Karnataka elections: BJP kicks off campaign; Sushma Swaraj targets Congress | மோடி பிரதமர் வேட்பாளர் ;முடிவு செய்யவில்லை:சுஷ்மா| Dinamalar

மோடி பிரதமர் வேட்பாளர் ;முடிவு செய்யவில்லை:சுஷ்மா

Updated : ஏப் 22, 2013 | Added : ஏப் 22, 2013 | கருத்துகள் (12)
Advertisement
Karnataka, elections, BJP, kicks off, campaign, Sushma Swaraj, targets, Congress,ஊழல்,பயங்கரவாதத்தை, தடுக்க, காங்., அரசு ,தவறி விட்டது, அனல்பறக்க, சுஷ்மா, பிரசாரம்

புதுடில்லி: மோடி பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை, உரிய நேரத்தில் இது குறித்து கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று இன்று அளித்த பேட்டியில் சுஷ்மா சுவராஜ் கூறினார். தொடர்ந்து அவர் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில்: மத்திய அரசு தனது காலம் முடிப்பதற்குள் தேர்தல் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.நிலக்கரி விவகாரத்தில் மத்திய அரசை தப்பிக்க விட மாட்டோம். மோடியை பொறுத்தவரை அவர் முதல்வர்களில் ஒரு மூத்தவர் என்பதால் அவர் பார்லி., ஆட்சி மன்றக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்வானியை நாங்கள் புறந்தள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரூவில் சுஷ்மா பிரசாரம் : ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றை தடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறி விட்டதாக பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ், கர்நாடக தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி உள்ளார்.


கர்நாடகா சட்டசபை தேர்தல் :

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.,வின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மே 5ம் தேதி நடைபெற உள்ள ஓட்டுப்பதிவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ., அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.,வின் சுஷ்மா சுவராஜ், அத்வானி, மோடி, ராஜ்நாத் சிங் உள்ளி‌ட்ட முக்கிய தலைவர்கள் தங்களின் பிரசாரத்தின் போது காங்கிரஸ் அரசை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.


சுஷ்மா பிரசார பேச்சு :

ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ காங்கிரஸ் அரசு தவறி விட்டது; பெண்கள் பாதுகாப்பிற்கும் மிக குறைந்த அளவே காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது; அதுவும் மக்களின் நாடுதழுவிய போராட்டத்தால் நடைபெற்றது; இத்தகைய அரசின் ஆட்சி கர்நாடகாவில் இருக்க வேண்டுமா என கர்நாடகா வாக்காளர்கள் ஓட்டளிக்கும் முன் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சுஷ்மா தெரிவித்துள்ளார். கர்நாடகா பா.ஜ., அரசியலில் ஏற்பட்ட குழப்பங்களால் கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது கடினம் என கூறப்பட்டு வந்தாலும், பா.ஜ., தலைவர்கள் தங்களின் பிரசாரங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தேர்தல் வாக்குறுதியாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கிலோ அரிசி ரூ.1 க்கு வழங்க உள்ளதாக பா.ஜ., அறிவித்துள்ளது.


பார்லி.,யை முடக்க பா.ஜ., திட்டம் :

பல்வேறு பதற்றமான சூழல்களுக்கு இடையே பார்லிமென்ட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் துவங்க உள்ளது. இதில் 2ஜி ஊழல் விவகாரத்தில் ஜே.பி.சி., அறிக்கை முன்கூட்டியே வெளியான விவகாரம் மற்றும் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனிகுமார் மாற்றியதாக எழுந்த புகார் ஆகியவற்றை கிளப்பி அவையில் அமளியை ஏற்படுத்த பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இல்லை என ஜே.பி.சி., அறிக்கை கூறியிருந்தும், 2ஜி குறித்த அனைத்து முடிவுகளும் பிரதமரின் ஆலோசனையின் ‌பெயரிலேயே எடுக்கப்பட்டதாக முன்னாள் தொலை‌த் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராஜா கூறியிருப்பது குறித்தும் பார்லிமென்டில் இன்று கூச்சல் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201304:48:43 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி ஒருவேளை இப்படி சொல்லி இருப்பாரோ? - மோடி பிரதமர் வேட்பாளர் என்று மோடி முடிவுசெய்யவில்லை ஹை - இது நாலாருக்கே.....
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22-ஏப்-201313:46:28 IST Report Abuse
kumaresan.m " இன்னும் ரெண்டு வார காலத்துக்கு கர்நாடக மக்கள் காதிலிருந்து செங்குருதி வெறியேறும் என்பதில் ஐயமில்லை ".......இவங்க ஆட்சியில் ஊழலை செய்துவிட்டு என்னமா சௌண்டு விடுராங்கையா "
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22-ஏப்-201313:37:19 IST Report Abuse
kumaresan.m " ஊழல் செய்வதில் அணைத்து அரசியல்வாதிகளும் ஒன்று தான் இதில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை ....அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது உங்களுக்கு கிடைக்க வில்லை அவ்வளவு தான் வித்தியாசம் ....எடுத்துகாட்டிற்கு கர்நாடகாவே எடுத்து கொள்ளலாம் ......உங்களை எல்லாம் மேல உட்கார வைத்து விட்டு ....வலியை தாங்கி கொண்டு வேடிக்கை பார்பதென்னவோ ஏமாளி மக்கள் கூட்டம் என்று சொன்னால் மிகையல்ல "
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
22-ஏப்-201312:48:16 IST Report Abuse
vidhuran ஊழல் ரெட்டிகளையும், உலக மகா ஊழல் மன்னன் எடியூரையும் பின்புறத்திலிருந்து இயக்கியவர் இந்த சுஷ்மா தான் என்பது நாடறிந்த உண்மை. ஊழல் ரெட்டிகளின் மற்றும் எடியூறு கொள்ளைப் பணத்தில்தான் அகில இந்திய ஆபாசக் கட்சியே தனது அன்றாட செலவுகளை செய்து வந்தது. இந்தக் கொள்ளையர்களிடமிருந்து சுஷ்மா அம்மாவிற்கு எவ்வளவு கோடிகள் கைமாறியது என்பது போகப் போகத் தான் தெரியம். சுஷ்மா அம்முனி, கர்நாடகாவில் பிஜேபி எவ்வளவு கொள்ளையடித்துள்ளது, எத்தனை ஆபாசப்படங்களை சட்டசபையில் Release பண்ணியிருக்கிறது என்பது போன்றவற்றைப் பற்றிப் பேச வக்கில்லாமல், மத்திய அரசாங்கத்தைப் பற்றி பேசவேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இப்படியெல்லாம் பேசி, தனக்கும் பிரதமர் பதவி வேட்பாளர் மேல் ஆசை உள்ளதை மறைமுகமாகத் தெரிவிக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
22-ஏப்-201312:02:40 IST Report Abuse
பொன்மலை ராஜா ... காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே பாஜக பிரச்சாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் ஈடுபட்டிருக்கின்றாரோ ... ஈழப் படுகொலைகளால் காங்கிரஸ் மீது படிந்திருந்த இரத்தப் பழியைப் போக்கிட இராஜபட்சேக்கு இந்தியாவிற்குள் விருந்தாளி அந்தஸ்தைக் கொடுத்து அழைப்புக் கொடுத்தவராயிற்றே ...
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
22-ஏப்-201311:11:07 IST Report Abuse
Yoga Kannan எது எப்படியோ இந்த தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமா,,,,,கருதலாமல்லவா,,,,,,,,?
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
22-ஏப்-201310:58:32 IST Report Abuse
itashokkumar பாராளுமன்றத்தில் நீங்கள் அமளி துமளியில் ஈடுபடுவதில் இருந்து தவறி விடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
www.tragroups.com - sholinghur,இந்தியா
22-ஏப்-201310:54:26 IST Report Abuse
www.tragroups.com தனி நபரின் செயலால் கட்சி மக்கள் வெறுக்க கூடாது தனி நபர் ராஜியத்த கட்சி விரும்பாது
Rate this:
Share this comment
Cancel
நடுநிலைவாதி - erode,இந்தியா
22-ஏப்-201310:17:37 IST Report Abuse
நடுநிலைவாதி  ஊழல் சுரங்க ரெட்டிக்கு ஆதரவானவர் திருமதி.சுஷ்மா என்பதையும் வாக்காளர்கள் மறக்க மாட்டார்கள். .............நடப்பது மாநில தேர்தல் ............
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
22-ஏப்-201310:01:30 IST Report Abuse
JAY JAY கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசு பற்றி பேசுவதில் இருந்தே பாஜகவின் தோல்வி வெட்ட வெளிச்சமாகிறது..... கர்நாடகாவை பொறுத்த வரை BJP அரசாங்கத்தை விட காங்கிரஸ் அரசாங்கம் பெட்டர் என்று அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்...காரணம் காங்கிரஸ் காலத்தில் தான் IT துறையில் பெங்களுருவை , நம்பர் 1 ஆக மாறியது....ஊழல் கொஞ்சம் குறைவு..... அப்போது உள்ள சுத்தம் / சுகாதாரம் இப்போ மருந்துக்கு கூட பெங்களுருவில் இல்லை... GARDEN CITY என்ற பெயர் போயி குப்பை சிட்டியாகி விட்டது, என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்... காங்கிரஸ் வந்தவுடன் அப்படியே எல்லாவற்றையும் மாத்தி விடுவார்கள் என்று நான் சொன்னால் நான் தான் நம்பர் 1 முட்டாள்... மக்களது VOTING PATTERN அப்படி தான் உள்ளது... மாத்தி மாத்தி குத்தி, கொள்ளையடிக்க பாத்தி போட்டு கொடுப்பது தான் நமது மக்களின் தலையாய சமுதாய கடமை , என்பதை இம்முறையும் நிருபிப்பார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை