வைகோவுக்கு பிரதமர் கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : "துபாயில் தவித்த, 19 இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை: துபாயில் உள்ள, 19 இலங்கை தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப, துபாய் அரசு திட்டமிட்டுள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும், உயிர்க் கொலைக்கும் ஆளாவர். எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல், உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வைகோ இம்மாதம், 2ம்தேதி கடிதம் எழுதினார்.
இது தொடர்பாக, வைகோவுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தில், " ஐ.நா., மனித உரிமை கமிஷன் மூலம், 19 இலங்கை தமிழர்களை, துபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, வெளியுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது' எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Freethinker - Chennai,இந்தியா
23-ஏப்-201307:20:04 IST Report Abuse
Freethinker ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டும் வந்து வாக்காளர்களையும் பொதுமக்களையும் சந்திக்கும் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் தேர்தல் முடிந்த அடுத்த நாளே மக்கள் மத்தியில் இருந்து காணாமல் போகும் இன்றைய நிலையில் மதிமுக மட்டுமே மக்களுக்காக தொடர்ந்து ஓய்வின்றி போராடி வருகிறது. வைகோ வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே ஒரு சிறப்புதான். எவ்வளவு போராட்டங்கள்... முல்லை பெரியாறு, மூவர் தூக்கு விவகாரம், கெயில் நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு , தூத்துக்குடி sterlite எதிர்ப்பு போராட்டம் என்று ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்காகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடுகிறார். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
23-ஏப்-201307:16:08 IST Report Abuse
பொன்மலை ராஜா இலங்கை நமக்கு, 'அந்நிய நாடு', 'நட்பு நாடு' என்று கூறிக் கொண்டிருந்த இந்தியா எப்படி மாறியது ... ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகியதால் ... ஏதேதோ வித்தியாசமானக் கோரிக்கைகளை பார்த்துப் பயந்து கோரிக்கைகளைக் கூட்டணித் தலைமைக்கு முடிவெடுக்க அனுப்பிக் கொண்டிருந்த நிலை மாறிவிட்டதோ ... மக்கள் நலனை முன்னிறுத்தும் கோரிக்கைகளைப் பார்த்து அங்கிருக்கும் அனைவரும் செயலில் இறங்கிவிட்டனரோ ... "உங்கள் கடிதம் கிடைத்தது" என்று பதில் அனுப்பிக் கொண்டிருந்த பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அது சம்பந்தமான உரிய விளக்கங்களை அளிக்கும் கடிதங்கள் அனுப்பப்படுகின்றனவே ... வைகோவின் தளராத நம்பிக்கையுடன் கூடிய சமயோசிதமான அணுகுமுறையை பாராட்டத்தான் வேண்டும் ... அத்துடன் வைகோவின் கோரிக்கைகளில் உள்ள அடிப்படை நியாயத்தை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கிய பிரதமரையும் ( கடந்த சில ஆண்டுகளில் தமிழினம் சந்தித்த கொடூரமானக் கசப்பான அனுபவங்களை சற்று மறந்து ஒதுக்கி வைத்து விட்டு ) பாராட்டி நன்றி சொல்லத்தான் வேண்டும் ... பிரதமரைப் புரிந்து வைத்துள்ள வைகோவும் வைகோவைப் புரிந்து வைத்துள்ள பிரதமரும் இணைந்து செய்திடும் நன்மைகள் அதிகமாகட்டும் ... வெளியுறவுத் துறைக்கும், ஐ.நா.மனித உரிமைக் கமிசனுக்கும் துபாய் அரசுக்கும் யஸ்வந்த் சின்ஹாவிற்கும் நன்றி ...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஏப்-201302:18:03 IST Report Abuse
தமிழ்வேல் ஆஸ்ட்ரேலியா வுக்கா ?
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
23-ஏப்-201302:05:09 IST Report Abuse
jagan வை கோ புலிகள் சொத்த நல்ல ஆட்டய போட்டுட்டார்....இவங்க துபைல, வை கோவோட பினமிய இருக்கிறவங்க போல......அதான் வேற எங்கேயோ கொண்டு போக பார்க்கிறார்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்