார்த்தனர்.
தடுக்க முயன்றோர் மீது தாக்குதல்: அவர்கள், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். இதில், ஆத்திரமடைந்த, எதிர் தரப்பினர், @பாட்@டாகிராபர்கள் ரமேஷ் மற்றும் ராஜேஷ் மீது, கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். மேலும், நாங்கள், "அ.தி.மு.க., கவுன்சிலர் ஆட்கள். உங்களைக் கொன்று விடுவோம்' என, மிரட்டல் விடுத்தனர்.
இதில், "தினமலர்' போட்டோகிராபர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் சத்தம் கேட்டு, அருகில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஓடி வந்து, ரமேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, திருவல்லிக்கேணி போலீசில், இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த கார்த்திக் மற்றும் கணேஷ் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
கவுன்சிலர் உறவினர் கைது:புகாரின் பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., கவுன்சிலரின் உறவினரான, முகமது யாஷித், சாகுல் ஹமீது, இவரது சகோதரர் தமிம் அன்சாரி, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.இது தொடர்பாக, முஷ்டாக் அகமது உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பிலும், இந்த தாக்குதல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை