E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
2ஜி முறைகேடு: குற்றமற்றவன் என நிருபிப்பேன்: ராஜா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

22 ஏப்
2013
19:51
பதிவு செய்த நாள்
ஏப் 22,2013 19:46

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஜே.பி.சி., அறிக்கை முன்கூட்டியே வெளியானதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, இந்த விவகாரத்தில் நான் குற்றமற்றவன் என நிருபிப்பேன் என கூறியுள்ளார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தி வந்தது. ஏறத்தாழ இறுதி கட்டத்தை, இந்தக் குழு அடைந்துள்ள நிலையில், விசாரணை அறிக்கை எப்படி இருக்கும் என்ற, எதிர்பார்ப்பு இருந்தது. இந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன், கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கை விவரங்கள், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின."ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இல்லை. பிரதமரை, தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, தவறாக வழி நடத்தினார்' என, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக, செய்திகள் தெரிவித்தன.இதனால், முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாமே, "கூட்டுக் குழுவின் அறிக்கை, எப்படி ஊடகங்களுக்கு கசிந்தன. வேண்டுமென்றே, காங்கிரஸ் இவ்வாறு செய்கிறது. பார்லிமென்ட் நடைமுறைகளை, காங்கிரஸ் அர்த்தமில்லாமல் செய்வது கண்டிக்கத்தக்கது' என, விமர்சித்தன.

முன்னாள் அமைச்சர் ராஜாவோ, "எல்லா முடிவுகளையும், பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுத்தான் எடுத்தேன். எல்லா விவரங்களும் அவருக்கு தெரியும். என், 200 பக்க வாக்குமூலத்தை, கூட்டுக்குழுவுக்கு அனுப்ப உள்ளேன்' என்றார்.

ராஜா கண்டனம்: இந்நிலையில், ஜே.பி.சி., தலைவர் சாக்கோவுக்கு ராஜா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில்,ஜே.பி.சி., அறிக்கை முன்கூட்டியே வெளியானதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஜே.பி.சி., முன்பு ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்பு தர வேண்டும். எனது நேரடி விளக்கத்தை கேட்காமல் வரைவு அறிக்கை தயாரித்திருப்பது சரியல்ல. வாகன்வதி அறிக்கையை இதுவரை தமக்கு தரவில்லை.

பிரதமருக்கு தகவல்: கடந்த 200ம் ஆண்டு, தொலை தொடர்புத்துறை அமைச்சராக பிரதமர் என்னை நியமித்திருந்தார். தொலை தொடர்புத்துறை அமைச்சராகவும் தொடர செய்தார். நான் பிரதமரை தவறாக வழிநடத்தியிருந்தால், என்னை மீண்டும் அமைச்சராக நியமித்திருக்கமாட்டார். 2ஜி ஏலம் தொடர்பாக பிரதமர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை 2ஜி ஏலம் தொடர்பாக பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் கிடைக்கவில்லை: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக , எனது வீடு, உறவினர்கள் வீடுகளில் சோதனை. ஆனால் இதுவரை லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை. என் மீதான குற்றங்கள் தவறு என நிருபிப்பேன். ஜே.பி.சி.,யில் ஏன் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனது வி ளக்கத்தை கேட்டிருந்தால் வாதங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். இதில் இருக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறு. எனது நிலை வேறு அமைச்சருக்கு வரக்கூடாது. குற்றமற்றவன் என நிருபித்து வெளிவருவேன் என கூறினார்.

சாக்கோ மறுப்பு: இந்நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, விளக்கமளிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டதாக ஜே.பி.சி., தலைவர் சாக்கோ கூறியுள்ளார். மேலும் அவர், முறைகேடு தொடர்பாக போதுமான விளக்கங்களை ராஜா அளித்துள்ளார். ராஜா அனுப்பிய 60 பக்க அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ராஜாவுடன் தினமும் உரையாட முடியாது. ஜே.பி.சி., அறிக்கை
முன்கூட்டியே வெளியானதாக கூறப்படுவது தவறு. அப்படிநினைத்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னை தொடர்பாக நான் ராஜினாமா செய்ய தேவையில்லை என கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (28)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201309:03:38 IST Report Abuse
Srinivasan Kannaiya திரு.ராஜா அவர்களே நீங்கள் கவலை படவே கூடாது. சில காலம் இப்படியே போய்கொண்டு இருக்கும் பிற்காலத்தில் இது மாதிரி ஒரு சம்பவம் நடந்தது என்பதை எல்லோரும் மறந்து விடுவார்கள். நீங்களும் உங்கள் வாரிசுகளும் நிம்மிதியாக இருக்கும் சொத்தை வைத்து கொண்டு காலத்தை ஓட்டலாம்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Vasan R S - chennai,இந்தியா
23-ஏப்-201308:52:00 IST Report Abuse
Vasan R S திரு ராசா அவர்கள் ஆரம்பத்திலேயே நீதிமன்றத்தில் எல்லா உண்மைகளையும் புட்டு புட்டு வைத்திருந்தாரானால் பிரதமர் மற்றும் நிதி மந்திரி அவர்களை - ராசாவின் வாதம் நீதி மன்றத்தில் எடுபட்டிருந்தால்- இந்நேரம் அவர்களை காப்பாற்றி கொள்வதற்காவது ராசாவையும் தப்பிக்க வைத்திருப்பார்கள். ஆனால் திருமதி கனிமொழி அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க அன்று ராசாவின் வாயை அடைத்து விட்டார் ஒருவர். அவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பொழுது கனிமொழி இவ்வழக்கிலிரிந்து ஏறத்தாழ விடுபட்டு விட்டார் என்றே தோன்றுகிறது . அதனால்தான் ஆதரவு வாபஸ் , ராசாவுக்கு ஆதரவு போன்ற நாடகங்கள். ராசா குற்றம் புரியவில்லை என்று சொல்வதை எவரும் நம்பப்போவதில்லை. அதே சமயம் அவருடன் சேர்ந்து குற்றம் புரிந்தவர்கள் இன்று தப்பிக்கும் வாய்ப்பை ராசாவே ஏற்ப்படுத்திக்கொண்டார் என்பதுதான் துரதிர்ஷ்டம். எது எப்படியோ அவர் ஒரு தனித்த பலி ஆடு ஆகி விட்டார். இனி அவரே அவரைக்காப்பாற்றிக்கொண்டால்தான் உண்டு.
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201308:40:39 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நீங்கள் குற்றமற்றவரே தேனை எடுப்பவன் புறங்கையை நக்குவது சகஜம்தான். இதை நான் சொல்லவில்லை, பல சந்தற்பங்களில் உங்கள் தலைவர் சொல்லி இருக்கிறார்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
KKsamy - Jurong,சிங்கப்பூர்
23-ஏப்-201307:51:50 IST Report Abuse
KKsamy அம்பானிகளுக்கும் கோயங்க களுக்கும் கும்பிடு போடும் ஊடகங்கள் சாமானிய மனிதர்களை எவ்வாறு பந்தாடுகின்றன என்பதற்கு 2 g வழக்கு மிக சிறந்த உதாரணம். கடை தேங்காய் யை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்து போல் என்று சொல்வார்கள், கடைக்காரன் கோபம் கொண்டது பழி வாங்கியது சரி என்று வைத்து கொண்டாலும் இன்று வரை வழி பிள்ளையர்களகிய மக்கள் நன்றாக அதன் பலனை அனுபவித்துக்கொண்டு அவரையே தூற்றுவது அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதுதான் அன்றி வேறொன்றும் இல்லை. உண்மையிலே ஊடகங்கள் சொன்னதுபோல் 2 g ஊழல் நடந்திருந்தால் ராசா அம்பானியை விட பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். காசு கொடுத்து வங்கி படித்து இந்த சின்ன விசயங்களை கூட சிந்திக்க மறுக்கும் மக்களை என்னவென்று சொல்வது.
Rate this:
8 members
0 members
1 members
Share this comment
amukkusaamy - chennai,இந்தியா
24-ஏப்-201301:04:12 IST Report Abuse
amukkusaamy உம்ம சிந்தனைய நெனச்சா ..ஆஹா என்னமா இருக்கு. அதாவது ராசா கொள்ளையே அடிக்கலை ஏன்னா தாழ்த்தப்பட்டவர். ஏன்யா இதுலயுமாய்யா இந்த "சாதீ"ய உள்ள புகுத்தனும்? அப்படின்னா முகாந்திரம் இருக்குன்னு கோர்ட்டு ஏன்யா ஏத்துக்கணும்? இவரையும் குற்றவாளியா அறிவிக்கனும்? ஒரு பெரிய கட்சியின் கொள்கை பரப்பு செயலாலர்னா சும்மாவா? இந்தாளு வீட்ட பாத்திருக்கீரா நீர்? கொடுமைடா சாமி ...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Mohammed Azeez - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஏப்-201307:12:39 IST Report Abuse
Mohammed Azeez ராசா ராசா மன்மத ராசா ஏன் செல்லம் பொய் சொல்லக்கூடாது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-ஏப்-201306:59:01 IST Report Abuse
ஆரூர் ரங தனியா தனகககப் பண்ணலை தலைவருக்காகவும் அன்னைக்காகவும் ஆட்டைப் போட்டேன்னு சொல்றாரோ? இவர் கொடுத்த 122 செல்போன் லைசென்சுகள் முறையற்ற ஊழல் வழியில் கொடுத்தது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லி கேன்சலே செய்துவிட்டது .இன்னும் நான் நல்லவன்னு சொல்றது...சரியா? சரி கம்பி எண்ண நேரம் வந்துடிச்சு. எய்தவன் சக்கர நாற்காலியில் ஊர்வலம் வர இந்த அம்பு மட்டும் களி சாப்பிடப்போகிறது
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
INTHIRAN - singapore,சிங்கப்பூர்
23-ஏப்-201305:49:25 IST Report Abuse
INTHIRAN நாங்க நம்பிட்டோம்..........
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201304:42:36 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி ரொம்ப கரெக்ட். நீ அடிச்ச கொள்ளை எவ்வளவு, மற்றவர்களுக்கு கொடுத்த பங்கு தொகை எத்தனை என்று சரியா சொல்லிட்டா, உங்க தலைவரே, தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் என்று சொல்லி உன்னை குற்றமற்றவர் ஆக்கிவிடுவார்.
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel
nanchilraja - Washington DC,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201303:51:00 IST Report Abuse
nanchilraja ராஜாவை இந்த போஸில் பார்த்தால் எனக்கு நித்தியானந்தா தான் நினைவுக்கு வருது.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
யாசின் - பெஙகலுரு  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-201301:13:40 IST Report Abuse
யாசின் ராஜா என்னா முக்னாலும் நடக்காது
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.