Advertisement
திருச்செந்தூர் கோயில் பணியாளர்கள் திடீர் "ஸ்டிரைக்'
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
00:01

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் பணியாளர், தாக்கப்பட்டதை கண்டித்து, சகபணியாளர்கள், நேற்று, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்,28. திருச்செந்தூர் முருகன் கோயில் பணியாளர். நேற்றுமுன்தினம் மாலை, அலுவலக பணியில் இருந்தபோது, தக்காரின் உறவினர் என்று கூறிய பெண், செந்தில்குமாரை சந்தித்தார். வி.வி.ஐ.பி., தரிசன வழியில் அனுமதிக்க, வலியுறுத்தினார். அவரிடம் டிக்கெட் இல்லாததால், மாற்று வழியில் செல்ல, செந்தில்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, பின்னர், செந்தில் குமாருக்கும், அர்ச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது, அர்ச்சகர்கள், தாக்கியதாக, செந்தில்குமார், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், சேர்ந்தார். அதே நேரம், கோயில் பணியாளர்கள் தாக்கியதில், காயமேற்பட்டதாகக்கூறி, அர்ச்சகர்கள் சரவணன்,25, லட்சுமணன்,22, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
இந்த நிலையில், செந்தில்குமாரை, தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவேண்டும். தங்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கவேண்டும் என, வலியுறுத்தி, கோயில் பணியாளர்கள், நேற்று காலை, 10:00 மணிக்கு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இணை ஆணையர் அலுவலகம் முன், போராட்டம் நடத்தியதால், சிறப்பு தரிசனக்கட்டணம், விடுதிகட்டணம், முடிகாணிக்கை கட்டணம், நாழிக்கிணறு கட்டணம் உள்ளிட்டவை செலுத்தும், டிக்கெட் மையங்கள் மூடப்பட்டன. முடிகாணிக்கை செலுத்த முடியாமலும், விடுதிகளில் அறைகளை பதிவு செய்ய, காலி செய்ய முடியாமலும், பக்தர்கள் அவதிப்பட்டனர்.
பணியாளர்களுடன், அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பணியாளர் செந்தில்குமார் தாக்கப்பட்ட பிரச்னையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் என, உறுதியளித்தனர். அதை பணியாளர்கள் ஏற்றுக்கொண்டதால், மூன்று மணி நேரத்திற்குப்பின், பகல் 1:00 மணிக்கு, போராட்டம் முடிவுக்கு வந்தது. அதேநேரம், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.