Students come up with anti-rape gadgets, innovative clothing | பலாத்காரத்திலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: விதவிதமாக கண்டுபிடித்து அசத்தும் மாணவியர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பலாத்காரத்திலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: விதவிதமாக கண்டுபிடித்து அசத்தும் மாணவியர்

Added : ஏப் 23, 2013 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பலாத்காரத்திலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: விதவிதமாக கண்டுபிடித்து அசத்தும் மாணவியர்

புதுடில்லி:பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய விடாமல் தடுக்கும் அதிநவீன கருவிகளை, மாணவியர் மற்றும் பெண்கள் தயாரித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. அதனால், பாலியல் பலாத்காரத்திலிருந்து பெண்களை காக்கும் கருவிகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.


எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி:

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், "ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்' படிக்கும் மனிஷா, இன்ஜினியரிங் மாணவர்களான, நீலாத்ரி பாசு மற்றும் ரிம்பி திரிபாதி ஆகியோருடன் இணைந்து, "எஸ்.எச்.இ.,' என்ற கருவியை கண்டு பிடித்துள்ளார்.சாதாரண, "நைட்டி' போல காட்சியளிக்கும் உடையில், அதிநவீன கருவி இணைக்கப்பட்டுள்ளது. பிறரால் பலாத்காரத்திற்கு உள்ளாகிறோம் என்பதை அறிந்தவுடன், அந்த உடையில் பொருத்தப்பட்டிருக்கும், பொத்தானை அழுத்தினால் போதும்; 3,800 கிலோ வாட், "எலக்ட்ரிக் ஷாக்' அடித்து, தொட்ட நபர் மயங்கி சரிவார்.ஆனால், இந்த உடையை அணிந்திருக்கும் பெண்ணுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், அடுத்த வினாடி, உடையுடன் இணைக்கப்பட்டிருக்கும், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி செயல்பட்டு, போலீஸ், பெண்ணின் உறவினர்கள் மொபைல் போன் எண்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்பும்.


குறைந்த விலையில்:

""இது போன்ற கருவியை, அமெரிக்காவின், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் தயாரித்துள்ளனர். அதன் விலை, பல லட்ச ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் தயாரித்துள்ள ஆடையின் விலை, அதிகபட்சம், 1,500 ரூபாய்க்குள் தான் இருக்கும்; ஆடையை சலவையும் செய்யலாம்,'' என, மாணவி மனிஷா தெரிவிக்கிறார். அது போல், தேசிய ஆடை அலங்கார தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்கள், நிஷாந்த் பிரியா, ஷாஜத் அகமது ஆகியோர், பேராசிரியர், நூபூர் ஆனந்த் துணையுடன், "ஜாக்கெட்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதை அணிந்திருக்கும் போது, தேவையில்லாமல் யாராவது தொட்டால், தொட்ட நபருக்கு, எலக்ட்ரிக் ஷாக் கிடைக்கும்.


பயங்கர "ஷாக்':

எலக்ட்ரிக் ஷாக்கால் பாதிக்கப்பட்டவர், 15 நிமிடத்திற்கு எதுவும் செய்ய முடியாது; மயக்க நிலையை அடைந்து விடுவார். அந்த ஜாக்கெட்டிலிருந்து வெளியாகும், 110 வோல்ட் மின்சாரம், சில்மிஷ நபரையோ அல்லது பலாத்கார நபரையோ நிலைகுலையச் செய்து விடும்.வியர்வை மற்றும் மழை நீர் பட்டாலோ, அணிந்திருப்பவருக்கு எத்தகைய ஆபத்தையும் அளிக்காத வகையில், இந்த ஜாக்கெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த வரிசையில், தவறான எண்ணத்துடன் தொட்டவுடன், சகிக்க முடியாத நாற்ற நீரை, அந்த நபர் மீது பீய்ச்சி அடைக்கும் ஆடைகள், தொட்டவுடன், முள்ளெலி போல, கூர்மையான கம்பிகளால், பலாத்காரம் செய்பவனின் உடலை துளைக்கும் ஆடைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.அவை, காப்புரிமைக்காகவும், குறைந்த விலையில் தயாரிப்பதற்காகவும், அடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201308:50:00 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்கள் என்னதான் கண்டுபிடித்தாலும் அவற்றை முறியடிக்க இக்காலத்து குற்றவாளிகள் வழிவகைகளை இந்நேரம் கண்டுபிடித்திருப்பார்கள். பெண்களே, ஆண்களுக்கு நிகர் மேலும் சமம் நாங்கள்தான் என்று நீங்கள் மார் தட்டி கொள்ளுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் நீங்கள் பெண்தான் என்பதை மறக்காமல். ஒரு தடவை சீர் அழிந்தால் அழிந்ததுதான் என்பதை மனதில் கொண்டு,நாகரீகம் என்ற பெயரில் உங்களையே நீங்கள் அழித்து கொள்ளாதீர்கள் .புகை இலை விரிஞ்சா போச்சி பொம்பள சிரிச்சா போச்சி . வீராப்புக்கு எல்லாம் செய்தா நொந்துபொவரதும் நீங்கதான் .பொம்பளையை தெய்வமா நினைக்க வைக்கறது ஒங்க கைகளில் தான் உள்ளது. .
Rate this:
Share this comment
Meera Raghavan - chennai,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201301:19:17 IST Report Abuse
Meera Raghavanviveghamatra pechu.1 vayadhu mudhal 5 vayadhu ulla kuzhandhaigal enna pavam saidhana.avargalaiyum dhan indha kayavargal vittu vaipadhillai.velai edhuvum saiyamal indhamadhiri sayalgalil eedupadum ayogiyargalai support saivadhupol ungal karuthu ulladhu...
Rate this:
Share this comment
Meera Raghavan - chennai,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201301:31:51 IST Report Abuse
Meera Raghavanஅரசே இதை மானிய விலையில் மக்களுக்கு அளிக்கலாம்.சாதாரண அலாரம் அடிக்கும் விதத்தில் கண்டுபிடித்தும் ஊக்குவிக்கலாம்.எழை எளிய மக்கள் பயன் பெறுவார்....
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
23-ஏப்-201308:30:56 IST Report Abuse
Sami புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். இருப்பினும் தொடும் நோக்கம், அதாவது தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள், இந்த கருவிகளால் உணரமுடியாது என்பது மிக முக்கியமான பின்னடைவு. செயல்பாட்டு வகையில் பாதிப்புகள் அதிகமாகலாம். சுயகட்டுப்பாடு இன்றி வேறெதுவும் குற்றங்களை தடுக்க முடியாது.
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
24-ஏப்-201310:53:57 IST Report Abuse
சு கனகராஜ் டெல்லியில் உள்ள பெண்களுக்கு இலவசமாய் வழங்குங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Aru Mugam - Singapore,சிங்கப்பூர்
23-ஏப்-201308:02:08 IST Report Abuse
Aru Mugam Awesome, Government should consider subsidy the price for poor and encourage every women to have this Beaware the criminals may miss use the technology
Rate this:
Share this comment
Cancel
Samurai - Japan,ஜப்பான்
23-ஏப்-201308:01:34 IST Report Abuse
Samurai மொத்தத்தில் எந்த பெண்களும் காவல் துறையை நம்பலை. "தனக்கு தாமே" என்ற வகையில் தற்காப்பு ஏற்பாடு. மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் ஆண்டால் கூட பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இல்லை என்பதே உண்மை. பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு அதிக பட்ச தண்டனையை பொது இடத்தில் மக்கள் முன் கொடுத்தால்தான் குற்றங்கள் குறையும்.
Rate this:
Share this comment
Cancel
periasamy karmegam - Port Morsby,பாபா நியூ கினியா
23-ஏப்-201307:39:28 IST Report Abuse
periasamy karmegam உள்ள ஆடை விலகாமல் - உள் ஆடை தெரியாமல் இருந்தாலே போதும்
Rate this:
Share this comment
Cancel
Soundari - Tuticorin,இந்தியா
23-ஏப்-201307:11:57 IST Report Abuse
Soundari Very very thank you for this dress and save her born baby to old lady.
Rate this:
Share this comment
Cancel
adiyamaan - Athipatti,இந்தியா
23-ஏப்-201307:03:44 IST Report Abuse
adiyamaan நல்ல கண்டுபிடுப்பு.. வாழ்த்துக்கள் இதை தீய மனிதர்களிடம் மட்டும் பயன்படுத்துங்கள்.. தீய செயல்களுக்கு பயன்படுதாதிர்கள்
Rate this:
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
23-ஏப்-201306:59:50 IST Report Abuse
Nagarajan S வாழ்க உங்கள் பணி மற்றும் சமூக அக்கறை. பாலியல் பலாத்காரத்திலிருந்து பெண்களை காக்கும் கருவிகளை கண்டுபிடித்த பெண்கள். இதை மிக குறைந்த விலைக்கு தயாரித்தால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெண்களும் வாங்க முடியும். அரசே கூட இத்தகைய உடைகளை தயாரிக்க ஊக்கத்தொகை கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
23-ஏப்-201305:48:07 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இது பெரிய இடத்து பெண்கள் வாங்கும் விலையில்தான் கிடைக்கும். காவல் துறையே 2000 ருபாய் கொடுத்து வழக்கை முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படும் பொருளாதார நிலையில் உள்ள சிறுமி போன்றவர்கள் குடும்பத்திற்கு இது உதவாது.
Rate this:
Share this comment
Cancel
Kavi - Chicago,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201302:44:04 IST Report Abuse
Kavi மிக்க நன்றி, பெண்களை காப்பாற்றுங்கள் கொடியவர்களிடமிருந்து .
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
24-ஏப்-201311:26:13 IST Report Abuse
சு கனகராஜ் எல்லாரும் வாங்கும் விதமாக எளிய முறையில் குறைந்த விலையில் இருக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை