மதுரை துணை நகருக்கு நிலம் கையகம் : எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை துணை நகருக்கு நிலம் கையகம் : எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

Added : ஏப் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: மதுரை தோப்பூரில், வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய நிலங்களை, மீண்டும் ஒப்படைக்க கோரிய மனுக்களை, தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, "தற்போது அங்கு துணை நகரம் அமைய உள்ளதால், உரிய நோக்கத்திற்கு நிலம் பயன்படுத்தப்படுகிறது' என, குறிப்பிட்டது.
மதுரை மூனாண்டிபட்டி ஒச்சாத் தேவர், ஈஸ்வரன் உட்பட, 10 பேர், தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், "மதுரை தெற்கு அருகாமை நகர் திட்டத்தின்' கீழ், தோப்பூரில் நிலம் கையகப்படுத்த, 1991ல் அறிவிப்பு வெளியாகி, எங்கள் நிலத்தை, 1994ல் கையகப்படுத்தினர். அந்நிலத்தை, வீட்டுவசதி வாரியம் பயன்பாடின்றி காலியாக வைத்துள்ளது. நிலத்தை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மதுரை ஆர்.டி.ஓ., "நிலத்தை கையப்படுத்தி, வீட்டுவசதி வாரியத்திடம் ஒப்படைத்தோம். எந்த நோக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்நோக்கம் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களிடம் மீண்டும் நிலத்தை ஒப்படைக்க வாய்ப்பில்லை' என்றார். மதுரை எல்லீஸ்நகர் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர், "எங்களிடம் 1995ல் நிலம் ஒப்படைக்கப்பட்டது. நிலத்திற்குரிய பணத்தை, "டிபாசிட்' செய்துள்ளோம். ஒருங்கிணைந்த வீட்டுவசதி திட்டத்திற்காக நிலம் வாங்கினோம். தற்போது அங்கு துணைநகரம் அமைய உள்ளது' என, பதில் மனு செய்தார்.

நீதிபதி உத்தரவு: தற்போது, தோப்பூரில் துணைநகரம் அமைக்க, நிலத்தை மேம்படுத்தியுள்ளனர். துணைநகரம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஆராய, நகர்ப்புற கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம், வீட்டுவசதி வாரியம் கோரியுள்ளது. அதற்கான, ஆரம்ப நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என, அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டு உள்ளது. "கையகப்படுத்திய நிலத்திற்கு, அரசு தான் உரிமையாளர்; திருப்பி வழங்க முடியாது' என, ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை