எம்.எல்.ஏ.,வை அ.தி.மு.க.,விற்கு அனுப்பி வைக்க தயார்: விஜயகாந்த் அறிவிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

""நில அபகரிப்பு வழக்கில், கைதான, எம்.எல்.ஏ., அ.தி.மு.க.,விற்கு சென்று விட்டால், திருவள்ளூர் மாவட்டமே அங்கு சென்று விடும் என்று நினைப்பது, முட்டாள் தனம். அவரை நானே, அ.தி.மு.க., விற்கு அனுப்பி வைக்கிறேன்,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறினார்.


விஜயகாந்த் "டென்ஷன்':

நிலஅபகரிப்பு தொடர்பாக, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க, விஜயகாந்த், நேற்று காலை, 11:30 மணிக்கு, சிறைக்கு வந்தார். அவரது கார், சிறை வளாகத்திற்குள் செல்ல, சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், தே.மு.தி.க., வினர், சிறைக்காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி கிடைக்காததால், விஜயகாந்த் சிறைக்கு, நடந்து சென்றார். அவருடன், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ., வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் மட்டும், அனுமதிக்கப்பட்டனர்.


எம்.எல்.ஏ., கண்ணீர் :

வெயிலை சமாளிக்கும் வகையில், தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழம் ஆகியவற்றை, சிறையில் இருக்கும் அருண் சுப்ரமணியத்துக்கு, எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து சென்றனர். சிறையில் அரைமணிநேரம், அருண் சுப்பிரமணியனை, விஜயகாந்த் சந்தித்து பேசினார். கைது நடவடிக்கையின் போதும், சிறையில் நடத்தப்படும் விதம் குறித்தும், கண்ணீர் கசிந்தபடி, அருண் சுப்பிரமணியன் விவரித்ததாக கூறப்படுகிறது.

சந்திப்புக்கு பின், வெளியே வந்த விஜயகாந்த், கூறியதாவது: நில அபகரிப்பு வழக்கில், அருண் சுப்ரமணியத்தை கைது செய்துள்ளனர். அவர், சட்டப்படி வழக்கை சந்தித்து வெளியில் வந்தால், மீண்டும் புது வழக்கு போடுவர். என் மீதும், 32 வழக்குகள் போட்டுள்ளனர். "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கேற்ப, இங்கு மாற்றங்கள் வரும். போலீசார், மக்களை காக்கும் பணி செய்யாமல், காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர். நான் போகும் இடத்தில் எல்லாம், போலீசாரை குவிக்கின்றனர். எனக்கோ, மக்கள் பாதுகாப்பிற்கோ, அதை செய்யவில்லை. நான் என்ன பேசுகிறேன், என் மீது, இன்னும் எத்தனை வழக்குகள் போடலாம் என்பதற்காகவே, இதை செய்கின்றனர்.

சிறையில் இருப்பவர்கள், அ.தி.மு.க., விற்கு சென்றுவிட்டால், வழக்குகள் எல்லாம் வாபஸ் ஆகிவிடும். அருண் சுப்ரமணியன், நிலத்தை அபகரித்து விட்டதாக வழக்கு போட்டிருக்கின்றனர். அப்படி இருந்தால், அந்த இடத்தை இடித்து, அரசு தேவைக்கு பயன்படுத்த வேண்டியதுதானே? அருண் சுப்ரமணியம், அ.தி.மு.க.,விற்கு சென்றுவிட்டால், திருவள்ளூர் மாவட்டமே அங்கு சென்று விடும் என்று நினைப்பது, முட்டாள்தனமானது. அவரை நானே, அ.தி.மு.க.,விற்கு அனுப்பி வைக்கிறேன்; வைத்துக் கொள்ளுங்கள்.


கூட்டணி உண்டா?

கருணாநிதி பெரியவர் என்பதால், மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி குறித்து, அப்போது பார்த்து கொள்ளலாம். எந்த கட்சியோடாவது கூட்டணி வைத்தால் தான், ஜெயிக்க முடியுமா? கூட்டணி வைக்காமல் ஜெயிக்க முடியாதா?கோர்ட் உத்தரவிட்டபிறகும் தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. கோர்ட் உத்தரவை, எந்த மாநில அரசும் பின்பற்றவில்லை. கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து தமிழக அரசும் அப்படித் தான் நடந்துக் கொள்கிறது. அடுத்த தேர்தலில், ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்க மாட்டார்.இவ்வாறு, விஜயகாந்த் கூறினார்.

