E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குஜூன் 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
00:46

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குத் தொடர்பான விசாரணை ஜூன்,14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.இவ்விழாவில் பேசிய விஜயகாந்த் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு வக்கீல் குப்புசாமி வழக்கு தொடர்ந்தார்.இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஃபிப் 27ம் தேதி ஆஜரானார். அப்போது ஏப்., 22ம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இவ்வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில் விஜயகாந்த் தரப்பில் மூத்த வக்கீல் ஜெகதீசன், வக்கீல்கள் ராகவேந்திரதாசன், மருதையன், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் ஆஜராகினர்.மேலும், விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாலும், அவரது சொந்த தொகுதியில் மக்களை சந்திக்க உள்ளதாகவும், அவரால் வர இயலவில்லை என மனுத்தாக்கல் செய்தனர்.இதற்கு அரசு வக்கீல் குப்புசாமி ஆட்சேபணை தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சரவணன், வழக்கை ஜூன், 14ம் தேதிக்கு ஒத்துவைத்து, அன்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.