வரும் 25ம் தேதி முதல் சென்ட்ரல் - பெங்களூரு "ஏசி' இரண்டடுக்கு ரயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 25ம் தேதி முதல் சென்ட்ரல் - பெங்களூரு "ஏசி' இரண்டடுக்கு ரயில்

Updated : ஏப் 22, 2013 | Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே, "ஏசி' இரண்டடுக்கு ரயில் சேவை, வரும், 25ம் தேதி முதல் துவங்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலிலில், 25ம் தேதி காலை, 7:25 மணிக்கு, புறப்படும் ரயில், பெங்களூருக்கு பகல் 1:30 மணிக்கு சென்றடையும். பெங்களூரிலிருந்து பிற்பகல் 2:40 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலில், 10 "ஏசி' சேர் கார் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூரு கண்டோன்மென்ட் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த ரயில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் போது, பெரம்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய, நாளை (ஏப். 23) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை