E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"இளைஞர் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தவில்லை' : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
22:55

சென்னை: ""இந்தியாவில் உள்ள 43 சதவீதம் இளைஞர் சக்தியை, சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால், இந்தியா வல்லரசு நாடாக உருவாகியிருக்கும்'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இம்மாதம் 25ம்தேதி வன்னியர் இளைஞர் சித்திரை முழுநிலவு பெருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவின் துவக்க விழா சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி., நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. துவக்க விழாவை உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் துவக்கி வைத்தார். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வரவேற்றார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்து பேசுகையில், "இந்தியாவில் 43 சதவீதம் இளைஞர் சக்தி சரியான முறையில் பயன்படுத்தவில்லை. அவர்களை பயன்படுத்தியிருந்தால், இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும்' என்றார்.

விழாவை துவக்கி வைத்து, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க, சென்னை நகரத்தில், வன்னியர் மாநாட்டை துவக்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.
மத்திய அமைச்சராக அன்புமணி பணியாற்றும் போது, புகைபிடிக்கக் கூடாது, புகையிலைக்கு தடை கொண்டு வந்ததை பாராட்டுகிறேன் சித்திரை முழுநிலவு விழாவில் தவிர்க்க முடியாத காரணத்தினால், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். அடுத்த முறை நிச்சயம் கலந்து கொள்வேன். மாநாட்டை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சித்திரை விழாவை சிறப்பாக கொண்டாட எனது நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, வன்னியர்களின் வரலாறுகளை கூறிய நாடகங்களின் குறும்படம் திரையிடப்பட்டது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
23-ஏப்-201309:08:31 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் அடப்பாவிகளா.அய்யா ராமதாஸ் கூட அகிலேஷா..ஏதோ கிரீடமெல்லாம் அமர்க்களமாகத்தான் இருக்குது..ஆனா போய் சேர்க்கும் எடம் தான் பயங்கரமா தெரியுது..
Rate this:
0 members
0 members
0 members
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
23-ஏப்-201308:58:38 IST Report Abuse
sundaram அய்யா குடிதாங்கி அவர்களே, இளைஞர்களை எப்படி பயன்படுத்தறதுன்னு ஆலோசனை பண்ணிட்டீங்க. இளைஞிகளை எப்படி பயன்படுத்தலாம்ன்னு ஒரு யோசனை பண்ணுங்களேன். ஒத்தாசைக்கு வேணும்னா நம்ம குணவதி குசுப்பம்மா இருக்காங்க. நல்ல கருத்து எங்கேந்து கிடைச்சாலும் ஏத்துக்கலாம் இல்லையா.
Rate this:
0 members
0 members
1 members
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
23-ஏப்-201308:53:49 IST Report Abuse
sundaram அதுசரி இந்தியாவுல மதம் மாறவங்களைப்பத்தி கேள்விப்பட்டு இருக்கோம், பார்த்தும் இருக்கோம். ஜாதி மாற முடியுமா? இப்போதான் முதன்முறையா கேள்விப்படுறோம். அகிலேஷ் எப்போலேந்து வன்னியர் ஜாதில சேர்ந்தாரு? இப்போ அவரு கலந்துகிட்ட சென்னை பொதுக் கூத்துக்கப்புறம் உத்தர பிரதேசத்துக்கு போயி இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி அய்யா வன்னியப்பேரொளி வாழ்வின் காணொளி குடிதாங்கியை லக்னோவுக்கு அழைத்து அந்த மாநிலத்தில் உள்ள மரங்களை வெட்டும் பணியை துவக்க இருக்கிறாரா? செய்யறதை சட்டுபுட்டுன்னு சீக்கிரமா செய்யுங்க. எங்க ஊருல ஏதோ வருசத்துக்கு நாலு தூரல் போட்டுக்கிட்டு இருந்துச்சு. இப்போ அப்படீன்னா என்னன்னு கேட்குறாங்க. இதே மாதிரி உங்க ஊருலேயும் கேட்கவேண்டாமா?
Rate this:
0 members
0 members
1 members
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
23-ஏப்-201308:52:22 IST Report Abuse
Ambika. K 43 % இளைஞர் களில் வன்னிய இளைஞர் கல் எவ்வளவு விழுக்காடு தலீவா . அதுல நமக்கு வோட் போடறவங்க எவ்வளவு தலீவா ஹ்ம்ம்ம்ம் எதுவும் தேறாது போல கீது தலீவா பேசாம நம்ம மஞ்ச துண்ட போல சாபம் குடுத்து விடலாம் இந்த 43 % இளைஞர் கள் வயசான பிறகு கிழவர்கள் ஆகட்டும்.
Rate this:
1 members
0 members
0 members
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
23-ஏப்-201307:33:46 IST Report Abuse
Prabhakaran Shenoy அவர் தன மகனை சொல்கிறாரோ?
Rate this:
0 members
0 members
1 members
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
23-ஏப்-201307:23:27 IST Report Abuse
saraathi அதுதான் நம்நாட்டில் ராகுல்,அன்புமணி,அகிலேஷ் யாதவ் ,(இளைஞர்களுக்கெல்லாம் இளைஞர்) ஸ்டாலின் ,அழகிரி,கனிமொழி என அரசியல்வாதிகளின் வாரிசுகள் மட்டும் இளைஞர்கள் என்றாயிற்று.இவர்கள் அனைவரையும் சரியாக பயன்படுத்திகொண்டுதானே இருக்கிறார்கள்.பிறகென்ன? இவர்களை விடுத்து நாட்டில் வேறு இளைஞர்கள் உள்ளார்களா என்ன ? ஒருவேளை அரசியல் தலைவர்களின் பேரபிள்ளைகளை சொல்லுகிறாரோ?
Rate this:
0 members
0 members
0 members
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-ஏப்-201306:33:36 IST Report Abuse
ஆரூர் ரங அடக் கடவுளே இவங்க இனத்தாரில் பெரும்பகுதி ஒரு வேளை உணவுக்கே திண்டாடும்போது ITC ஐந்து நட்சத்திர ஓட்டலில் மீட்டிங் விருந்து ஏழை இளைஞர் சதியை வளர்க்கும் முறை இதுதானோ?
Rate this:
0 members
0 members
1 members
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
23-ஏப்-201306:00:23 IST Report Abuse
Panchu Mani இளைஞர்களே.. நோட் பண்ணிக்குங்க ...ITC ஓட்டல் ல உக்காந்திகிட்டு சிகரட் , புகையிலை பிடிக்க கூடாதுன்னு பேசறாங்க...
Rate this:
0 members
0 members
1 members
Cancel
jithan - Dharmapuri  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-201302:23:31 IST Report Abuse
jithan வாழ்க வன்னியர் புகழ் வளர்க வன்னியர் சமுதாயம்
Rate this:
1 members
0 members
0 members
Cancel
Palani Ravi - Dubuk City,டிஜிபௌசி
23-ஏப்-201302:13:44 IST Report Abuse
Palani Ravi நீங்க ஒரு ஆளு மட்டுந்தேன் சரியா இளைஞர் சக்தியை மரம் வெட்ட பயன் படுத்தியது சரியா தலீவா ? காடு வெட்டி குறு பேர பாரு பேரு பெத்த பேராகீது நைனா என்ன அகிலேசு எங்கூரு கலாசாரம் உங்கூருலையும், அட நாமெல்லாம் ஒரே குட்டையில ஊறிப்போன ஊசிப்போன மட்டைங்கிரேன்...
Rate this:
0 members
0 members
1 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.