E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அனல் மின் நிலையங்களில் தொடர் பழுது : கிடைத்த கூடுதல் மின்சாரமும் "அம்போ'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

23 ஏப்
2013
10:41
பதிவு செய்த நாள்
ஏப் 22,2013 23:53

சென்னை: எண்ணூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், கூடுதலாக கிடைத்த, அனல் மின்சாரத்தின் அளவு குறைந்துள்ளது.

தமிழகத்தில், 4,000 முதல், 4,500 மெகாவாட், மின் பற்றாக்குறை உள்ளது. சென்னை தவிர்த்து, மாவட்டங்களில், 12 மணி நேரத்திற்கு மேலாக, மின் தடை உள்ளது. தற்போது, வெயிலின் தாக்கத்தால், மின் நுகர்வின் அளவு, தினசரி அதிகரித்து வருகிறது.இதனால், மற்ற மாவட்டங்களில் உள்ளது போல், சென்னை நகரிலும், இரவு நேரங்களில், கூடுதல் நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அணைகளில் போதிய நீர் இன்மையால், புனல் மின் நிலையங்களின் மொத்த நிறுவு திறனான, 2,223 மெகாவாட்டில், 246 மெகாவாட் மின்சாரம் மட்டுமே, உற்பத்தி செய்யப்படுகிறது.

இருப்பினும், கடந்த இரு மாதமாக, மாநில மின் உற்பத்தி, 10 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது. அனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால், மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது.குறிப்பாக, மொத்த உற்பத்தி திறனை காட்டிலும், கூடுதலாக, 400 மெகாவாட் மின்சாரம், அனல் மின் நிலையங்களில் இருந்து கிடைத்தது. இந்நிலையில், சென்னை, எண்ணூர் மற்றும் வடசென்னை ஆகிய அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது.இதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் இருந்து கிடைத்து வந்த மொத்த மின்சாரத்தில், 700 மெகாவாட் குறைந்துள்ளது.

மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி, 9,465 மெகாவாட். தமிழக அனல் மின் நிலையங்களின் மொத்த உற்பத்தி திறன் சராசரியாக, 2,970 மெகாவாட். முழு உற்பத்தி திறனை காட்டிலும், கூடுதலாக, 400 மெகாவாட் அளவிற்கு, அனல் மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் கிடைத்து வந்தது. தமிழக அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், மொத்த நிறுவு திறனில், 700 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201308:33:58 IST Report Abuse
Srinivasan Kannaiya எண்ணூரில் மட்டுமா, கல்பாக்கம் என்ன ஆயிற்று. எது நடந்தாலும் நாங்கள் கவலைபடாமல் ஆட்ச்சியில் இருப்போம் என்பவர்களை பற்றி என்ன சொல்வது. இனி தயவு செய்து போர்கால அடிப்படையில், சிறப்பு நிதி ஒதுக்கி, பழுதாவதை தடுக்க பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுங்கள் சிறு சிறு மின் உற்பத்தி நிலையங்கள் அங்குஅங்கெ நிறுவ நடவடிக்கை எடுங்கள். உங்களுக்கம் நல்லது நாட்டுக்கும் நல்லது. தேர்தலிலும் வெற்றி பெறலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
23-ஏப்-201308:03:39 IST Report Abuse
Loganathan முழு திறனைகாட்டிலும்அதிகமாக மின் உற்பத்தி செய்வதால் பழுதாக வாய்ப்புஉள்ளது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-ஏப்-201307:37:58 IST Report Abuse
ஆரூர் ரங மத்திய அரசு நிறுவனங்கள் அளிக்கும் மோசமான நிலக்கரியைக் கொண்டு இந்த அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதே அதிகம். காற்றாலைகள் இப்போது இயங்குவதால் மின்வெட்டு நான்கைந்து மணி நேரம் என குறைக்கப்பட்டுள்ளது மின் சிக்கனத்தைப் பற்றிய மத்திய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையே காணோமே .தனியார் மின் உற்பத்தியாளர்களின் தலையீடு காரணமோ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
tmsaravanai - CHENNAI,இந்தியா
23-ஏப்-201305:35:35 IST Report Abuse
tmsaravanai மின்சார வாரியம் முழுவதும் தி மு க காரர்களால் ஆக்கிரத்து உள்ளத்தால் எவ்வளவு முடிவுமோ அவ்வளவு இடைஞ்சல் செய்வார்கள்
Rate this:
32 members
0 members
115 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201304:40:02 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி உங்கள் மனதை தேற்றிக்கொள்ள ஒரு செய்தி சொல்கிறேன். அனல் மின் நிலயங்களில் இருந்து வெளியிடப்படும் புகை மண்டலம் சுற்று சூழலை மாசு பாடுதுவதால், வேண்டும் என்றே மின் நிலையங்கள் பழுது பட்டதாக சொல்லி சுற்று சூழலை பாதுகாக்கிறோம். மேலும் இன்றைக்கு தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெய்யில் சுட்டெரிக்கிறது. அப்படிபட்ட நிலையில் மின் பற்றாக்குறை அதன் காரணமான மின் பயன்பாடு குறைவு நமது சுற்றுபுரத்தை மேலும் வெப்பம் ஆக்காமல் இருக்கிறது. (நாங்களும் ரூம் போட்டு யோசிப்போம் லே.)
Rate this:
6 members
1 members
17 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-ஏப்-201307:35:00 IST Report Abuse
ஆரூர் ரஙcool...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
23-ஏப்-201301:56:46 IST Report Abuse
jagan ஹ ஹ ஹ .... நான் முன்னமே சொன்ன மாதிரியே நடக்குது..... மின் நிலைங்க பழுது....கரி கொண்டு போகும் கன்வேயர் பெல்ட் பழுது எல்லாம் நடக்கும்.... தி மு க தொழிற்சங்கம் எதற்கு இருக்கு? இன்னும் இருக்கு......
Rate this:
13 members
0 members
22 members
Share this comment
Cancel
Nanban - Kovai  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-201301:45:39 IST Report Abuse
Nanban மின்சாரம் அம்போ ஆனதற்கு கருணாநிதி்தான் என்று செயலலிதா கூறக்கூடும்
Rate this:
18 members
0 members
19 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.