Robert Vadra gets clean chit in Haryana land deals | ராபர்ட் வதேரா மீதான நில முறைகேடு புகாரில் உண்மையில்லை| Dinamalar

ராபர்ட் வதேரா மீதான நில முறைகேடு புகாரில் உண்மையில்லை

Updated : ஏப் 23, 2013 | Added : ஏப் 22, 2013 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ராபர்ட் வதேரா மீதான நில முறைகேடு புகாரில் உண்மையில்லை

சண்டிகார்:"காங்., தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேரா மீது கூறப்பட்ட நில முறைகேடு குற்றச்சாட்டு, பொய்யானது. இந்த விஷயத்தில், ராபர்ட் வதேரா, எந்த தவறும் செய்யவில்லை' என, இதுகுறித்து விசாரித்த, கமிட்டி தெரிவித்துள்ளது.


ஐ.ஏ.எஸ்., அதிகாரி:

அரியானா மாநிலத்தில், பதிவுத் துறை உயரதிகாரியாக பணியாற்றிய, அசோக் கெம்கா என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கடந்த சில மாதங்களுக்கு முன், காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேரா மீது, பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். அரியானாவில், மூன்று ஏக்கர் நிலத்தை, ராபர்ட் வதேராவின் நிறுவனம், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்.,க்கு விற்பனை செய்தது. இதில் முறைகேடு நடந்ததாகவும், இந்த முறைகேடுக்கு, அரியானா மாநில காங்., அரசு, உதவி புரிந்ததசாகவும், அசோக் கெம்கா குற்றம் சாட்டினார்.


அரசிடம் தாக்கல்:

அத்துடன், டி.எல்.எப்., நிறுவனத்துக்கும், வதேரா நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தையும், பதிவுத் துறை அதிகாரி என்ற அடிப்படையில், ரத்து செய்தார். இந்த விவகாரம், அரியானா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து விசாரிப்பதற்காக, மூன்று அதிகாரிகள் அடங்கிய கமிட்டியை, அரியானா மாநில அரசு நியமித்தது. இந்த கமிட்டி, தன் அறிக்கையை, மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து, அரியானா மாநில அரசு வட்டாரங்கள் கூறியதாவது:அசோக் கெம்கா கூறிய குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. டி.எல்.எப்., நிறுவனத்துக்கும், வதேரா நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், விதிமுறைப்படி தான், கையெழுத்தாகியுள்ளது. இதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. இதனால், மாநில அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
23-ஏப்-201309:02:34 IST Report Abuse
Ambika. K கண்டிப்பாக இல்லை பவம் வதேரா வீட்டுல பேப்பர் படிச்சுட்டு இருகரப்போ 4 -5 ஆளுங்க வந்து ஐய நீங்களா ஏதோ பார்த்து போட்டு குடுத்து இந்த நெலத்த எடுத்துக்கங்கோ ன்னு சொல்லி இருக்காங்க இவரும் பரிதாப பட்டு வாங்கி இருக்காரு பின்னாலையே ஒரு பெரிய கூட்டம் மூட்டை மூட்டையா பணம் கொண்டு வந்து ஐய அந்த எடம் எங்களுக்கு குடுத்துடுங்க ஐயா என்று கெஞ்சி இருக்காங்க வதேரா வுக்கு மொதல்ல குடுக்க இஷ்டம் இல்லை பின்ன வந்த வங்க இந்த எடம் நீங்க எங்களுக்கு குடுத்தீங்க ன்ன நாங்க GARIBI HATAVLAM என்று சொன்ன உடன் பணத்த வாங்கிட்டு எடத்த குடுத்துட்டாரு இதுல இவரு தப்பு என்ன இருக்குங்க.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
23-ஏப்-201308:58:51 IST Report Abuse
Skv சுத்தம் பரிசுத்தம் காங்கிரெஸ் ரொம்பவே சுத்தம் சோனியா vvvvclean அவஆத்து மாப்பிள்ளை சுத்தமோ சுத்தம் நம்பறோம் ஐயா நம்பறோம் எல்லாத்தையும் புடுங்கின்ன்டு விரட்டணும் இத்தாலிக்கே
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23-ஏப்-201308:20:53 IST Report Abuse
kumaresan.m " இது போன்ற செய்திகள் வெளிவரும் பொழுது நெஞ்சம் பொறுக்கவில்லை ......எப்படியா இந்த விசாரணை கமிட்டில் உள்ள அதிகாரிகளால் வாய் கூசாமல் பொய் சொல்ல முடிகிறது? ...இன்னும் சிறிது நாளில் திரு .கெம்பே அவர்களின் மேல் பொய் குற்ற சாற்று கூறினார் என்று வழக்கு போட்டாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை ".....வாழ்க இந்திய பண நாயகம் சாரி ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel
DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்
23-ஏப்-201308:20:39 IST Report Abuse
DHASARATHAN இந்தியாவையே உங்கள் குடும்பத்திற்கு என்று தாரைவார்த்தாகி விட்டது. இதில் தம்மாத்துண்டு நிலத்திற்கு எல்லாம் நாங்கள் கவலைப்படுவோமா என்ன? அந்நியரிடம் அடிமையாக வாழ்வதே எமது இந்தியருக்கு பெருமை.
Rate this:
Share this comment
Cancel
KKsamy - Jurong,சிங்கப்பூர்
23-ஏப்-201308:16:46 IST Report Abuse
KKsamy கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். ஆனால் சினிமாவை பத்தியும் அரசியல பத்தியும் என்ன போட்ட்ருந்தலும் நம்மாளு நம்பிடுவான். அதுதான் பத்திரிக்கை நடதுரவனோட மூலதனம். கருப்பு கருப்பா வாந்தி எடுத்தான் என்றால் பத்திரிக்கைகாரன் காக்க காக்காவ வாந்தி எடுத்தான் என்று போடுவான் நம்மாளும் அத படிச்சிட்டு காக்க எத்தன முட்ட விட்டுசின்னு கேட்பான்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23-ஏப்-201308:11:49 IST Report Abuse
kumaresan.m " எல்லா கமிட்டியும் விசாரணை முடித்து இறுதி தீர்ப்பு வழக்குவதற்கு குறைந்தது 6 மாதம் முதல் 1வருடம் கால அவகாசம் ஆகும் ஆனால் மூன்று மாதத்திற்குள் குற்றம் செய்யவில்லை மற்றும் முறைகேடுகள் நடக்கவில்லை என்று கூறுவது மேலும் சந்தேகத்தை உறுதி படுத்துகிறது "
Rate this:
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
23-ஏப்-201307:45:23 IST Report Abuse
Krish மக்கள் மத்தியில் மடக்கும் குற்றங்களை அரசாங்கம் கண்காணிக்க வேண்டுமா.. அல்லது அரசாங்கம் செய்யும் நாச குற்றங்களை மக்கள் கண்காணிக்க வேண்டுமா? 2G, ஆதர்ஷ், போபர்ஸ், காமன் வெல்த்இப்படி பல குற்றங்கள் நடத்தும், மக்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது தேசிய அவமானம். அந்த விசாரணை கமிட்டி களிசடை கூட்டத்தை பற்றி ஒரு intro நியூஸ் தாருங்கள், கழுவி ஊத்த வசதியாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
23-ஏப்-201307:19:27 IST Report Abuse
rajan அப்போ வதோர ஒரு நன் முத்துன்னு சொல்றீகளோ. சரி அப்போ வதோரவ துணை பிரதமாராக ஆக்கி காங்கிரஸ் ஆட்டைய போட்டுற வேண்டியது தானே
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
23-ஏப்-201307:06:01 IST Report Abuse
பொன்மலை ராஜா அசோக் கெம்கா இருபது நாட்களாக விசாரணைக்கு வரவில்லை ... எனவே அவரை விசாரிப்பது கைவிட்டதாகக் கருதப்படுகிறது ... உண்மை வெளிவரக் கூடாதல்லவா ... போபர்ஸ் வழக்கு விசாரிப்பது கைவிட்டதாகக் கருதப்படுகிறது ... உண்மை வெளிவரக் கூடாதல்லவா ... ராஜீவ் மரணம் குறித்து விசாரிப்பது முடிந்து விட்டதாகக் கருதப்படுகிறது ... உண்மை வெளிவரக் கூடாதல்லவா ... நேதாஜி குறித்து விசாரிப்பது முடிந்து விட்டதாகக் கருதப்படுகிறது ... உண்மை வெளிவரக் கூடாதல்லவா ... 2-ஜி வழக்கில் ராஜாவை விசாரிப்பது கைவிட்டதாகக் கருதப்படுகிறது ... உண்மை வெளிவரக் கூடாதல்லவா ... நிலக்கரி பேர ஊழல் வழக்கை விசாரிப்பது கைவிட்டதாகக் கருதப்படுகிறது ... உண்மை வெளிவரக் கூடாதல்லவா ...
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
23-ஏப்-201306:54:34 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் வேலிக்கு ஓணான் சாட்சி.......சொக்கத் தங்கத்தின் மருமகன் மீது டில்லியில் கணக்கில் அடங்கா குற்றச்சாட்டுகள் அரசால் புரசாலாக பேசப்படுகின்றன.....அலைக்கற்றை ஊழல் சூத்திரதாரி கூட இவர்தான்......தயாளு அம்மாள் போலிஸ் முன் ஆஜராவது வலியுறுத்தப்பட்டால், இவர் பெயர் வெளியே வரும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை