Advertisement
152 மாணவிகள் மாயம் ; போலீசார் அதிர்ச்சி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

22 ஏப்
2013
16:51
பதிவு செய்த நாள்
ஏப் 22,2013 16:49

சேலம்: பிளஸ் 1 , பிளஸ்2 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்துள்ள நிலையில், 152 மாணவியர், காதலர்களுடன் ஓட்டம் பிடித்து இருப்பது, போலீஸாரின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. நடப்பு ஏப்ரல் மாதத்தில் மட்டும் மாணவியர் காணாமல் போனதாக, 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சில ஆண்டுகளாக, ப்ளஸ் 2, ப்ளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடையும் நிலையில், மாணவ, மாணவியர் பலர் வீட்டை விட்டு, ஓடுவது அதிகரித்து வருகிறது. 2011-12ம் கல்வி ஆண்டில், தமிழகம் முழுவதும், 125 மாணவியர் காணாமல் போனதை அடுத்து, நடப்பாண்டு பெற்றோரை போலீஸார் உஷார் படுத்தினர்.


போலீஸாரின் எச்சரிக்கையை அடுத்து, பெற்றோர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். ஆனால், பெற்றோரின் கண்களில் மண்ணை தூவி விட்டு, மாணவியர் பலர், பள்ளி, கல்லூரி தோழர், ஆட்டோ டிரைவர்களுடன் ஓட்டம் பிடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


மாணவியர், தங்களின் காதலர்களாகிய மாணவர்கள், இளைஞர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, வீட்டை விட்டும், பெற்றோரை தவிக்க விட்டுச் சென்றுள்ளனர். போலீஸாரின் கணக்கெடுப்பின் படி ஏப்ரல், 20ம் தேதி வரை, தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி மாணவ, மாணவியரில், 152 பேர் வீடுகளில் இருந்து மாயமாகி உள்ளனர்.


மதுரை- சேலம் - திருச்சி :



நடப்பாண்டில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம், சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி தேர்வு முடிந்த நிலையில், வீட்டை விட்டு, "எஸ்கேப்' ஆன மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், கோவை முதலிடத்தை பெற்றுள்ளது. அங்கிருந்து மட்டும், 45 மாணவ, மாணவியர் எஸ்கேப் ஆகி உள்ளனர். இதில், 12 மட்டும் மாயமானதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 36 மாணவியர் எஸ்கேப் ஆன நிலையில், மைனர் பெண்கள் என்பதால் ஆறு பேர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டில் மொத்தம், 125 மாணவியரை மீட்ட போலீஸார், 42 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தனர். நடப்பு கல்வி ஆண்டில், ஏப்ரல், 20 வரை, 152 மாணவியரை மீட்டுள்ள போலீஸார், 60 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள, 92 பேரின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்துள்ளனர்.


ஆண்டு தோறும், பள்ளிகளில் தேர்வு முடியும் நிலையில், காதல் என்ற போர்வையில், "எஸ்கேப்' ஆகும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெற்றோர், போலீஸார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது: பள்ளி தேர்வு முடிவடையும் நிலையில், மாணவ, மாணவியர் வீட்டை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. சில ஆண்டுகளாக மாயமாவர்களின் எண்ணிக்கை, 100யை தாண்டி இருப்பது போலீஸாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மாணவ, மாணவியரின்க பெற்றோர், தேர்வு முடிவடையும் நிலையிலும், உஷாராக இருந்தால், இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும். மே மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், பெற்றோர் உஷராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஏப்-201322:14:19 IST Report Abuse
Pugazh V டில்லியில் எவனோ ஒரு கயவன் செய்யும் கொடூரங்களுக்கு பிரதமர் வரை விமர்சனம். அந்தக் கயவனின் செயலுக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் யோசிக்கவில்லை. அதே போல இந்த மாணவியரின் இந்த செயலுக்கும் ஆட்சியைக் குறை சொல்லலாமா? நாங்கல்லாம் கல்லூரி முடிந்து வேலைக்குப் போகும் போது காதலித்ததைக் கூட எதிர்த்தார்கள். இப்போது?? ஆனால் எத்தனையோ மாணவ மாணவியர் அடுத்து என்ன படிக்கலாம் நிகழ்ச்சிக்கு வந்து படிப்பில் எவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் தெரியுமா? இப்படியும் ஒரு கூட்டம், அப்படியும் ஒரு கூட்டம்.
Rate this:
0 members
0 members
50 members
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
22-ஏப்-201321:30:38 IST Report Abuse
கோமனத்தாண்டி இந்த மாதிரி செய்திய போட்டு நல்ல பொண்ணுகளை மற்றும் பசங்களை தவறாக செல்ல வழி வகை செய்ய வேண்டாம், சட்டம் அரசும் பார்த்து கொள்ளட்டும் ,
Rate this:
21 members
0 members
4 members
Share this comment
Cancel
Mohamed Musthafa - doha,கத்தார்
22-ஏப்-201321:20:21 IST Report Abuse
Mohamed Musthafa திமிரு , வயசு கோளாறு, அறியாத்தனம், அவசரம் இது எல்லாம் வெகு விரைவில் புரியும் ஓடியவர்களுக்கு. மன்னிப்பது ஒன்றே சரியான தண்டனை. .
Rate this:
1 members
0 members
17 members
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
22-ஏப்-201320:58:16 IST Report Abuse
Hari தாயின் குற்றமே. தகப்பன் வேலை காக அலைகிறான். பாசமே தாயின் கண்களை கட்டப்பட்டது.
Rate this:
11 members
0 members
2 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
22-ஏப்-201320:30:17 IST Report Abuse
amukkusaamy வயசுக்கு வந்துட்டாங்க போல...
Rate this:
12 members
0 members
1 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201320:14:03 IST Report Abuse
Mohandhas நடத்து என்ன?", சொல்வதெல்லாம் உண்மை" போன்ற தொடர்களுக்கு பஞ்சமிருக்காது.. பாலியல் பலாத்காரம் செய்யபட்டாலும் புகார் தர முடியாது.... வாழ்க மாணவ சமுதாயம்...
Rate this:
0 members
0 members
24 members
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
22-ஏப்-201320:10:05 IST Report Abuse
Mohamed Nawaz சினிமாவினால் வரும் கலாச்சார சீரழிவு இது. காதல் கத்தரிக்காய் என்று இல்லாத கதைகளை எல்லாம் காட்டி பிஞ்சு மனங்களை கெடுப்பதால் வரும் வினை. பெற்றோரும் இதற்கு காரணம்.
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
22-ஏப்-201319:39:41 IST Report Abuse
Rajkumar அப்போ சொல்வதெல்லாம் உண்மை எபிசொட் 152 இருக்குன்னு சொல்லுங்க
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel
saravanakumar - RJPM,இந்தியா
22-ஏப்-201319:23:29 IST Report Abuse
saravanakumar இதற்கு முக்கிய காரணம் சுதந்திரம், சினிமா, சின்னத்திரை நடத்தும் நிகழ்ச்சி. சுதந்திரம் மனிதனின் வாழ்க்கையை சீரழிகிறது
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
22-ஏப்-201319:14:02 IST Report Abuse
KMP கேவலமாக உள்ளது ...சினிமா தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம் எல்லா படத்திலும் காதல் தான் காதல் காதல் .... டிவி சீரியல் நிகழ்ச்சிகள் ரொம்ப மோசம் ...
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.