நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் மீது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெயலலிதாவிடம் புகார் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் மீது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெ.,விடம் புகார்

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் மீது அளும் கட்சி கவுன்சிலர்கள் போயஸ் கார்டனில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித்தலைவராக அ.தி.மு.க., வைச் சேர்ந்த சுதாகர் உள்ளார். மொத்தமுள்ள 30 கவுன்சிலர்களில் அ.தி.மு.க.,வுக்கு 14 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் தமிழ்மாறன், இளந்தென்றல், சுமதி அய்யப்பன், லட்சுமி பெருமாள், விஜயகுமாரி வேலு ஆகிய அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஐந்து பேர் நகராட்சித் தலைவருக்கு எதிரணியாக செயல்படுகின்றனர்.
தங்கள் வார்டுகளை நகராட்சித்தலைவர் சுகாதார் புறக்கணிப்பதாக, அமைச்சர் சம்பத்திடம் புகார் செய்தனர். இரண்டு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்வதாக அமைச்சர் சம்பத் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்மாறன், இளந்தென்றல் மற்றும் மூன்று கவுன்சிலர்களின் கணவர்கள் அய்யப்பன், பெருமாள், வேலு ஆகியோர் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து புகார் கொடுக்கச் சென்றனர். முதல்வரை சந்திக்க முடியாததால் போயஸ் கார்டனில் கட்சி பிரச்னைகளை கவனிக்கும் பூங்குன்றனிடம் புகார் கொடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை