டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறை அரசு பஸ்கள் இயக்குவதில் சிக்கல்| Dinamalar

டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறை அரசு பஸ்கள் இயக்குவதில் சிக்கல்

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அரூர்: அரூர் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில், போதிய டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாததால், பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.அரசு போக்குவரத்து கழகத்தின் அரூர் கிளை பணிமனையில் இருந்து, கிராமபுற பகுதிகளுக்கு, 22 டவுன் பஸ்களும், தர்மபுரி, சேலம், வேலூர், சென்னை, பெங்களூரு, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு, 42 பஸ்களும் இயக்கப்படுகின்றன.இப்பணிமனையில், டிரைவர், கண்டக்டர்கள் உள்பட, 300 பேர், தொழில்நுட்பட பணியாளர்கள், 42 பேர் பணி புரிந்து வருகின்றனர். போதிய அளவில் டிரைவர், கண்டக்டர்கள் இல்லாததால், இவர்கள் தொடர்ச்சியாக, நான்கு நாட்கள் பணியாற்றி வருவதால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.ஆளுங்கட்சி தொழிற் சங்கத்தை சேர்ந்த, ஒருசிலர் பணிக்கு வராமலே சம்பளம் பெற்று செல்கின்றனர். டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், சில நேரங்களில் பஸ்கள் இயக்கப்படாமல், பணிமனையில் நிறுத்தி வைக்கப்படுகிறது.இதே போன்று மாதந்தோறும் புதிய வழித்தடங்களில், பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் போதிய டிரைவர், கண்டக்டர்கள் இல்லாததால், அவ்வழித்தடத்தில், பஸ்கள் திடீர் என நிறுத்தப்படுகிறது.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அரூர் பணிமனைக்கு, டீசல் பிடிக்க செல்லும் பஸ்கள், பயணிகளை பாதி வழியிலே, அரூர் கச்சேரி மேட்டில் இறக்கி விட்டு செல்லும் அவல நிலையுள்ளது.பஸ்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும், பராமரிக்கவும், 65 தொழில்நுட்பட பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது, 42 பேர் மட்டும் பணியில் உள்ளதால், பஸ்களை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.இதனால் கிராமங்கள் மற்றும் மழை கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் பாதி வழியிலே நிற்கும் நிலை தொடர்ந்து வருகிறது. பணிமனையில் போதிய உதிரி பாகங்கள் இல்லாததால், டிரைவர், கண்டக்டர்கள் சொந்த செலவில், சிறு சிறு உதிரி பாகங்களை, வாங்கி பொருத்தி வருகின்றனர்.உயர் அலுவலர்கள் உதிரி பாகங்கள் வாங்கி தராமல், ஒரு பஸ்ஸில் உள்ள உதிரி பாகத்தை கழட்டி பழுதடைந்த, பஸ்களுக்கு மாற்றி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, அரூர் அரசு போக்குவரத்து பணிமனையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், தேவையான உதிரி பாகங்களை வழங்கவும், பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை