Ex judge chandru worry about higher education | உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வருத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வருத்தம்

Added : ஏப் 22, 2013 | கருத்துகள் (7)
Advertisement
உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வருத்தம்

திருச்சி: ""கல்வியில் மாற்றம் கொண்டு வர, நீதிமன்றம் தான் காரணம் என்றாலும், உயர்கல்வி தரமற்று இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு காரணம் என்பது வருத்தமளிக்கிறது,'' என, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறினார்.

திருச்சி தேசிய கல்லூரியின், 94வது ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் வரவேற்றார். சென்னை உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:இந்திய அரசியல் சாசனத்தில் தொழில், வியாபாரம் போன்றவை ஒரு தனி மனிதனுக்கு அடிப்படை உரிமை சட்டமாக்கப்பட்டது. ஆனால், கல்வி அடிப்படை உரிமை சட்டமாக ஆக்கப்படவில்லை. 1991ம் ஆண்டில் ஒரு வழக்கின் தீர்ப்பில், "கல்வி தனி மனித உரிமை' என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் மீது நடந்த விவாதங்களை தொடர்ந்து தான், ஆறு வயது முதல், 14 வயது வரை, கல்வி அடிப்படை உரிமையானது.

"பள்ளி கல்விக்கு மட்டுமே அரசு பொறுப்பு, உயர்கல்வியை பெறுவது தனிப்பட்ட மனிதனின் உரிமை இல்லை' என, நீதிமன்றம் கூறியது. "உயர்கல்வி நிறுவனங்களை தனியார் துவங்கி, அதற்கு அரசு ஆதரவும், அங்கிகாரமும் வழங்கலாம்' என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.இதன் விளைவாக தான், தற்போது வீதிக்கு வீதி, தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழிற் கல்வி கூடங்கள் முளைத்து தரமற்ற கல்வியை அளிக்கும் சூழல் உள்ளது. அரசும் கைகழுவி விட்டதால், உயர்கல்வியை பணம் கொடுத்து தான் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில், 44 ஆண்டுக்கு பிறகு, "கல்வி உரிமை' சட்டமும், 50 ஆண்டு கழித்து, "கட்டாய இலவச கல்வி' சட்டமும், வர நீதிமன்றம் தான் காரணமாக இருந்தது. ஆனால், உயர்கல்வி தற்போது தரமற்ற நிலையில் இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு பொறுப்பு என்பது வருத்தமாக உள்ளது.இந்தியாவில் கல்வியில் உள்ள ஏழை, பணக்காரர் என்ற தடுப்பு சுவர் உடைக்க நீதிமன்றம் எடுத்த முயற்சியால் தான், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கல்வியில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு தான், மத்திய அரசு அதன் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. குழந்தை தொழிலாளர் முறை இன்னமும் நீடிப்பதற்கு, எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் இப்பிரச்னையை எழுப்பாதது தான் காரணம்.படிக்காத ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தியிருப்பது போல், படித்தவர்களுக்கு வேலை வழங்குவதும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.இவ்வாறு சந்துரு பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201308:54:26 IST Report Abuse
Srinivasan Kannaiya பணத்தாசை பிடித்தவர்களின் கோரபிடியில் கல்வித்துறை கிடக்கிறது. யோசித்து பாருங்கள் ஒவ்வொரு துறைக்கும் இத்தனை கல்லூரிகள் தேவையா? . நீதிபதி சொல்வது சரிதான்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-ஏப்-201306:40:02 IST Report Abuse
ஆரூர் ரங ஐம்பது அறுபது மார்க் வாங்கினாவருக்கேல்லாம் வங்கிக் கடன கொடுத்து தரமற்ற பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தால், என்ன பலன்? பாலிடெக்னிக்குகளில் இலவசக் கல்விக்கே சேர ஆளில்லை என்பதும் கொடுமைதானே? எல்லோருமே எஞ்சிநீர்யராகிட்டா கீழே வேலை செய்ய டெக்னீசியன் களுக்கு எங்கே போவது? தனியார் பொறியியல் கல்லூரி நடத்துபவர்களில் மிகப் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளும் பெரும் கொள்ளைப் பணக்காரர்களும்தான் இவர்கள் கல்வி சேவை செய்யவா கல்லூரி துவக்குகின்றனர்? இதனை கோர்ட் துவக்கத்திலேயே தடுத்திருந்தால் பல லட்சம் மாணவர்களின் வாழ்வும், அவர்களது குடும்பங்களின் நிலம், வீடுகளும் காப்பாற்றப் பட்டிருக்கும் , கோர்ட்டுகள் கடமை தவறிவிட்டது உண்மையே
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
23-ஏப்-201305:05:58 IST Report Abuse
Mohandhas எல்லா அரசு அதிகாரிகளுக்கும் ஒய்வு பெற்றதும் தான் ஞானம் பிறக்கும்...அப்புறம் கூப்பிடுகிற விழாக்களுக்கு சென்று தங்களது கருத்தை அள்ளி வீசுவார்கள்... இதில் என்ன பயன் இருக்கிறது... பொறுப்பில் இருக்கும் போது இந்த ஞானம் வராதது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
23-ஏப்-201304:58:47 IST Report Abuse
jagan "உயர்கல்வியை பெறுவது தனிப்பட்ட மனிதனின் உரிமை இல்லை' என, நீதிமன்றம் கூறியது." நீதிமன்றம் சொன்னது 100 சதவிகிகதம் சரி....இவர் சீப் பப்புலாரிட்டிகாக ஏதோ சொல்றார்...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
23-ஏப்-201302:11:20 IST Report Abuse
தமிழ் சிங்கம் படிப்பு அறிவை வளர்த்து கொள்ள மட்டுமே. படித்தவற்றில் மட்டுமே வேலை செய்வேன் என்று குதிக்க கூடாது. எந்த வேலை கிடைத்தாலும், அதை படித்த அறிவை உபயோகபடுத்தி முன்னேற்றமாக செய்யவே படிப்பு. அதனால் படித்த வேலை தான் செய்ய வேண்டும் என்பதில்லை. செருப்பு தைத்தாலும்,விவசாயம் செய்தாலும், அதை எவ்வாறு நேர்த்தியாக செய்யலாம். என்ன இயந்திரத்தை உபயோகபடுத்தலாம் என்று சிந்திக்கவே படிப்பு. படித்துவிட்டேன் கையை கரியாக்க மாட்டேன் என்றால், அது சரியல்ல. ஆழ்ந்து படிப்பவர்கள் கையை மசையாக்கி கொள்வதை ஒரு பிரச்சனையாக எடுத்து கொள்ளமாட்டார்கள். அரைகுறை வாதிகள்தான் பேனாவையும் எடுக்க முடியாமல், ஸ்பானரையும் எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
23-ஏப்-201304:04:45 IST Report Abuse
Baskaran Kasimaniஇது போன்ற ஞானிகள் நாட்டுக்குத்தேவை. எல்லா பொறியாளர்களையும் கூட செருப்பு தைக்க அனுப்பி விடுவார்.....
Rate this:
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
23-ஏப்-201301:03:53 IST Report Abuse
Balagiri சார் உங்களைத்தான் தொடர்பு கொள்ள துடித்துகொண்டிருந்தேன், மசாலாச்சி என்ற பெயரில் நீதிபதிகளுக்கும் கலக்டர்களுக்கும் அரசு செலவில் எதற்கு அடிமைகளை சுதந்திர இந்தியாவில் உருவாக்குகின்றீர்கள்? மீன்குழம்பு நீதிபதி விவகாரம் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை