Murder increased in tamil nadu | தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆதாய கொலைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆதாய கொலைகள்

Updated : ஏப் 24, 2013 | Added : ஏப் 22, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆதாய கொலைகள்

குற்றங்களைக் குறைக்க, அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டில், கொலை மற்றும் ஆதாயக் கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குற்றவாளிகள் கண்காணிப்பில் ஏற்பட்ட தொய்வே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில், மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்தில் மிகப்பெரிய வன்முறை, கலவரம் போன்றவை பெரும்பாலும் நடப்பதில்லை. இதனாலேயே, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அமைதிப் பூங்காவாக வெளியில் தெரிந்தாலும், தமிழகத்தில் தினமும் நடக்கும் கொலை, ஆதாயக் கொலை சம்பவங்கள், மக்களின் அன்றாட வாழக்கையில், அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.கடந்த, 2011ம் ஆண்டில், 1,757 பேர், குடும்பத் தகராறு, சொந்த பகை, காதல், பாலின காரணங்கள், அரசியல் காரணங்கள், வரதட்சணை உள்ளிட்ட காரணங்களால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, கடந்தாண்டிலும், நவம்பர் மாத நிலவரப்படி, 1,667 கொலைகள் நடந்துள்ளன.

கொலை சம்பவங்களை பொறுத்தவரை, திடீரென ஆத்திரத்தால் நடக்கும் சம்பவம்; தவிர்க்க இயலாதது என்ற வகையில் வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், பணம் மற்றும் நகைக்காக நடக்கும் ஆதாயக் கொலைகள், ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றன. மக்களிடையே பயத்தையும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தும் இந்த சம்பவங்களைக் குறைக்க, அரசு பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது.ஆதாயக் கொலைகளை பொறுத்தவரை, கடந்த, 2011ம் ஆண்டில், 123 கொலைகளும், கடந்தாண்டில் நவம்பர் மாதம் வரை, 123 கொலைகளும் நடந்துள்ளன. நகை, பணத்திற்காக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும், ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை எடுக்க விடாமல் தடுக்கும், காவலாளிகளும் இந்த வகையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

இதில், 97 கொலைகளுக்கு காரணமானவர்களை, போலீசார் பிடித்துள்ளனர். மற்ற கொலைகள் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில், டிசம்பர் மாதத்தில், குறிப்பிட்ட அளவு, கொலைகள் எண்ணிக்கையில் சேர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர, சொத்துகளை மையமாக வைத்து நடக்கும், கொள்ளை, கன்னக்களவு, கூட்டுக் கொள்ளை, திருட்டு சம்பவங்களை பொறுத்தவரை, முந்தைய ஆண்டை விட குறைந்த அளவே நடந்துள்ளதாக, தமிழக போலீசின் குற்ற ஆவண காப்பக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு, போலீஸ் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தமிழகத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்களை கண்காணித்து குறைக்க, உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதந்தோறும் குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி அவ்வப்போது, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த கூட்டம், அதிகாரிகள் மட்டத்திலும், முதல்வர் தலைமையிலும் நடந்தன. இருந்தாலும், இந்த சம்பவங்களின் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. இதற்கு, பல்வேறு காரணங்கள கூறப்படுகின்றன. குற்றத்தில் ஈடுபட்டு, ஜெயிலில் தள்ளப்பட்டு, அங்கிருந்து வெளியில் வரும் குற்றவாளிகள், தொடர்ந்து கண்காணிக்கப்படுவதில் குறைபாடு இருப்பதாகவும், வெளி மாநிலத்தவர் அதிகளவில் தமிழகத்தில் பரவலாக, பல்வேறு பணிகளுக்காக வரும்போது, அவர்களில் சில சமூக விரோதிகள் கலந்து, அவர்களுடன் சேர்ந்து குற்றங்களை நிகழ்த்துவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பழைய குற்றவாளிகளை கண்காணிப்பது தொடர்பான விஷயத்தில், தமிழக போலீஸ், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, கோவையில், பணியாளர் போர்வையில், நக்சலைட் ஒருவன் பிடிபட்டுள்ள சூழலில், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து, தமிழகத்தில் தங்கியிருப்பவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும் உண்டாகியுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohandhas - singapore,சிங்கப்பூர்
23-ஏப்-201306:43:39 IST Report Abuse
Mohandhas பல கொலைகள் அரசியல், மற்றும் தொழில் போட்டியில் நடப்பவைதான்... பணம் படைத்தவர்கள் பின்னணியில் இருப்பதால் இவைகளை காவல் துறை கண்டுகொள்வதில்லை... சட்டம் ஒழுங்கும், மனசாட்சியும், தண்டனையும் சரியாக இல்லாதவரை ,, இம்மாதிரியான குற்றங்களை தடுக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
23-ஏப்-201302:20:28 IST Report Abuse
தமிழ் சிங்கம் தமிழ்நாடு டெல்லி மாதிரி ஆகி கொண்டு இருக்கிறது என்று சுருக்கமாக சொல்லுங்கள். டெல்லியில் உள்ள அனைத்து விஐபி களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதால், போலிசால் பெண்களை பாதுகாக்க முடிவதில்லை. தமிழ்நாடும் பொருளாதாரத்தில் உயர்ந்து வருவதால், பணக்காரர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல்வாதிகளின் பாதுக்காப்பு போகத்தான் மக்களை பாதுகாக்க முடியும். அதனால் பல ஆதாய கொலைகளை கண்காணிக்க பொலிசிற்கு நேரமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை