E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இறைச்சிக்காக கடத்தப்பட்ட 229 மாடுகள் மீட்புலாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் 16 பேர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
05:03

தாம்பரம்:ஆந்திராவில் இருந்து, கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த, 229 மாடுகளை சமூக ஆர்வலர்கள் மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, இறைச்சிக்காக கேரளாவுக்கு மாடுகள் கடத்துவது நடந்து வருகிறது. சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இந்த கடத்தலை தடுத்து வருவதால், கடத்தல்காரர்கள் சென்னை வழியாக செல்வதை தவிர்த்து, ஆந்திராவில் இருந்து காரனோடை, பெரியபாளையம், திருவள்ளுர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில் வழியாக கேரளாவுக்கு மாடுகளை கடத்துகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, மாற்று பாதை வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மாடுகளை கடத்த உள்ளதாக சமூக ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கால்நடை களுக்கான இந்திய ஆர்வலர்கள் என்ற அமைப்பை சேர்ந்த, 50 இளைஞர்கள், எட்டு கார்களில், தமிழகம் - ஆந்திரா எல்லையில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, எட்டு லாரிகளில் மாடுகள் கொண்டு வரப்பட்டன.
அவற்றை சமூக ஆர்வலர்கள் பின் தொடர்ந்தனர். பெரியபாளையம் வந்ததும், ஐந்து ஆந்திர லாரிகளில் கொண்டு வரப்பட்ட மாடுகள், தமிழக லாரிகளில் மாற்றப்பட்டன.இந்த லாரிகளோடு மொத்தம் எட்டு லாரிகள் நசரத்பேட்டை அருகே வந்ததும், சமூக ஆர்வலர்கள் அவற்றை மடக்கி பிடித்தனர். அந்த லாரிகளில், 37 பசுக்கள், 46 எருமை கன்றுகள், 30 கருவுற்ற மாடுகள் உட்பட, 229 மாடுகள் இருந்தன.
இதையடுத்து, அந்த மாடுகளை மீட்டு, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, எட்டு லாரிகளின் ஓட்டுனர்கள், உதவியாளர்கள் என, மொத்தம் 16 பேரை கைது செய்தனர்.மீட்கப்பட்ட மாடுகளை கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அதன்பின், மாடுகள் திருத்தணியில் உள்ள கோசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
23-ஏப்-201305:05:13 IST Report Abuse
Loganathan கால் நடைகளுக்கு தீவனம் கிடைக்காத காரணத்தால் வறட்சியால் மாடுகளை விற்கின்றனர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Public - Riyadh,சவுதி அரேபியா
22-ஏப்-201312:46:50 IST Report Abuse
Public தற்போது கோசாலைக்கு அடித்தது யோகம்
Rate this:
5 members
0 members
1 members
Share this comment
Cancel
jaga - melbourne  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201308:09:48 IST Report Abuse
jaga what will the driver and cleaner do arrest the seller and buyer who makes money in this
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Public - Riyadh,சவுதி அரேபியா
22-ஏப்-201313:01:32 IST Report Abuse
PublicCorrect the, now the Kosaalai and that 50 voulantiers ...
Rate this:
4 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.