Akhilesh meet to Jaya | 3 வது அணி அமைய பிரகாசமான வாய்ப்பு ;ஜெ., வை சந்தித்தார் அகிலேஷ் யாதவ் | Dinamalar
Advertisement
3 வது அணி அமைய பிரகாசமான வாய்ப்பு ;ஜெ., வை சந்தித்தார் அகிலேஷ் யாதவ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: தேசிய அளவில் 3 வது அணி அமைய பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக உ .பி., முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் கூறினார். சென்னையில் நடந்த பா.ம.க. இளைஞர் பெருமன்றவிழாவில் பங்கேற்க வந்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அகிலேஷ் தமிழக முதல்வர் ஜெ.,வை சந்தித்து பேசினார். . இன்று சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; வரப்போகும் பொதுத்தேர்தலில் தேசிய அளவில் மூன்றாவது அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. காங்.,, பா.ஜ. இரு கட்சிகளும் நாட்டின் பொருளாதாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க தவறி விட்டன. இனி மீண்டும் காங். மத்தியில்ஆட்சிக்கு வரவே முடியாது. ராகுலும், மோடியும் பிரதமர் வேட்பாளர் என மீடியாக்கள் தான் சொல்கிறது .

காங். சார்பில் ராகுல் பிரதமராவார் என்று பேசப்படுகிறதே என கேள்வி கேட்ட போது., ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை உணர்ந்தவர் தான் பிரதமராக வரமுடியும். இதைபற்றி கொஞ்சமும் கவலைப்படாத ராகுல் பிரதமராக வர முடியாது. மரியாதை நிமித்தமாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளேன். மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் எனது தந்தை முலாயம்சிங் தான் பேச்சுவார்த்தை நடத்துவார். 3 வது அணி அமையும். இவ்வாறு அகிலேஷ் கூறினார்.


இ இதற்கிடையே மாலையில் தலைமை செயலகம் சென்று அங்கு முதல்வர் ஜெ., வை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (56)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-ஏப்-201307:02:24 IST Report Abuse
ஆரூர் ரங குனியறதுதான் குனிஞ்சீங்க இன்னும் கொஞ்சம் குனிஞ்சி காலைத் தொட்டிருந்தால் கூட்டணி என்ன பொறியல் அணி, குழம்பு அணி சாம்பார் அணி எல்லாத்திலேயும் இடம் கொடுத்திருப்பார்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
23-ஏப்-201306:14:50 IST Report Abuse
MJA Mayuram நரிக்கு நாட்டாண்மை குடுத்தால் கெடைக்கு ரெண்டு ஆட கேட்குமாம்....இந்த திரில் நாடகத்தின் ஆரம்பம் ஒரு மாதிரியாகவும் கதையாசிரியர் கலைஞர் கிளைமாக்சை வேறு மாதிரியாகவும் முடிப்பார்....ஏல எப்புவுமே மத்தியில பவரு என்ககிட்டதாம்ல...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
SARGUNAM - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-201304:57:55 IST Report Abuse
SARGUNAM ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா தம்பி அகிலேசு போய் உருப்படுற கூட்டணி அமைக்கிற வழியை பாருப்பா தம்பி இதை நம்பினே நாசமா போயிடுவ ராசா இன்னுமா உங்க அப்பா இதை எல்லாம் நம்புறாரு அய்யோ அய்யோ
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201304:45:54 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இப்பிடியே உசுபேத்தி உடம்பை ரணகளம் ஆகிடுவாங்க அப்பு....இந்த அம்மா வேற ஏற்கனவே பிரதமர் கனவில் இருக்கு ஒருவேளை இந்த அம்மா 3 வது அணியை (தேர்தல் வரை) கெட்டியா பிடித்துகொண்டால் நம்ம தாத்தா கதி என்ன ஆகும்.?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Sunami Romeo - vellore,இந்தியா
23-ஏப்-201300:44:33 IST Report Abuse
Sunami Romeo அம்மா, அவங்கள நம்பாதீங்க.. சரியான 'பல்டி' குரூப்பு.. இந்த பயலொட தகபன்னாருக்கும் நம்ம தாத்தாவுக்கும் தான் இந்தியாவுலேயே காங்கிரஸ்-சைடு பல்டி அடிகரதுள்ள போட்டியே. இங்க வந்து கூலகும்புடு போடுறதே 'பாரத மாதா'கிட்ட தேர்தலுக்கப்புரம் எக்ஸ்ட்ரா கட்டு வாங்க தான்.. வெரி டேஞ்ச்சரஸ் பாய்ஸ் மேடம். பாத்து சூதானமா நடந்துக்குங்க..
Rate this:
6 members
0 members
50 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஏப்-201322:01:37 IST Report Abuse
Pugazh V வளைவு போதாதே. தமிழக அமைச்சர்கள் சொல்லித் தரவில்லையா? தனித்துப் போட்டி என்று சொன்ன பிறகும் என்ன மூன்றாவது அணி? ஒருவேளை அ தி மு க தனி முடிவை மாற்றினால், //ஜெயலலிதா பல்டி // என்று தலைப்பிட்டு செய்தி எந்தப் பத்திரிகையாவது வெளியிடுமா? இந்த யாதவ் அப்படியே கோபாலபுரத்துக்கும் போய் ஒரு கும்பிடு போட்டு வைத்திருக்கலாம்.பிற்காலத்தில் உதவும். மோடி ஆதரவாளர்கள் திரு திருவென இப்போதே விழிக்க ஆரம்பித்துவிட்டது, அவர்களின் மவுனத்திலேயே தெரிகிறது. விமர்சனங்களே காணோம்.
Rate this:
35 members
0 members
26 members
Share this comment
Cancel
Kannan - Madurai,இந்தியா
22-ஏப்-201321:52:16 IST Report Abuse
Kannan சரி இல்லையே...அகிலேஷ் யாதவ் நம்ம அமைச்சர்களிடமும், அல்லகைகளிடமும் கத்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கு. முதலில், எவ்வாறு முதுகை வளைத்து தரையை தொட்டு கும்பிட வேண்டும் என்று கத்து கொள்ளட்டும், பிறகு, கூட்டணி, கூட்டணிக்கு தலைமை பற்றிய தேவை இல்லாத விஷயத்தை அப்புறம் பார்க்கலாம்.
Rate this:
17 members
0 members
51 members
Share this comment
Cancel
Indian - Erode,இந்தியா
22-ஏப்-201321:18:02 IST Report Abuse
Indian இங்கே பலரும் மூன்றாவது அணி அமைந்தால் உண்டாகும் குழப்பங்களை பற்றியே பேசுகின்றனர். மாறி மாறி பிஜேபிக்கும் காங்கிரஸ்க்கும் ஆட்சியை கொடுத்து என்ன செய்தார்கள்?? ஆக யாரும் நாட்டை நல்வழியில் ஆளும் திறமை உள்ளவர்களை விட ஒரு கட்சியை சார்ந்தே தான் இருக்கிறோம்.. நாமெல்லாம் என்னிக்கோ சிந்திச்சு வோட்டு போட்டிருந்தா இன்றைக்கு கட்சிகளே இருந்திருக்காது.. ஆள்பவர்களை மட்டும் குறை சொன்னால் எப்பிடி? அவர்களை தேர்ந்தெடுக்கும் நமக்கு அல்லவா வேண்டும் அறிவும், திறமையும் இப்பிடி அடுத்தவர்கள் செய்வதையே தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோமே தவிர, நம்மளையும் பலர் பார்கிறார்கள் என்று பெரும்பாலோருக்கு தெரிவதில்லை.... வரும் தேர்தலில்கலாவது ஆளும் திறமை உள்ளவர்களுக்கு நாம் வாய்ப்பு தர வேண்டும்.. இல்லாதவர்களை நீக்க 49'ஒ' வை செயல்படுத்த வேண்டும்..
Rate this:
11 members
0 members
13 members
Share this comment
Cancel
Silambarasan - Thiruvannamalai,இந்தியா
22-ஏப்-201321:11:29 IST Report Abuse
Silambarasan தமிழகத்திலும் அகிலஷை போல படித்த, சினிமாக்காரர் இல்லாத, இளைஞரின் தமிழர் ஆட்சி அமைய விரும்புகிறேன்.
Rate this:
15 members
0 members
14 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-201321:04:57 IST Report Abuse
தமிழ்வேல் ஐயோ... முதுகு...
Rate this:
2 members
0 members
17 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்