வயலின் மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயலின் மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்

Added : ஏப் 22, 2013 | கருத்துகள் (7)
Advertisement
வயலின் மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்

சென்னை: பழம்பெரும் வயலின் இசை மேதை, லால்குடி ஜெயராமன், மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது, 82. இறுதி சடங்கு சென்னையில், இன்று நடக்கிறது. திருச்சி மாவட்டம், லால்குடியில், 1930 ஆண்டு ஜெராமன் பிறந்தார். இவர், 12வது வயதிலேயே தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார். வயலின் இசையில் சிறந்து விளங்கினார். இந்தியாவில் மட்டுமின்றி, பல வெளிநாடுகளிலும் ஏராளமான வயலின் கச்சேரி நடத்தியுள்ளார். "சிருங்காரம்' என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு, சிறந்த இசைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். வயலின் இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இவர், "பத்மஸ்ரீ, பத்ம பூஷண்' விருதுகளையும் பெற்றுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள வீட்டில், லால்குடி ஜெயராமன் வசித்து வந்தார். நேற்று மதியம்,12:30 மணிக்கு, நெஞ்சுவலி ஏற்பட்டதால், நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, மாலை, 6:50 மணிக்கு இறந்தார்.
இவருக்கு, ராஜலட்சுமி என்ற மனைவியும், கிருஷ்ணன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அவரது, இறுதிச்சடங்கு சென்னையில், இன்று மாலை நடக்கிறது.

வயலின் வித்தகர் : சிறந்த வயலின் கலைஞராக திகழ்ந்தவர் லால்குடி ஜெயராமன், 82. பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் கர்நாடக இசை பாடகர்களுக்கு வயலின் வாசிப்பதில் சிறந்து விளங்கினார். 1930 செப்., 17ம் தேதி சென்னையில் பிறந்தார். கர்நாடக இசை பயிற்சியை தனது தந்தை வி.ஆர். கோபால ஐயரிடமிருந்து கற்றுக்கொண்டார். வயலின் பக்க வாத்தியக் கலைஞராக 12வது வயதில் இசைப்பயணத்தை தொடங்கினார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் உள்ளிட்ட கர்நாடக இசையில் முன்னணி பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.
இந்தியா மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, மணிலா, பெல்ஜியம், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவரது மகன் லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் மகள் லால்குடி விஜயலட்சுமி இருவரும், இவரைப்போலவே சிறந்த வயலின் வாசிப்பாளர்களாக உள்ளனர்.

விருதுகள் : லால்குடி ஜெயராமனின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு 1972ல் பத்ம ஸ்ரீ விருதையும், 2001ல் பத்ம பூஷன் விருதையும் வழங்கி கவரவித்தது. சிருங்காரம் எனும் நாடக படத்திற்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். தவிர சங்கீத நாடக அகாடமி விருதையும், சில வெளிநாட்டு இசை அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

"இசையுதிர்' காலம் : இந்த (ஏப்ரல்) மாதத்தில் பிரபல இசை மேதைகளான சினிமா பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், சினிமா இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி, வயலின் வித்தகர் லால்குடி ஜெயராமன் இறந்துவிட்டனர். அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று இசை வல்லுனர்கள் இறந்தது, இசைக் கலைஞர்களையும், இசை ஆர்வலர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhoshkumar.N - Doha,கத்தார்
23-ஏப்-201313:25:50 IST Report Abuse
Santhoshkumar.N மிகவும் துக்கமான செய்தி
Rate this:
Share this comment
Cancel
Mohamed Musthafa - doha,கத்தார்
23-ஏப்-201310:18:10 IST Report Abuse
Mohamed Musthafa அவர்களின் இசை அழிவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
23-ஏப்-201309:22:08 IST Report Abuse
p.manimaran ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
23-ஏப்-201308:50:34 IST Report Abuse
Skv இந்த மாதம் ரொம்பவே மோசம் தான். இசை வித்தகர்கள் வரிசையா போயிண்டுருக்காக, மனத்துக்கு வருத்தமாவே இருக்கு. என்ன செய்வது. முதுமை வேறு, யமனுக்கும் இவாளுடைய இசைய ரசிக்க ஆவல் போலும். ம்ம்ம்ம்ம்ம்ம்
Rate this:
Share this comment
Cancel
Durai selvaraju - Al Mangaf,குவைத்
23-ஏப்-201308:32:11 IST Report Abuse
Durai selvaraju தனித்துவமான மேதை திரு லால்குடி ஜெயராமன் அவர்கள்... அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.
Rate this:
Share this comment
Cancel
23-ஏப்-201306:48:30 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் சாஸ்திர சுத்தமான இசையையும், வெகு ஜனங்கள் ரசிக்கும்படி சுவையாகக் கொடுத்த மகான், தியாகய்யாவின் நேரடி சீட வாரிசு, பக்க வாத்தியங்களில் சிறந்த பக்கா வாத்தியமாக வயலினை ஆக்கிய மேதை, சாதாரண பாடகருக்கு வாசித்து அவரையும் அசாதாரணமான பாடகர் போல காட்டி வளர வைத்தவர், அந்த வயலின் வில்லிலிருந்து வந்த இசையம்புகள் போகாத நாடில்லை துளைக்காத இதயமில்லை. உருக்காத மனமில்லை. இசை ரசிகர்களுக்கு ஈடு செய்யமுடியாத மாபெரும் இழப்பு
Rate this:
Share this comment
Cancel
kooli - saakkadai,இத்தாலி
23-ஏப்-201301:06:25 IST Report Abuse
kooli அகங்காரம் இல்லாது ஆத்மார்த்தமாக வாசிக்கும் ஓர் அற்புதக் கலைஞர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை