Advertisement
மூன்றாவது அணி?முதல்வர் ஜெ.,வுடன் உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் திடீர் சந்திப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

22 ஏப்
2013
23:50
பதிவு செய்த நாள்
ஏப் 22,2013 23:44

முதல்வர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், நேற்று மதியம், திடீர் என, சந்தித்து பேசினார்; சந்திப்பு, 25 நிமிடங்கள் நடந்தது.தேசிய அளவில், மூன்றாவது அணி அமைப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ""மூன்றவாது அணி அமைய பிரகாசமான வாய்ப்பு உள்ளது,'' என, அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

வன்னிய இளைஞர் சித்திரை முழு நிலவு கலாசார பெருவிழா, இம்மாதம், 25ம் தேதி, மாமல்லபுரத்தில் நடக்கிறது. விழாவை துவக்கி வைக்க, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், நேற்று காலை, 10:55 மணிக்கு, தனி விமானத்தில், லக்னோவில் இருந்து, சென்னை வந்தார்.

கிண்டி ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலில், நடந்த துவக்க விழாவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ""வறுமை ஒழிப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட, எட்டு குறிக்கோள்களை, 2015ல், உலக நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என, ஐ.நா.,சபை அறிவித்துள்ளது. உ.பி., மாநிலத்தில், அந்த எட்டு குறிக்கோள்களை, அகிலேஷ் யாதவ் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.

இளைஞர்கள் பங்களிப்பு:



விழாவை துவக்கி வைத்து, அகிலேஷ் யாதவ் பேசியதாவது:தேசிய அரசியலில், முலாயம்சிங் யாதவ் கரத்தை வலுப்படுத்த, தென் மாநிலத்தில் இருந்து என் பயணத்தை துவக்கியுள்ளேன். இளைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். பிரதமர் வேட்பாளர் அவர், இவர் என, தேசிய கட்சிகள் அறிவித்து வருகின்றன. சாதாரண மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்பவர் தான், பிரதமராக வர முடியும்.ஏழை, எளிய மக்களின் வலியை உணர்ந்து, அவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவர் தான் பிரதமராக வர முடியும். இந்திய அரசியலில், இளைஞர்களின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் ஆதரவுடன், உ.பி., முதல்வரானேன். காலங்காலமாக, அரசியல் கட்சிகள், இளைஞர்களை புறக்கணித்து வருகின்றன. இளைஞர்களுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். என் தந்தை முலாயம்சிங் யாதவ், இந்தியாவை வழிநடத்தி செல்ல வேண்டும் என்றால், இளைஞர்களின் ஆதரவும், பலமும் தேவை. இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால், நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் உருவாக்க முடியும்.

தென் மாநிலம் எனக்கு புதுசு அல்ல. பெங்களூரில் நான் படித்தேன். தென் மாநில மக்களின் பழக்க வழக்கம் மட்டுமல்ல; அவர்களின் உணவு பழக்கமும் என்னை கவர்ந்துள்ளது. உ.பி., 21 கோடி மக்கள் கொண்ட மிகப் பெரிய மாநிலம். நான் முதல்வர் பொறுப்பேற்ற பின், பல சவால்களை சந்தித்து வருகிறேன்.இளைஞர்கள் உறுதிமொழி ஏற்று உழைத்தால், தமிழக அரசியலில், மாற்று சக்தியாகவும், ஆளும் சக்தியாக வரக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

மூன்றாவது அணி:



அகிலேஷ் யாதவ் பேட்டியில் கூறியதாவது:தேசிய அளவில் மூன்றாவது அணி கண்டிப்பாக அமையும். மூன்றாவது அணி அமைய, பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம், காங்கிரஸ், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுக்கவில்லை. காங்கிரஸ், பா.ஜ., கொள்கைகள், மக்களுக்கு எதிராகவே உள்ளன. முதல்வர் ஜெயலலிதாவை, மரியாதை நிமித்தமாக சந்திக்கிறேன். மூன்றாவது அணி பேச்சு எழுந்தால், என் தந்தை முலாயம்சிங் யாதவ், பேசலாம்.உ.பி., மாநிலத்தில் நாங்கள் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளை, வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறோம். உ.பி.,யில் சட்டம் - ஒழுங்கு மிக அருமையாக உள்ளது. வேலை வாய்ப்பின்மை, நாட்டின் எல்லை பிரச்னை, பொருளாதார சீர்குலைவு போன்ற பிரச்னைகளுக்கு, காங்கிரசின் தவறான வழிகாட்டுதலே, காரணமாக உள்ளது.காங்கிரஸ், பா.ஜ., ஆகிய இரு அணிகளுக்கு பதிலாக, மாற்று அணி அமையும். அதற்கான முதல் கட்ட முயற்சியை, சமாஜ்வாதி கட்சி எடுக்கும். இரண்டு தொழில் கூட்டமைப்பின் சார்பில், பிரதமர் வேட்பாளராக ராகுலையும், மோடியையும் நிறுத்துகின்றனர். இந்தப் போட்டி நன்றாகவே இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

இரு முதல்வர்கள் சந்திப்பு:



தலைமை செயலகத்தில், பகல், 2:00 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதாவை, அகிலேஷ் யாதவ் சந்தித்தார். 25 நிமிடங்கள் பேசிய அவர், 2:27 மணிக்கு, வெளியில் வந்தார். பத்திரிகையாளர்களை பார்த்து, கை கூப்பி வணங்கிவிட்டு, காரில் ஏறி பறந்து விட்டார்.தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக லேப்டாப்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மற்ற இலவச சிறப்பு திட்டங்கள் வழங்கப்படுவது குறித்தும், தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் ஜெயலலிதாவுடன், அகிலேஷ் யாதவ் ஆலோசனை நடத்தியாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

-நமது நிருபர்-


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - DOHA,கத்தார்
24-ஏப்-201300:07:50 IST Report Abuse
Raj அய்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களே நீங்கள் உண்மையிலேயே மாயுரமா கொஞ்சம் விவசாயம் எப்படி இருக்கு என்று பர்ர்த்தால் தெரியும் கருணாவின் ஆட்சி எப்படி என்று . 3 போகம் விளைந்த நிலம் இன்று வறண்ட பாலை வனமாக உள்ளது மனசாட்சி படி கருத்து பதியவும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஏப்-201308:48:36 IST Report Abuse
Swaminathan Nath இந்த மூன்றவது அணி எனபது இந்தியாவில் ஒரு செய்தி மட்டும், இவர்களால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது... காங்கிரஸ் இல்லை பிஜேபி வருவது இந்தியாவிற்கு நல்லது. மக்கள் இவர்களை நம்பி வாக்கு அளித்தால், கெட்ட காலம் தான். பொருது இருந்து பார்க்கலாம்.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23-ஏப்-201308:38:12 IST Report Abuse
kumaresan.m " திருமண நாட்கள் நிச்சயக்கபடவில்லை மற்றும் திருமணத்திற்கான வேலைகள் நடைபெறவில்லை மற்றும் முக்கியமாக மணப்பெண் ...மணமகன் ...யார் என்றே தெரியவில்லை? ....அதற்குள் தேன் நிலவிற்கு செல்ல ஆசைபாட்டல் எப்படி இருக்குமோ ? அது போல் உள்ளது இவர்களின் 3-வது அணியின் செயல்பாடு "
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
KKsamy - Jurong,சிங்கப்பூர்
23-ஏப்-201308:07:03 IST Report Abuse
KKsamy மரியாதையை நிமித்தமான சந்திப்புதான் ஒத்துகொள்கிறேன் இந்தியாவிலேயே மோசமான மாநிலம் எது என்று போட்டி வைத்தால் முதலிடத்துக்கு கடும் போட்டி போடும் இரு மாநில முதல்வர்கள் அதுவும் பாராளுமன்ற தேர்தல் பக்கத்தில் வரும் பொது சந்தித்தால்.............. இதே அகிலேஷ் கருணாவை சந்தித்தித்து இருந்தால் சோம்பு சேகரன் ஒரு நாலு பக்க வசனம் எழுதியிருப்பார். கருனவுகேன்றே நிறைய எழுதி ஸ்டாக் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறன். குப்புற உழுந்தாலும் மீசையில மண் ஒட்டல பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்மாளுக்கு கரெக்ட்ட பொருந்தும்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
23-ஏப்-201307:56:01 IST Report Abuse
Loganathan பிரதம மந்திரி பதவி போட்டியில் மோடி ராகுலுடன் அகிலேஷும் இணைந்து விட்டார்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
23-ஏப்-201307:36:54 IST Report Abuse
Prabhakaran Shenoy மூன்றாவது அணியா (எ) மூன்றாம் தர அணியா? சந்தர்ப்பவாதிகளின் கூடாரம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
23-ஏப்-201307:00:40 IST Report Abuse
T.R.Radhakrishnan உ.பி.,யில் சட்டம் - ஒழுங்கு மிக அருமையாக உள்ளது. .........பேஷ், பேஷ்......எப்படி தமிழகத்தில் மின் வெட்டு மாதிரியா?........நம்பகத்தன்மை குறைவாக உள்ள இரு அரசியல் கட்சிகளின் சந்திப்பு.........
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
23-ஏப்-201306:21:36 IST Report Abuse
Srinath இதென்ன இது. இவர் கும்பிடுவதைக் கண்டால் கூட்டணி குறித்துப் பேச வந்தது போலத் தெரியவில்லை. அம்மையாரின் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து வந்தது போலல்லவோ தெரிகிறது.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201305:41:16 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி ஒருவேளை தேர்தல் வரை அம்மா 3 வது அணியை பிடிச்சுகிட்டா கருணா என்ன செய்வார்?
Rate this:
33 members
0 members
21 members
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
23-ஏப்-201305:21:54 IST Report Abuse
K.vijayaragavan அட ஆண்டவா என்னடா இது சோதனை? கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை போல் இருக்கிறது.மூன்றாவது அணி?அதுவும் யாரை நம்பி?ஜெயாவை நம்பியா? முலாயம் சிங்கிற்கு மூளை குழம்பி விட்டதா? ஆசை யாரை விட்டது? ஆனால், தம்பி அகிலேஷை பாராட்டியே தீர வேண்டும். அதிமுக அடிமைகளை போலவே கச்சிதமாக குனிந்து இருக்கிறாரே?சபாஷ். கூட்டணிக்கான முதல் தகுதி வந்து விட்டது. அடுத்த முறை இன்னும் நன்றாக குனிந்து, அதற்கடுத்த சந்திப்பில் சாஷ்டாங்க நமஸ்காரம் தான். ஆனால், என்ன செய்தாலும், உன் இடுப்பு பத்திரம். மொத்தத்தில் , மகனே.இனி உனக்கு ஏழரை தாண்டி.
Rate this:
87 members
1 members
216 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.