E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இந்தியாவுடனான நட்புறவு: ராஜபக்ஷே பெருமிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
23:40

கொழும்பு:இந்திய அரசுடனான நட்புறவு நல்லமுறையில் உள்ளதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

இலங்கையில், 2009ல் நடந்த இறுதி கட்ட சண்டையின் போது போர் குற்றம் நடந்ததாகவும், சரணடைந்த ஏராளமான விடுதலை புலிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள், இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்துக்கு சுற்றுலா வரும் இலங்கை பயணிகள் மீது, சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால், இலங்கை தூதரகத்தை, கேரளாவுக்கு மாற்றலாமா, என அந்நாட்டு அரசு யோசித்து வருவதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள், இலங்கை மீது அதிருப்தி கொண்டிருந்தாலும், இந்தியாவுடனான ஒட்டு மொத்த உறவு சுமுகமாகவே உள்ளது. தமிழகத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் இலங்கையில் சுற்று பயணம் செய்த போது, இங்கு மேற்கொள்ளப்படும் மறுவாழ்வு பணிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர்.இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தேர்தல் நடத்தும் சூழல் உள்ளது. எனினும் அங்கு தேர்தல் நடத்துவதற்குரிய சூழல் மேம்படுத்தப்படும்.இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.

எரிசக்தித் துறை அமைச்சர் பவித்ரா குறிப்பிடுகையில், ""கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசுடன் அமைக்கப்பட உள்ள சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமான பணிகள், ஜூலை மாதம் துவங்கும். இதன் மூலம் இலங்கை மின் தொகுப்புக்கு, 2016ல், கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்,'' என்றார்.

மட்டகளப்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில், மறுவாழ்வுத் துறை அமைச்சர் சந்திரசிரி கஜதீரா கூறியதாவது:மாஜி விடுதலை புலிகள், 180 பேரிடம் நல்ல விளையாட்டு திறமை இருப்பதை கண்டறிந்துள்ளோம். கராத்தே, கால்பந்து, நீச்சல், துப்பாக்கி சுடுதல் போன்ற திறமைகள் இவர்களிடம் உள்ளதால், ஆசிய விளையாட்டு போட்டிக்கு இவர்களை தேர்வு செய்ய உள்ளோம்.துப்பாக்கி சுடும் போட்டியில் தேர்ச்சி பெற்ற,நான்கு பேர் உள்பட, 18 பேரை, கொழும்பில் உள்ள விளையாட்டு விடுதிக்கு அனுப்ப உள்ளோம். இவர்கள் ஆசிய விளையாட்டுக்காக பயிற்றுவிக்கப்படுவர்.இவ்வாறு கஜதீரா கூறினார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (36)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
23-ஏப்-201315:18:57 IST Report Abuse
Rangarajan Pg இலங்கையை விடுதலை புலிகளிடமிருந்து காப்பாற்றி அங்குள்ள தமிழர்களை ஓரளவு பாதுகாப்பாக வைத்திருக்கும் இந்த ராஜபக்ஷேவை பாராட்டியே ஆக வேண்டும். விடுதலை புலிகள் இவரை விட கொடூரமானவர்கள். பல தமிழர்களை கொன்று குவித்தவர்கள்.
Rate this:
33 members
0 members
11 members
Cancel
Zack Sakthi - london,யுனைடெட் கிங்டம்
23-ஏப்-201315:12:21 IST Report Abuse
Zack Sakthi உனக்கும் உன் அல்ல கைகளுக்கும் கடவுளோட ஆப்பு வெகு தொலைவில் இல்லை
Rate this:
1 members
0 members
15 members
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201313:09:12 IST Report Abuse
Rajasekaran Palaniswamy பின்னே... தலை வாழை இலை போட்டு, அறுசுவை உணவையும் படைத்து, அதையும் எடுத்து ஊட்டிவிட அம்சமான பெண்ணையும் கொடுத்தவர்களை பற்றி பெருமைகொள்ள தானே வேண்டும்.
Rate this:
0 members
0 members
10 members
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23-ஏப்-201312:51:38 IST Report Abuse
kumaresan.m " வெளி உலகத்திற்கு இப்படி ஒரு பிட்டை போட்டுவிட்டுடு .....ராஜா தந்திரத்துடன் சீனாவுடன் கைகோத்து கிட்டு வரும் காலத்தில் இந்தியாவிற்கு ஆப்பு வைக்க போற இது தெரியாத வட மாநில அரசியல்வாதிகள் உன்னை ரொம்ம நல்லவன்னு கூப்பிட்டு விருந்து வைக்கிறார்கள் ".....ஹிட்லர் மற்றும் முசோலி பற்றி வரலாற்றில் படித்து இருக்கோம் ....ஆனால் இன்று உன் உருவில் அவர்களை பார்க்கிறோம் "
Rate this:
1 members
0 members
24 members
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
23-ஏப்-201312:20:37 IST Report Abuse
Ambaiyaar@raja ஆமாம் இந்தியாவை சேர்ந்த 650 மீனவர்களை சுட்டு கொன்ற பிறகும் உனக்கு உதவியா இன்னும் இருக்கும் சொரணை இல்லாத நாடு என்பதை தான் இப்படி சொல்றீயா படு பாவி. இது சொரணை கெட்ட நட்பு. அதனால் தான் தமிழன், மீனவன், எல்லாம் பாதிக்கப்பட்ட கேடு கெட்ட நட்பு எங்களுக்கு.
Rate this:
1 members
0 members
14 members
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
23-ஏப்-201311:30:30 IST Report Abuse
Thangairaja அண்டை நாடுகளுடன் நல்லுறவுடன் இருப்பது வரவேற்கத்தக்கதே....... அதற்கும் இந்த ராஜபக்ஷே பெருமிதப்படுவதற்கும் பொருத்தமாக இல்லை. ரத்த குற்றவாளிக்கு அதற்கான தகுதி இல்லை.
Rate this:
0 members
0 members
9 members
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
23-ஏப்-201310:24:00 IST Report Abuse
pattikkaattaan தமிழர்கள் பாதிபேரை நாட்டை விட்டு துரத்தினான் ... மீதி பேரை கொன்றான் ... இப்போ என்னாமா நடிக்கிறான் ... உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா ...
Rate this:
1 members
0 members
13 members
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
23-ஏப்-201310:10:38 IST Report Abuse
BLACK CAT இவன் முஷாரப் இரண்டு ...
Rate this:
0 members
1 members
9 members
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
23-ஏப்-201309:50:20 IST Report Abuse
villupuram jeevithan தமிழகத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் இலங்கையில் சுற்று பயணம் செய்த போது, இங்கு மேற்கொள்ளப்படும் மறுவாழ்வு பணிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர்??
Rate this:
0 members
0 members
5 members
Cancel
Sanjay Kumar - சென்னை,இந்தியா
23-ஏப்-201309:19:53 IST Report Abuse
Sanjay Kumar சோனியாவின் அடிமை பொலம்பி தள்ளுது.
Rate this:
1 members
0 members
9 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.