நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு விவகாரம் : வழக்கை நடத்த அனுமதி கேட்கிறார் தி.மு.க., - எம்.பி., - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான்கு தொகுதிகளில் ஜெ., வேட்பு மனு விவகாரம் : வழக்கை நடத்த அனுமதி கேட்கிறார் தி.மு.க., - எம்.பி.,

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: நான்கு தொகுதிகளில், வேட்புமனுத் தாக்கல் செய்த விவகாரத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக, மனுத் தாக்கல் செய்த, குப்புசாமிக்கு பதிலாக, வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தி.மு.க., - எம்.பி., விஜயன், மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தஞ்சை, மன்னார்குடி தி.மு.க., - எம்.பி., விஜயன், தாக்கல் செய்த மனு: கடந்த, 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை என, நான்கு தொகுதிகளில், ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்தார்; இரண்டு தொகுதிகளுக்கு மேல், வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என, உத்தரவாதம் அளித்திருந்தார். கடைசியில், வேட்புமனு பரிசீலனையின் போது, வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை, அவர் மீறியிருந்தார். ஜெயலலிதா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமை தேர்தல் கமிஷனருக்கு, நான் புகார் அனுப்பினேன். இந்தப் பிரச்னை குறித்து, செ.குப்புசாமி வழக்கு தொடுத்திருந்தார். சமீபத்தில், அவர் மறைந்து விட்டார். அவருக்குப் பதில், அந்த வழக்கை நான் தொடர்ந்து நடத்த விரும்புகிறேன். தனியாக நான், மனு தாக்கல் செய்யவில்லை. குப்புசாமியின் இடத்தில், அவருக்குப் பதிலாக, என்னை அனுமதித்து, வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை