"பாசி' மோசடி நிறுவன இயக்குனருக்கு இடைக்கால ஜாமின்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

"பாசி' மோசடி நிறுவன இயக்குனருக்கு இடைக்கால ஜாமின்

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை: மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட, "பாசி' நிதிநிறுவன இயக்குனருக்கு, சுப்ரீம் கோர்ட், மூன்று மாத இடைக்கால ஜாமின் அனுமதித்தது. திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனம், பாசி. இதன் இயக்குனர்களாக, மோகன்ராஜ், கதிரவன் மற்றும் கமலவள்ளி ஆகியோர் செயல்பட்டனர். அதிக வட்டி மற்றும் சலுகைகளை அளிப்பதாக உறுதி அளித்து, பல நூறு கோடி ரூபாய் டிபாசிட் பெற்றனர். இரு ஆண்டுகளுக்கு முன், இந்நிறுவன இயக்குனர்கள் திடீரென தலைமறைவாகினர். சி.பி.ஐ.,அதிகாரிகளின் தீவிர தேடுதலில், அசாமில் மறைந்திருந்த இவர்கள், கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது, 870 கோடி ரூபாய் மோசடி புகார் சுமத்தப்பட்டது.
கோவை டான்பிட் கோர்ட்டில், இவ்வழக்கின் சாட்சி விசாரணை நடக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இயக்குனர் கமலவள்ளிக்கு, சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.
தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என கூறி, இயக்குனர் மோகன்ராஜ், கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து, இடைக்கால ஜாமின் பெற்றார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மோகன்ராஜுக்கு, மூன்று மாத காலம் மட்டும், ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தானாக முன்வந்து, கோர்ட்டில் சரணடைய வேண்டும். இடைக்கால ஜாமின் பெற, 1 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு நபர்கள் உத்தரவாதம் தர வேண்டும்; பாஸ்போர்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
சுப்ரீம் கோர்ட் நிபந்தனையின்படி, நேற்று மாலை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மோகன்ராஜ், இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என, அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை