நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்| Dinamalar

நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

Added : ஏப் 22, 2013 | கருத்துகள் (1)
Advertisement

ஓசூர்: ஆள்துளை கிணறுகள் மூலம், 24 மணி நேரமும் ஜெனரேட்டர் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதிக லாபம் பார்த்து வரும், தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தினர், மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஓசூர் நகராட்சி, புறநகர் பகுதியில் வறட்சியால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதம் முன், மாவட்டம் முழுவதும் சிறிது மழை பெய்தது. ஆனால், ஓசூர் நகராட்சி பகுதியில் சுத்தமாக மழை பெய்யவில்லை.மழையில்லாததால், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றது. நகராட்சி ஆள்துளை கிணறுகள் வறண்டு, 20 முதல், 20 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு குடிநீர்வழங்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள், வீடுகளில் அன்றாட உபயோகம், குளிக்க, குடிக்க அனைத்து தேவைகளுக்கும், தனியார் வாட்டர் சர்வீஸ் லாரிகள், டிராக்டர்களிடம் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தினர், நகராட்சி நீர் ஆதாரப்பகுதியில் நகராட்சி ஆள்துளை கிணறுகளுக்கு அருகே ஆள்துளை கிணறு அமைத்து, ஜெனரேட்டர் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தி, 24 மணி நேரமும் தண்ணீரை உறிஞ்சி, பொதுமக்களுக்கு கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்கின்றனர்.500 லிட்டர் தண்ணீர், 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்து தினசரி, பல நூறு லாரி, டிராக்டர்கள் மூலம் வர்த்தரீதியாக நிலத்தடி நீரை விற்பனை செய்கின்றனர். தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இந்த தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதால் தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தினர், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் நீர் ஆதாரப்பகுதியில் ஆள்துளை கிணறுகளை அதிகளவில் அமைத்து வருகின்றனர்.
இதுகுறித்து, 14வது வார்டு தே.மு.தி.க., கவுன்சிலர் ரமேஷ் கூறியதாவது;சூர்யா நகர், ஓம்சாந்தி நகர், கொத்தூர், அரசனட்டி, மத்தம் அக்ரஹாரம், ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ நகரின் பல்வேறு இடங்களில் சந்திராம்பிகை ஏரி, சிறுசிறு நீர்நிலை ஆதாரங்களில் தனியார், 200க்கும் மேற்பட்டஆள்துளை கிணறுகள் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்கின்றனர்.14வது வார்டில் மட்டும், 20க்கும் மேற்பட்ட ஆள்துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றனர். ஒரு டிராக்டர், 600 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து நகராட்சி கமிஷ்னர், சப்-கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்காததால், அவர்கள், சூர்யா நகர், அமிர்தம் நகர், பாரதி நகர் விரிவாக்கம் பகுதி, கிரீன்ஹார்டன் ஆகிய பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஆள்துளை கிணறுகள், 600 அடி முதல், 800 அடிதான் போடப்படுகிறது. தனியார், ஆயிரம் அடிக்கு மேல் போடுவதால், நகராட்சி ஆள்துளை கிணறுகள் வறண்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maven - Chennai  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201317:36:15 IST Report Abuse
maven அது ஆழ்துளைக் கிணறு ங்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை