சுடாதீங்க: இலங்கை கடற்படையிடம் இந்தியா கெஞ்சல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"இந்தியா- இலங்கை இடையேயான கடல்எல்லையில், சில நேரங்களில், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும் போது, மனிதாபிபமான முறையில் நடந்து கொள்ளுங்கள் என, இலங்கை அரசை, அவ்வப்போது வலியுறுத்தி வருகிறோம்' என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.

லோக்சபாவில் நேற்று, கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் பதிலளித்த, அமைச்சர் அந்தோணி தெரிவித்ததாவது:இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லையில், அவ்வப்போது இரு நாட்டு மீனவர்களும் அத்துமீறி நுழைந்து விடுவது வாடிக்கையாக நடந்து வந்ததால், 2008ம் ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.அதன்படி, அத்துமீறும் அல்லது எல்லையைத் தாண்டும் இரு தரப்பு மீனவர்களின் படகுகள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என, முடிவாகியது. எனினும், இலங்கை அரசால் குறிப்பிட்டப்பட்ட முக்கியமான பகுதிகளுக்குள், இந்திய படகுகள் நுழைய கூடாது எனவும் முடிவாகியது.

இந்த மாத துவக்கம் முதல், இப்போது வரை, 125 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. இதுபற்றி அறிந்த உடன், இலங்கை அரசை தொடர்பு கொள்ளும் இந்திய வெளியுறவுத்துறை, இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.பாக் ஜலசந்தி பகுதியில், இந்திய கடற்படை, கடலோர காவல் படை கப்பல்கள், "ஆபரேஷன் தாஷா' என்ற பெயரில், சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து, மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தி வருகின்றன.இவ்வாறு, அந்தோணி தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், "போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும், இத்தாலிய வர்த்தகர், ஒட்டாவியோ குட்ரோச்சி வழக்கு, கைவிடப்பட்டதாக கருதப்படுகிறது. ஏனெனில், 20 ஆண்டுகளாக அவரை நாடு கடத்த முடியாததால், இந்நிலைக்கு வந்துள்ளோம்' என்றார்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
27-ஏப்-201317:08:12 IST Report Abuse
R Bala Sundaram எந்த விஷயத்திலும் யாராக இருந்தாலும் நேமையாக நடக்க வேண்டும். காங்கிரசை பொறுத்தவரை தமிழக மக்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவே தெரிகிறது ..இது ஒன்றும் நல்லதிற்கு இல்லை பின்னாளில் பதில் சொல்லவேண்டி இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
muthu kumar - mobo,ஆப்கானிஸ்தான்
25-ஏப்-201316:31:37 IST Report Abuse
muthu kumar ஸ்ரீ லங்கா வய் குறை சொல்லி ஒரு ப்ரிஒயொஜன்ம் இல்ல நம்ம அரசியல் தலைவர்களை கட்டைல போடணும் வெக்க கெட்ட ஜென்மம் யாரு இவங்கத
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
23-ஏப்-201309:33:48 IST Report Abuse
Karthi போரை அடிப்படியாக கொண்ட பகவத் கீதையும், மகாபாரதமும் படித்த ஹிந்துகளின் வீரத்தை எவன் எவனோ ஆண்டு அவர்களை அடிமைபடுத்தி கோழைகளாக ஆக்கி வைத்துள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel
INTHIRAN - singapore,சிங்கப்பூர்
23-ஏப்-201309:29:20 IST Report Abuse
INTHIRAN எல்லாம் சீனாக்காரன் மேல் உள்ள பயம் தான் போல...... பேஷ் பேஷ் நன்றாக தொடை நடுங்குது காங்கிரஸ் அரசுக்கு...
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
23-ஏப்-201309:28:39 IST Report Abuse
p.manimaran மன்மோகன் இது உமக்கு சரியா படுதா???
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
23-ஏப்-201309:11:08 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இந்தமாதிரியான பச்ச மண்ணுகளை எல்லாம் ராணுவ அமைச்சர் ஆக்கினால் இதுதான் நிலைமை..
Rate this:
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
23-ஏப்-201309:04:30 IST Report Abuse
Wilsonsam Sp ஒரு வழக்கு முடிய 20 ஆண்டு ஆஹும்னு சொல்ற சிங்கம் போல இருக்கிற இந்தியாவ பூனைபோல் இருக்கிற இலங்கைடம் சுடாதிங்கனு கெஞ்சுற இதெல்லாம் கேவலமா இருக்கு இதுல பேட்டி வேறு
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
23-ஏப்-201308:59:54 IST Report Abuse
Nalam Virumbi இத்தாலியப் பெண்மணி இந்த நாட்டிற்கு வந்தது நமது தலை விதி. அவர் வரவில்லையெனில் கொட்ரோசியே யாரென்று நமக்குத் தெரியாது. இத்தாலியப் பெண்மணியை காங்கிரஸ் தலைவியாக ஏற்றதும் நமது நாட்டின் சாபக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
siva - Chennai,இந்தியா
23-ஏப்-201308:35:24 IST Report Abuse
siva ஐய்யா, தயவுசெய்து சுடாதீங்க, உங்க கால் விரல இழுத்து புடிச்சு கேக்குறோம், சுடாதீங்க ஐய்யா தெய்வமே, தர்ம பிரபு, எசமான், எங்க ராசா விழுந்து கும்பிட்டு கேக்குறோம் சுடாதீங்க..... ஐயா......... சாமி................
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23-ஏப்-201307:58:13 IST Report Abuse
kumaresan.m " இப்படி கேஞ்சிகிட்டே இருங்க ....நாம திருப்பி ஏன் சுடக்கூடாது? எல்லை மீறும் இலங்கை மீனவர்களையும் மற்றும் மனிதாபிமானம் அற்ற இலங்கை கடற்படை ராணுவத்தை என்பது தான் எல்லோருடையும் டௌட் ..... ஒரு புறம் சீனக்காரன் உள்ளே வரான் ...மற்றொரு புறம் பாகிஸ்தான் காரன் உள்ளே வரான் ...பத்தாக்குறைக்கு இலங்கை வேறு ....இந்திய அரசு ரொம்ம நல்லவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கு றாங்க என்று உலக நாடுகள் பேசிக்கொள்வது காதில் விழவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்