-நமது நிருபர்-

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
23-ஏப்-201310:05:33 IST Report Abuse
villupuram jeevithan நீங்களும் போவத்தயாரா?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
23-ஏப்-201309:49:17 IST Report Abuse
villupuram jeevithan போலீசார், மக்களை காக்கும் பணி செய்யாமல், காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர்??
Rate this:
Share this comment
Cancel
Jawahar - Erode,இந்தியா
23-ஏப்-201309:46:19 IST Report Abuse
Jawahar விஜயகாந்த் டாஸ்மாக் பத்தி பேசறாரு.. செம காமடி.
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
23-ஏப்-201309:34:52 IST Report Abuse
Ramasami Venkatesan எழுதி கொடுத்த வசனத்தை பேசி பழகினவர் ஆச்சே. தானாகவே சிந்தித்து பேசுவது கடினம்தான். சினிமா வசனம் என்று கருதி இவர் கூறுவதை விட்டு விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Begam - Coimbatore,இந்தியா
23-ஏப்-201309:31:13 IST Report Abuse
Begam அய்யய்யோ இந்தாள் வேற... இருக்கற பிரச்னை போதாதுன்னு அப்பப்ப வந்து காமெடி பண்ணிக்கிட்டு.
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
23-ஏப்-201309:18:48 IST Report Abuse
Karthi பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு அனுப்பாதீர்கள். அங்கே மாமியார் கொடுமை அதிகம். மாமியார் மேல் வழக்கு தொடுக்க முடியது,
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
23-ஏப்-201309:17:40 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் நடந்தால் இரண்டடி.. இருந்தால் நான்கடி.. படுத்தால் ஆறடி போதும்..
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
23-ஏப்-201309:14:12 IST Report Abuse
Skv ஒரு கட்சியிலே நின்னு ஜெயிச்சுட்டு வெற்றிக்கு பிறகு ஆளும் கட்சிக்கு தாவறது ரொம்பவே கேவலமானது, அசிங்கமானது. போரவாளும் கேவலம், அவாளை மேஜாரிட்டிக்காக செர்த்துக்கரவாலும் மகா கேவலமானவாளே. திரு vk நீங்களும் சித்த பொறுமையா இருக்கணும். சினிமாலே உதைச்சா காசு ரெண்டு பேருக்கும். கொடுத்தவன் + வாங்கினவன். ஆனால் ரியல் ஷோ லே அடிச்சு உதைச்சா போடா போ ன்னு பூடுவான். இனிய உளவாக இன்னாத குரல் குறளை மனதில் கொண்டால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
23-ஏப்-201308:54:28 IST Report Abuse
Nalam Virumbi விஜயகாந்த் மாதிரி ஆட்களெல்லாம் அரசியல்வாதிகளாக உள்ளது நமது நாட்டின் சாபக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
23-ஏப்-201308:46:11 IST Report Abuse
sundaram அண்ணே விசயராசு அண்ணே, ஒரு வார்த்தை சொன்னாலும் நாக்கு மேல பல்லை போட்டு தெம்பா சொல்லி இருக்கீங்க. இதுமாதிரி சொல்றதுக்கே முதல்ல ஒரு “தில்” வேணும். கலைஞரை சந்திச்சப்புறம் அது உங்களுக்கு ரொம்பவே வந்திடுச்சு. உங்களோட புது தலிவரு அடிக்கடி "சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்"ன்னு சொல்லுவாரு. நீங்களும் அதே மாதிரி இப்போ சொன்னதை செயலாக்கி காட்ட இன்னும் இருக்குற பத்து இருபது எம் எல் ஏக்களை கலைஞர் தலைமையில் ஒரு வழியனுப்பு விழா எடுத்து அதிமுகவுக்கு அனுப்பிட்டு நீங்களும் அப்படியே “இன்றே அணிவேன் என்றும் அணிவேன் ன்னு” கருப்பு சட்டை போட்டுக்கிட்டு கலைஞர் கூட ஐக்கியமாயிடுங்க. எப்படி ஆரம்பிக்கறதுன்னு கூச்சப்படவோ யோசிக்கவோ வேண்டாம். குணவதி குசுப்பம்மாள் கூட மகாபலிபுரம் ஜி ஆர் டி கிரான்ட் டேஸ் ல ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. நிருபர்கள் கேட்டா நாங்க இருவரும் கலைத்துறையை சார்ந்தவங்க. புது படம் சம்பந்தமா கதை டிஸ்கஸ் பண்ணினோம்ன்னு சொல்லிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்