ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு : மலிவு விலை உணவகத்தில் இட்லி விற்பனை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில், இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை ஒரு கோடியை எட்டி விடும் என, எதிர்பார்க்கப் படுகிறது. நேற்று வரை, 94 லட்சம் இட்லிகள் விற்று தீர்ந்துள்ளன.

சென்னையில், கடந்த பிப்., 19 முதல், அர” நடத்தும் மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் இதுவரை, 200 உணவகங்கள் திறக்கப் பட்டு உள்ளன. இவற்றில், 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் விற்கப்படுகின்றன.


தரத்தில் குறையில்லை:

"எக்காரணம் கொண்டும், உணவின் தரத்தில் எந்த குறைபாடும் வரக்கூடாது; சுகாதார அலுவலர்கள், பொறுப்பாளர்கள், சாப்பிட்டு பார்த்த பின்பே, விற்பனையை துவங்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதால், மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். கூலி தொழிலாளர் மட்டுமின்றி, அரசு, தனியார் மற்றும் ஐ.டி., நிறுவன ஊழியர்களும், உணவகங்களில் நீண்ட வரிசையில் காத்து நின்று, உணவை ருசித்து செல்கின்றனர்.ஒவ்வொரு உணவகத்திலும், தினசரி 1,000 முதல், 3,500 வரை இட்லிகள் விற்பனையாகின்றன. இதை ஒப்பிடுகையில், சாம்பார் சாதம், 250 முதல், 350 வரை மற்றும் தயிர் சாதம், 100 முதல், 300 வரைதான் விற்பனையாகின்றன. சென்னையில் உள்ள 200 மலிவு விலை உணவகங்களிலும், விற்பனையில் முதல் இடம் பிடித்துள்ள இட்லி, தினசரி, மூன்று லட்சம் வரை விற்கப்படுகிறது.அதிகபட்சமாக, கடந்த 20ம் தேதி, சனிக்கிழமையன்று, 3.16 லட்சம் இட்லிகளும், 64,121 சாம்பார் சாதமும், 25,389 தயிர் சாதமும் விற்பனையாயின.

தொடங்கப்பட்டு 54 நாட்களே ஆன இந்த உணவகங்களில், கடந்த 21ம் தேதி வரை, 91,12,880 இட்லிகளும், 19,33,561 சாம்பார் சாதமும், 12,21,045 தயிர் சாதமும் விற்பனையாகி உள்ளன. மொத்தம், 2.24 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.நேற்று, மூன்று லட்சம் இட்லிக்கும் மேல் விற்று, இட்லி விற்பனை, 94 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை எண்ணிக்கை, ஒரு கோடியை எட்டி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மலிவு விலை உணவகங்கள், எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தரத்தில் எந்த குறையும் வராதபடி கண்காணித்து வருகிறோம். இன்னும் ஐந்து மாதங்களில், மேலும் சில மலிவு விலை உணவ கங்கள் திறக்கப்படும்' என்றார்.


புதினா சட்னியா, ஊறுகாயா?

மலிவு விலை உணவகங்களில், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள ஊறுகாய் கொடுத்தால் நன்றாக இருக்கும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசுக்கு, இது தொடர்பாக பரிந்துரை அளித்து உள்ளோம். உரிய அனுமதி கிடைத்ததும் செயல்படுத்துவோம்' என்றனர்.


"எங்களுக்கு கிடைக்கல':

ஆலந்தூர் மண்டலம், 159வது வார்டு மீனம்பாக்கம் குடியிருப்பு பகுதியில், ஒரு மலிவு விலை உணவகம் உள்ளது. இங்கு சமையல் அறை இல்லாததால், 166வது வார்டு உணவகத்தில் இருந்து இட்லி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் ஆயிரம் இட்லி மட்டுமே 159வது வார்டு உணவகத்திற்கு வருகிறது.மலிவு விலை உணவகத்தில், காலை 7:00 முதல் 10:00 மணி வரை இட்லி விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், 159வது வார்டில், குறைந்த எண்ணிக்கையில் இட்லிகள் விற்கப்படுவதால், காலை 9:00 மணிக்கே விற்பனை முடிந்து விடுகிறது. இதனால், காலை உணவருந்த வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "159வது வார்டு, மலிவு விலை உணவகத்திற்கு சரியான இடம் கிடைக்காமல் பெரும் சிக்கலுக்கு மத்தியில் திறந்தோம். சமையல் அறையுடன் சேர்த்து உணவகம் திறக்க இடம் தேடி வருகிறோம். விரைவில் திறக்கப்படும். அப்போது இந்த பிரச்னை தீர்க்கப்படும்' என்றார்.

