சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு கர்நாடகா படையெடுக்கும் தமிழக அ.தி.மு.க.,வினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு கர்நாடகா படையெடுக்கும் தமிழக அ.தி.மு.க.,வினர்

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, தமிழக அ.தி.மு.க., அமைச்சர்கள் அம்மாநிலத்தில் பிரச்சார பணியில் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வரும், 5ம் தேதி நடக்கிறது. இதில் தமிழகத்தில் ஆளும் கட்சியான, அ.தி.மு.க., தனித்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள, 224 சட்டசபை தொகுதிகளில் சாந்தி நகர், ராஜாஜி நகர், ஆனூர், நரசிம்மராஜா, கே.ஜி.எஃப்., ஆகிய தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் அறிவித்து போட்டியிடுகிறது.கர்நாடகா மாநில அ.தி.மு.க., செயலாளர் புகழேந்தி காந்தி நகர் தொகுதிலும், மாநில அவைத்தலைவர் முனுசாமி, ராஜாஜி நகர் தொகுதியிலும், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அன்பு, கே.ஜி. எஃப் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.கர்நாடகாவில் அ.தி.மு.க.,வுக்கு, தமிழர்கள் வசிக்கும் மைசூரு, பெங்களூரு மாவட்டங்களில் மட்டும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. தனித்து நின்று வெற்றி பெறும் அளவுக்கு இல்லை. இதனால், அவர்களுக்கு துணையாக, கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கடந்த, ஒரு வாரமாக அம்மாநிலத்தில் முகாமிட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று, தமிழக அ.தி.மு.க., அமைச்சர்கள் முனுசாமி, வைத்திலிங்கம், ராமலிங்கம், முகமது ஜான் ஆகியோர் தலைமையில், நகராட்சி சேர்மன் பாலகிருஷ்ணரெட்டி(ஓசூர்), ஓசூர் ஒன்றிய துணைச் செயலாளர் சர்வேஷ், பொருளாளர் சிட்டிஜெகதீஷ் மற்றும் ஏராளமான அ.தி.மு.க., வினர், கர்நாடகாவில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டயிடும், ஐந்து தொகுதிகளிலும், வாக்கு சேகரித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை