Parliament was adjourned following uproar over the Delhi rape case | சிறுமி பலாத்காரம்; 2 ஜி ஊழல் ; நிலக்‌கரி ஊழல் விவகாரம்; பார்லி.,யில் அமளி ஒத்திவைப்பு | Dinamalar
Advertisement
சிறுமி பலாத்காரம்; 2 ஜி ஊழல் ; நிலக்‌கரி ஊழல் விவகாரம்; பார்லி.,யில் அமளி ஒத்திவைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: 2 ஜி ஊழல் , நிலக்‌கரி ஊழல், டில்லி சிறுமி பலாத்காரம், கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் பார்லி. அவைகள் முடங்கின. அமளி காரணமாக அவைகள் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. மு்ன்னதாக பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சபாநாயகர் மீராகுமார் இரங்கலும், கண்டனமும் தெரிவித்தார்.

தி.மு.க.,தனது வேலையை துவக்கியது: 9 ஆண்டுகளாக காங்., கூட்டணியில் இருந்த தி.மு.க, தற்போது வெளியேறிய பின்னர் இன்று துவங்கும் பார்லி., கூட்டத்தில் தனது சுயரூபத்தை காட்டியது. கூட்டணியில் இருந்தும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு காங்., போதிய உதவி செய்யவில்லை என்ற அதிருப்பதியில் இலங்கை தமிழர் விவகாரம் வந்தபோது சரியான காரணத்தை கூறி தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியது.

வெளிப்படையாக எதிர்க்கும்:

கூட்டணியில் இருந்ததால் இலங்கை தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்னையில் மட்டும் தி.மு.க., தனது முழு அதிருப்தியை பதிவு செய்தது. வேறு எந்த பிரச்னையிலும் பெரும் அளவில் தனது எதிர்ப்பை காட்டவில்லை. தற்போது கூட்டணியில் இருந்து விலகி இருப்பதால் காங்கிரசை வெளிப்படையாக எதிர்க்கும் நிலை தி.மு.க.,வுக்கு கிடைத்திருப்பதால், இன்று பல்வேறு பிரச்னைகளை எழுப்பிது.
குறிப்பாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சமீபத்திய ஜே.பி.சி., அறிக்கையில் பிரதமர் மற்றும் சிதம்பரத்திற்கு தொடர்பு இல்லை என கூறியிருப்பதாக வந்த தகவல் தி,மு.க.,வை அதிர்ச்சி அடைய செய்தது. இது ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரை சிக்க வைக்கும் திட்டம் என்று தி.மு.க., கடும் கோபத்தில் ஆழ்ந்து இருக்கிறது.

சாக்கோவை நீக்கு:இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ராஜா கூறுகையில் அனைத்து முடிவுகளும், பிரதமருக்கும், சிதம்பரத்திற்கும் தெரிந்தே தான் எடுத்தேன். என்னிடம் 100 பக்க ஆதாரங்கள் உள்ளன. தேவைப்படும் போது உரிய இடத்தில் பதிவு செய்வேன் என்றார். குறிப்பாக ஜே.பி.சி., முன்பு ஆஜராகி தனது நிலையை விளக்க ராஜா கோரிய போது இதனை ஜே.பி.சி., தலைவர் பி.சி.சாக்கோ மறுத்து விட்டார். இதனால் இது தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்கிறார் ராஜா. கருணாநிதியும் ராஜாவுக்கு முழு அளவில் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் சாக்கோவை இந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என தி.மு.க., வலியுறுத்துகிறது.

எப்போதும் அமளி. துமளியில் சிக்கி தவிக்கும் பார்லி., அமர்வுகள் இன்றும் இதே நிலைதான் நீடித்தன.

5 வயது சிறுமி பலாத்காரம் விவகாரம்: ஜே.பி.சி., அறிக்கை காங்கிரஸ் அறிக்கை என எதிர்கட்சியினர் வர்ணித்துள்ளது. இது போல் நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அறிக்கை திருத்தப்பட்டதாகவும் பிரதமர் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை பா.ஜ., இன்று பார்லி.,யில் எழுப்புகிறது. டில்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் விவகாரத்தில் போலீசாரின் அலட்சியம் மற்றும் குற்றவாளிக்கு தூக்கு என்ற சட்ட திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் , இது போன்று அடுக்கடுக்கான பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபட்டன. ஜே.பி.சி., அறிக்கை லீக்கானது தொடர்பாக இதன் தலைவர் சாக்கோவை நீக்க வேண்டும் என தி.மு.க., இன்று நோட்டீஸ் வழங்கியிருக்கிறது.

பிரதமர் வேண்டுகோள்: பார்லி. துவங்கும் முன்னதாக பார்லி. வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர்: இந்த கூட்டத்தொடரை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.அனைத்து விஷயங்களையும் விவாதிக்க தயாராக இருக்கிறோம்.பேசி முடிவு எடுக்கலாம் . இக்கூட்டத்தில் நிதித்துறை உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறுஅவர் கூறினார்.