-நமது நிருபர்-

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (51)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஏப்-201317:24:44 IST Report Abuse
samy தமிழ் நாடு எங்கே போய் கொண்டு இருக்கின்றது. இட்லிக்கும் டாஸ்மார்க்கும் இலக்கு. இன்னும் சாம்பாருக்கும் சட்னிக்கும் இலக்கு நிர்ணயுங்கள். தமிழ் நாட்டில தலை விதி
Rate this:
Share this comment
Cancel
Marian - Coimbatore,இந்தியா
23-ஏப்-201316:16:37 IST Report Abuse
Marian நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒருத்தன் போதாது என்பான். ஆனால் சாப்பாடு மட்டும் போதும் என்பான். எனக்கு தெரிந்து இந்த திட்டம் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு தெரிந்தால் உடனே காப்பி அடிக்கும் திட்டம். ஒரு தாய்க்கு மட்டுமே மனதில் உருவான திட்டம். வாழ்க அம்மா. நாட்டை சுரண்டி தின்னவர்கள் எல்லாம் இன்று பொறாமையினால் வெம்பி போய் விட்டனர்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
23-ஏப்-201316:09:05 IST Report Abuse
Pasupathi Subbian தமிழகம் சென்னையுடன் முடிவடையவில்லை. திருச்சிக்கு எப்போ வரும் .
Rate this:
Share this comment
Cancel
Devakotti Jagadishkumar - chennai,இந்தியா
23-ஏப்-201315:45:58 IST Report Abuse
Devakotti Jagadishkumar வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் இராமலிங்க அடிகள். ஆனால் மக்களை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா. வாழ்க அம்மா
Rate this:
Share this comment
Cancel
மண்புழு - Faraway Land,அன்டார்டிகா
23-ஏப்-201314:41:10 IST Report Abuse
மண்புழு அப்புறமும் ஏன் சிக்னல்களில் கையேந்தும் பிச்சைக்கார்களின் தொந்தரவு?
Rate this:
Share this comment
Cancel
Senthil Kumar - erode,இந்தியா
23-ஏப்-201314:29:05 IST Report Abuse
Senthil Kumar அது எல்லாம் நல்ல திட்டம் தான். பாதிக்க படுறது யாரு தெரியுமா ? ரோட்டோர கடைகள் தெரியுமா
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
23-ஏப்-201314:26:25 IST Report Abuse
Bava Husain இட்லி கட தொறந்தாங்க... அது பாவப்பட்ட மக்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கு. எல்லாம் சரி... அதற்காக இந்த செய்தியால் என்ன பிரயோஜனம்? எப்படிப்பார்த்தாலும் அரசுக்கு இதில் வருவாய் ஒன்றுமில்லை.. பின் எதற்க்காக லட்சம் இட்லி விற்பனை, கோடி இட்லி விற்பனை என்று?... மலிவுவிலை உணவகத்திற்கு விளம்பரமா அல்லது அதிமுகவிற்கு வேறு சாதனைகளே இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
23-ஏப்-201314:13:22 IST Report Abuse
v j antony எப்படி சார் இந்த இட்லி கணக்கு கிடைச்சது ?
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
23-ஏப்-201313:58:46 IST Report Abuse
Shaikh Miyakkhan குடும்ப மக்கள் நலத்தை பார்க்காமல் பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டத்தை நடைமுறை படுத்துவதில் என்றைக்கும் அதிமுக முதன்மையே .மேலும் மக்கள் ஆதரவு உள்ள இந்த திட்டத்தை இனி வரும் காலங்களில் எந்த அரசு வந்தாலும் அதை நீக்க முடியாது சத்து உணவு திட்டத்தை போல் இதுவும் தொடரும் வாழ்த்துக்கள் அன்று சத்து உணவை தொடங்கினார் அந்த சரித்திர நாயகர். இன்று அவர் வழி தோன்றல் தாயுள்ளம் கொண்ட தங்க தாரகை அம்மா அவர்கள் பொது மக்கள் கூலி தொழிலாளர் மட்டுமின்றி, அரசு, தனியார் மற்றும் ஐ.டி., நிறுவன ஊழியர்களும் அதனை பேர்களுக்கும் மலிவு விலையில் உணவு அளிக்கின்றார் . தாயுள்ளம் கொண்ட தாயே நீவிர் வாழ்க நீன் கொற்றம் வழிய வாழ்க
Rate this:
Share this comment
Cancel
RAJAN - chennai,இந்தியா
23-ஏப்-201313:49:23 IST Report Abuse
RAJAN அம்மா, தயவுசெய்து இனி, மிக்சி, கிரைண்டர், டி, வி போன்ற இலவசப் பொருட்களை கொடுக்காமல் இது போல குறைந்த விலையில் உணவுப் பண்டங்கள் கிடைப்பதற்கும், பொழுது போக்கிற்காக ஆங்காங்கே குறைந்த விலையில் அரங்கங்களும், துணிகளை குறைந்த விலையில் சலவை செய்ய இடங்களும் அமைத்துத் தர வேண்டுகின்றோம். அதுபோல ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் செல்ல குறைந்த விலையில் வாகன வசதிகளையும் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம். வேறு என்ன வேண்டும் எங்களுக்கு.. குறையொன்றுமில்லை உங்கள் ஆட்சியில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்