லாரி மீது அரசு பஸ் மோதல் : 4 பேர் பலி; 14 பேர் காயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருச்சி: முன்னால் சென்ற லாரி மீது, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ் மோதியதில், மூன்று பெண்கள் உட்பட, நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; காயமடைந்த, 14 பேர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், 35க்கும் மேற்பட்ட பயணிகளுடன், மதுரை புறப்பட்டது. நேற்று காலை, 4:00 மணிக்கு, திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி, அங்கிருந்து, 4:10 மணிக்கு, மதுரை புறப்பட்டது. திருச்சி - மதுரை பைபாஸ் ரோட்டில், எடமலைப்பட்டி புதூர் ரயில்வே மேம்பாலம் முன், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது, எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.
இதில், அரசு பஸ்சின் கண்டக்டர் இருக்கை, அதற்கு பின்னால் இருந்த மூன்று பயணிகள் இருக்கைகள், உருத் தெரியாமல் சேதமடைந்தன. பஸ்சின் இடது பக்க முன் இருக்கையில் அமர்ந்திருந்த கண்டக்டர், தங்கவேல், 50, செந்தில்ராணி, 47, சரோனி, 45, ஆகியோர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்த, திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து போலீசார், தீயணைப்பு படையினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இறந்தவர்கள், பஸ் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதால், இறந்தவர்களின் உடல்கள், கிரேன் மூலம் மீட்கப்பட்டன. விபத்தில் காயமடைந்த, 15 பேர், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பூமாரி, 52, என்ற பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் பயணிகள் கூறுகையில், "சென்னையிலிருந்து பஸ் கிளம்பும் போதே, கண்டக்டர், சற்று நிதானம் இல்லாமல், அடிக்கடி தடுமாறி, சில்லறைகளை சிதற விட்டார். இது தொடர்பாக, கண்டக்டர், டிரைவருக்கு இடையே, வாக்குவாதம் நடந்தது. கண்டக்டருடனான சண்டையால் ஏற்பட்ட, டிரைவரின் கவனக்குறைவே, விபத்திற்கு காரணம்' என்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BLACK CAT - Marthandam.,இந்தியா
23-ஏப்-201310:23:31 IST Report Abuse
BLACK CAT கண்டக்டர், டிரைவருக்கு இடையே, சண்டையை பஸ்சுக்கு வெளியே வச்சுக்க வேண்டியது தானே ...?
Rate this:
Share this comment
Cancel
Begam - Coimbatore,இந்தியா
23-ஏப்-201309:27:55 IST Report Abuse
Begam அரசாங்க பஸ் இந்த லட்சணத்தில் இருக்கு. கண்டக்டர் நிதானம் இல்லாமல் இருந்தார். எய்யா இப்படி பொது மக்கள் வாழ்க்கையோடு விளையாடுறீங்க?.
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
23-ஏப்-201309:27:45 IST Report Abuse
p.manimaran இந்த மாதிரி நாய்களால் மற்ற டிரைவர்களுக்கு கெட்ட பேரு.
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
23-ஏப்-201308:11:00 IST Report Abuse
Loganathan தூக்க கலக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம். நான்கு வழிபாதையாக இருப்பதால் எதிர் எதிர் மோதும் விபத்து வெகுவாக குறைந்து இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
23-ஏப்-201306:23:00 IST Report Abuse
Eswaran Eswaran கண்டக்டர் சில்லறையை தவற விட்டால் ட்ரைவருக்கென்ன. ஒழுங்காக ரோட்டப் பார்த்து ஓட்ட வேண்டியதுதானே,பஸ்ஸை ஓட்ட வந்து விட்டால் தனது சொந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு கவனம் முழுவதும் ஓட்டுவதில்தான் இருக்க வேண்டும். பயணிகள் அனைவரும் அந்த பஸ்ஸை ஓட்டும் டிரைவரை நம்பித்தானே தனது உயிரையும்,உடமைகளையும் ஒப்படைத்து பயணம் செய்கின்றனர்? இந்த டிரைவர் மேல் அரசு எடுக்கும் நடவடிக்கை மற்ற டிரைவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.அப்போதுதான் உப்புச்சப்பில்லாத காரணத்துக்கெல்லாம் விபத்தை உருவாக்குவது தடுக்கப் படும்.
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
23-ஏப்-201305:30:11 IST Report Abuse
Mohandhas பல நேரங்களில் கண்டக்டர், ட்ரைவர் இடையே கருத்து வேறுபாடு இருப்பது, பேருந்தில் பயணிக்கும் போது நமக்கு நன்றாக தெரியும்,,. இதில் பாதிக்கபடுவது பொதுமக்கள் தான்,,, இதற்கு போக்குவரத்து துறை தகுந்த கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். அதுவும் நெடுந்தூர பேருந்து நடத்துனர், ஓட்டுனருக்கு இது மிகவும் அவசியம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்