Advertisement
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013,23:49 IST
கருத்துகள் (11)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை:""நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்று மாலை, தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிந்து, தற்போது, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டரில்', மதிப்பெண்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களின் முதல், "சாய்ஸ்', பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளாகத் தான் இருக்கின்றன. அதிலும், மருத்துவப் படிப்பிற்கு, "சீட்' கிடைக்கும் மாணவர்கள் கூட, கடைசி நேரத்தில், பொறியியல் கலந்தாய்வுக்கு வந்து விடுகின்றனர்.முன்னணி கல்லூரியில் படிப்பை முடித்தால், கைமேல் வேலை, கை நிறைய சம்பளம் என்ற நிலை இருப்பதால், மாணவர்கள், பொறியியல் படிப்பை, அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.

துணைவேந்தர் அறிவிப்பு :
நடப்பு ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்புகளை, மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், ""மே, 4ம் தேதி முதல், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்று மாலை அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்பு, மே, 3ம் தேதி வெளியிடப்படும். மறுநாள், 4ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 59 மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் உள்ளன. எனவே, மாணவ, மாணவியருக்குத் தேவையான அளவில், 2 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்களை அச்சடித்து உள்ளோம்.விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பவும், மே, 20ம் தேதி கடைசி நாள். அன்று மாலைக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு நடக்கும் தேதி விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு

காளிராஜ் கூறினார்.

9ம் தேதி, "ரிசல்ட்?'
மாநிலம் முழுவதும், அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். மே, 10ம் தேதிக்குள், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, மே, 9ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வருக்கு பிடித்த எண், 9 என்பதாலும், அன்று, அமாவாசை என்பதாலும், அன்றயை தேதியில், தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், மே, 10ம் தேதியோ அல்லது அதை ஒட்டினாற்போலவோ, தேர்வு முடிவை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"ஆன்-லைன்' விண்ணப்பமும் ஏற்பு:
விண்ணப்பத்தில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை பதிய வேண்டும். மே, 10ம் தேதிக்குள், தேர்வு முடிவு வெளியாகி விட்டால், அடுத்த, 10 நாட்களுக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை அனுப்பி விடலாம். "ஆன்-லைன்' வழியாகவும், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த முழுமையான விவரங்கள், மே, 3ம் தேதி வெளியாகும் அறிவிப்பில் பார்த்து, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டு நிலை :
கடந்த ஆண்டு,

Advertisement

பொதுக் கல்வி பிரிவில், 1.74 லட்சம் விண்ணப்பங்கள், தொழிற்கல்வி பிரிவில், 6,000 விண்ணப்பங்கள் என, 1.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் இருந்தன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை.இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 2 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, அதிக மாணவ, மாணவியர் விண்ணப்பிப்பர் என, அண்ணாபல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டுள்ளது.

ஜூன் 21ம் முதல் கலந்தாய்வு:
பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், நேற்றிரவு வெளியிட்டார். அதன் விவரம்:
* விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13
* விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13
* விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13
* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13
* "ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13
* "ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13
* மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13
* கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13
இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முட்டாள் - kingston,ஜமைக்கா
24-ஏப்-201313:26:07 IST Report Abuse
முட்டாள் கல்லூரிகளை தொலைக்காட்சி விளம்பர அடிப்படையில் தேர்வு செய்யாதீர்கள் ஏனெனில் அவை CG ஆக கூட இருக்கலாம் நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரியில் Ph.D பட்டம் பெற்ற பேராசிரியர்கள் அதிகளவில் உள்ளனரா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள், ஏனெனில் அவர்கள் அனுபவசாலிகள் உங்களுக்கு தேவைப்பட்டால் ஆராய்ச்சி அளவிலும் உதவியாக இருப்பார்கள் இதனை காட்டிலும் கல்லூரிக்கு நேரே சென்று விசாரிப்பது நல்லது. பெரும்பாலும் மாணவர்கள் நேரே சென்று விசாரித்தால் இரண்டாவது முறையாக அதாவது counselling-க்கு பின் donation மூலம் செல்வதை தவிர்க்கலாம் m
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
23-ஏப்-201315:17:53 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் கல்வி வியாபாரம்....ஆரம்பம்..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
23-ஏப்-201315:04:28 IST Report Abuse
Hariganesan Sm பொறியியல் படிப்பு சாதாரண வீட்டினருக்கும் பிடித்து ஆட்டுகிறது.. செலவு குறைவில் எத்தனையோ கல்வி முறைகள் உள்ளன. சரியான வழிகாட்டுதலின்றி பொறியியலில் சேர்த்து விட்டு முழிப்பது ஒரு புறம் என்றால், பொறியியல் படித்து வெளி வரும் மாணாக்கர் எண்ணிக்கை பெருகி எங்கேயும் வேலை இல்லா திண்டாட்டம் கூடிக் கூடி வருகிறது.. அப்படி நிலையில் கம்பெனிகளும் வெறும் 2000 ரூபாய் தருகிறேன் 3000 ரூபாய் தருகிறேன் என்று பணியில் அமர்த்துவதும் சாதாரண நிகழ்வு ஆகி விட்டது.. நம் பிள்ளை நகரத்தில் பெரிய உத்தியோகத்தில் உள்ளான் என்று நினைத்து கிராமங்களில் பெற்றோர்கள் உண்மை தெரியாமலும் பெற்றோருக்கு தெரியக் கூடாதே என்று பிள்ளைகளும் நகரங்களில் கஷ்டப்படுகிற நிலைமை இப்போது நிலவுகிறது. எனவே, பொறியியல் படிப்பு வேண்டாம் என்று சொல்ல வில்லை, நடைமுறையில் எது படித்தல் நல்ல வேலை வாய்ப்புக்கு உதவும் என்று வழிகாட்டுதலோடு பெற்றோர் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினால் நல்லது..
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23-ஏப்-201313:18:01 IST Report Abuse
kumaresan.m " என்ன தமிழ் நாட்டு முதல் அமைச்சர் தேர்வு எழுதி இருப்பது போல் மே - 9 ராசியான மற்றும் அமாவசை நிறைந்த நாள் ?....கல்வி தேர்வு துறையின் விசுவாசம் செயலில் இருக்கட்டும் ....ஏனெலில் தேர்வு நடைபெற்ற பொழுது ஏகப்பட்ட குளறுபடிகள் ....தேர்வு முடிவுகள் வெளியிடும் பொழுதாவது சரியாக வெளியுடுங்கள்........தயவுசெய்து மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடதீர்கள் "
Rate this:
0 members
1 members
4 members
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
23-ஏப்-201310:56:55 IST Report Abuse
ANBE VAA J.P. TNPSC .,SSLC மற்றும் 8 ம் வகுப்பு தேர்வுகளை போல் இல்லாமல் ... இதையாவது குழப்பம் இல்லாம நடத்துங்க பார்ப்போம் ..,,
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
23-ஏப்-201310:33:40 IST Report Abuse
PRAKASH தைரியமா சிவில் இன்ஜினியரிங் எடுக்கலாம்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201309:08:04 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏற்கனவே பொறியியல் படித்தவர்களுக்கு வேலை இல்லை. தயவு செய்து பாதி கல்லூரிகளை மூடி விடுங்களேன். தரமற்ற கல்லூரிகளையும் சேர்த்து மூடு விழா நடத்துங்கள். நாட்டுக்கும் ,மாணவர்களுக்கும்,பெற்றோர்களின் பணத்துக்கும் நல்லது.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-ஏப்-201307:00:30 IST Report Abuse
ஆரூர் ரங தேர்தல் நேரம் போல இந்த நேரத்திலும் இந்த கொள்ளைக் கல்லூரி அலுவலக வாசல்களில் வருமானவரித்துறை சோதனை போடலாம். நூற்றுக்கணக்கான கோடி தேறும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
23-ஏப்-201304:26:11 IST Report Abuse
Panchu Mani BE கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்கிறவங்க ஜாக்கிரதையா பெரியவங்க அறிவுரை கேட்டு எடுங்க
Rate this:
1 members
0 members
18 members
Share this comment
Manojprabakar - chennai,இந்தியா
23-ஏப்-201310:59:10 IST Report Abuse
Manojprabakar கண்டிப்பாக கேட்கவும் . இல்லையெனில் நஷ்டம் உங்களுக்குத்தான் . பொறியியல் படித்தவன் கால் சென்டரில் பிச்சை எடுக்கும் அவலம் நடந்து வருவது மாணவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
BharathiRaja - Chennai,இந்தியா
23-ஏப்-201315:14:53 IST Report Abuse
BharathiRajaநீங்களே அந்த அறிவுரை என்னன்னு சொன்னா எல்லாரும் பயனடைவார்கள் இல்லையா??...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.