2 முறை அவைகள் ஒத்திவைப்பு: பார்லி., இரு அவைகளும் கடும் அமளியில் தத்தளித்தன. தி.மு.க,. பா.ஜ., இடதுசாரிகள், மற்றும் திரிணாமுல் காங்., உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள் ஆளுக்கொரு பிரச்னையை சொல்லி குரல் எழுப்பினர். இதற்கிடையில் உள்துறை அமைச்சர் ஷிண்‌டே சிறுமி விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க முயன்றார். ஆனால் அமளி தொடர்ந்தது. இதனால் அவைகள் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navaneeth - Muscat  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-201301:07:54 IST Report Abuse
navaneeth தி்ருடிய பணத்தை நீதி்மன்றம் தி்ரும்ப பறிக்க வேண்டும் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் இல்லையேல் மக்கள் முட்டாள்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
KKsamy - Jurong,சிங்கப்பூர்
22-ஏப்-201315:19:50 IST Report Abuse
KKsamy இழப்பை ஊழல் என்று பதிவு செய்து கூப்பாடு போட்ட பத்திரிக்கைகள்தான் தற்போது அந்த பணத்தை தரவேண்டும் என்று ஒரு தீர்ப்பு வரும் நாள் தொலைவில் இல்லை. ஒருவரை ஒருநாள் ஏமாற்ற்றல்லாம் பலரை பலநாள் ஏமாற்ற்றல்லாம் ஆனால் எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற்ற முடியாது. ராசா பாராளுமன்றத்தில் முறையிடுவதை விட மூன்று வருடங்களாக கண்ணுக்குள் விளகெண்ணையை விட்டுக்கொண்டு கண்காணிக்கும் உச்ச நீதிமன்றத்திடம் முறையிடலாம்?????
Rate this:
2 members
0 members
7 members
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
22-ஏப்-201315:09:52 IST Report Abuse
Kumaresan P ஒரு வேலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் "தேர்தல்" என்பதால் "தும்பை விட்டுவிட்டு வாழை புடிகிரார்கள் "....ஒரு வருடத்திற்கு ஒருமுறை "தேர்தல்" இருந்தால் "தொடர்ச்சியாக" குரல் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது குறுகிய காலம் என்பதால் ....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
karuvaayan - karimedu,இந்தியா
22-ஏப்-201314:07:35 IST Report Abuse
karuvaayan மீனவர்களும் விவசாயிகளும் வெறும் 2000 பேர் தான் செத்துருக்காங்க. இலங்கை தமிழர்கள் போல லட்சம் பேர் சாகட்டும். அது வரைக்கும் ஈழத்த பத்தி பேசி பேசி தான் அருப்போம் னு சொல்றாங்க
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
22-ஏப்-201313:59:05 IST Report Abuse
விருமாண்டி எங்க போனாலும் ஈழப் பிரச்சனைய பேசி பேசி ஏன்டா நம் தமிழ் நாட்டு மக்களை ஏமாத்துரிங்க ?
Rate this:
12 members
0 members
33 members
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201313:12:23 IST Report Abuse
Venki எல்லாத்தையும் பேசி முடிவெடுக்கும் திறமை படைத்தவர், ஆனால் பார்லிமெண்டில் பேசமாட்டார்/ பேசுவார் மறை முகமாக தேர்தலில் தோற்றவரை ஜெயிக்க வைக்க, தமிழகத்துக்கு தரவேண்டியவற்றை தடுக்க/ ஊழலில் சிக்கிய கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் வலையில் சிக்க வைக்க போன்ற பல விஷயங்களை பேசுவர் ஏன் என்றல் சிறந்த பொருளாதார மேதை ஆயிற்றே
Rate this:
2 members
0 members
10 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
22-ஏப்-201312:37:20 IST Report Abuse
villupuram jeevithan தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, மின்சாரம் போன்றவைகளுக்கு திமுக குரல் கொடுக்குமா?
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel
Meenakshi Sundaram - Chennai,இந்தியா
22-ஏப்-201312:18:09 IST Report Abuse
Meenakshi Sundaram மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் தி மு க ....உண்மைகளை ஏன் சொல்லவில்லை ...? தி மு க எல்லாவற்றிலும் தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலையைத்தான் செய்கிறது ...
Rate this:
3 members
0 members
10 members
Share this comment
Cancel
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
22-ஏப்-201312:16:24 IST Report Abuse
JOHN SELVARAJ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.சி.சாக்கோவை தலைவராக நியமித்ததே காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அறிக்கை வெளியிடத்தானோ என்று தோன்றுகிறது. மந்திரிசபை கேபினெட் முடிவை செயல்படுத்தியதற்காக வருடக்கணக்கில் சிறையில் வைக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் தன் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு அனுமதி கேட்பது நியாமான கோரிக்கைதானே?. குற்றம் சாட்டப்பட்டவர் ராஜா... அவர் தரப்பு நியாயத்தை சொல்ல வந்தால் ஏன் மறுக்கவேண்டும்? ராஜாவிற்கு சாட்சியம் அளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு, கேபினட்டிற்குத் தலைமை தாங்கிய பிரதமர் மன்மோகன்சிங்கும், இந்த முடிவில் முக்கிய பங்கு வகித்த, நிதி அமைச்சர் சிதம்பரமும், கூட்டுக்குழு முன் ஆஜராகாத நிலையில், ஜே.பி.சி யின் அறிக்கை பழி முழுவதையும் ராஜா மீது போட்டு காங்கிரஸ் கட்சியைக் காப்பற்றவே முயன்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
22-ஏப்-201312:12:07 IST Report Abuse
MOHAMED GANI சாக்கோ தலைவரானதிலிருந்தே அவர் ஒருத‌ைலை பட்சமாகதான் நடந்துகொண்டு வருகிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜா தன் தரப்பு கருத்தை சொல்வதற்கு ஜே.பி.சி வாய்ப்பு அளித்து இருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே, புறக்கணித்துள்ளனர். ராஜாவை அழைக்க, குழுவின் தலைவரான சாக்கோ விரும்பவில்லை. இது தொடர்பாக குழு உறுப்பினர்களை கூட்டி விவாதிக்கவில்லை.இதன் மூலம், உண்மையை மூடிமறைக்க முயற்சி நடந்தது தெள்ளத் தெளிவாகிறது.
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்