துபாய் : பக்ரைன் நாட்டில், கொள்ளையர்கள் வீசிய பெட்ரோல் குண்டு வெடித்ததில் இந்திய பெண் தீக்காயமடைந்துள்ளார். இந்தியாவை சேர்ந்தவர் பிரியா டிசூசா. இவர் பக்ரைனில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 19ம்தேதி, ஷேக்இசா அல் கபீர் என்ற பகுதியில், கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சில கொள்ளையர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சண்டை நடந்தது.கொள்ளையர்கள் வீசிய பெட்ரோல் குண்டு, பிரியா மீது விழுந்து வெடித்ததில், அவருக்கு 60 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.