தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாதது ஏன்?| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (9)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகத்தில், அனைத்து பகுதிகளிலும், "டாஸ்மாக்' மதுக்கடைகள் இருந்த போதும், போலி மதுபானம் விற்பனை குறையவில்லை.

தமிழகத்தில், மதுபானக் கடைகளை அரசே நடத்தி வருகிறது. இதன் மூலம், ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், வருமானம் கிடைக்கிறது. ஒருபுறம் மது விற்பனை செய்யப்பட்டாலும், மறுபுறம் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளையும், அரசு நடத்தி வருகிறது. அதே நேரத்தில், கள்ளச்சாராயத்தை தடுக்கவும், அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கள்ளச்சாராயத்தை தடுக்கவும், இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு மறுவாழ்வு அளிக்கவும், கடந்த, 2011ம் ஆண்டு, 5 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது.

மதுபானம் குறித்து விழிப்புணர்ச்சி, கள்ளச்சாராய ஒழிப்பிற்கு முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு, அரசு முக்கியத்துவம் கொடுத்த போதும், தமிழகத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் ஆகியவை தயாரித்தல், கடத்தல், விற்பனை செய்தல், எரிசாராயம் கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற சம்பவங்கள் குறையவில்லை. ஆண்டு தோறும், தொடர் மதுவிலக்கு குற்றங்களில்

ஈடுபட்டு வரும், 200க்கும் மேற்பட்டவர்கள், குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுகின்றனர். கடந்தாண்டில், கள்ளச்சாராய வழக்குகளில், 216 பேர் குண்டர் சட்டத்தில்அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், கடந்த ஆண்டு, 11 இடங்களிலும், அதற்கு முந்தைய ஆண்டு ஒன்பது இடங்களிலும், போலி மதுபான தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டுள்ளன. இது தவிர, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் வரை, 89 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8,773 பெண்கள் உட்பட, 90 ஆயிரத்து, 699 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து, 15.25 கோடி ரூபாய் மதிப்பிலான, கள்ளச்சாராயம், எரிசாராயம், போலி மதுபானம் கைப்பற்றப்பட்டு,

Advertisement

அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்து போலி மதுபானங்களும், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து எரிசாராயமும், தமிழகத்திற்குகடத்தப்பட்டுள்ளன.

தமிழக எல்லை பகுதியில், 29 இடங்களில், மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 10 இடங்களில், சோதனைச் சாவடிகள் அமைக்ககப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில், கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக, மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த ஒரு சில மாவட்டங்களில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க, தகுந்த காரணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால், கள்ளச்சாராயம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிடலாம்.

- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
28-ஏப்-201320:02:28 IST Report Abuse
g.s,rajan நல்ல மது கள்ளச்சாராயம் இரண்டுக்குமே அரசியல்வாதிகளின் ஆசி இருக்கு , இதை பொதுமக்கள் மட்டும் மனசு வைத்து புறக்கணித்து ஒன்று இணைந்தால் நிச்சயம் ஒழித்து விடலாம் .மக்கள் சக்தி மகத்தானது .
Rate this:
Share this comment
Cancel
madurai mani bharathi - madurai,இந்தியா
24-ஏப்-201301:37:38 IST Report Abuse
madurai mani bharathi அரசாங்க அனுமதி பெற்று மதுபான தொழில்சாலை நடத்துபவர்களின் பினாமிகளே இந்த கள்ளசாராய வியாபாரிகள்.... எண்ணெய் இல்லாமல் விளக்கு எரியாது...... RS மற்றும் ENI sprite இல்லாமல் யாராலும் போலி மதுபான சிறு தொழிலை நடத்தமுடியாது. சில்லறை வியாபாரத்தை அரசாங்கம் செய்வதை போல மதுபான தொழில்சாலைகளையும் அரசாங்கமே கையகபடுத்தி நடத்தினால்தான் தமிழ்நாட்டில் கள்ளசாராய வியாபாரத்தை தொண்ணூறு சதவீதம் கட்டுபடுதமுடியும்... செய்வார்களா இந்த ஆட்சியாளர்கள்?... ADMK உக்கு மிடாஸ் அதேபோல DMK பினாமியாக இரண்டு மதுபான தொழில்சாலைகள். ( அரசாங்கமே நேரிடியாக மதுபான தொழில் சாலைகளை நடத்தினால் அரசாங்கத்துக்கு மேலும் ""பத்து ஆயிரம் கோடிகள்"" வருடத்திற்கு தமிழக அரசாங்கத்துக்கு கிடைக்கும்.)
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
23-ஏப்-201314:54:50 IST Report Abuse
K.Sugavanam இது அரசியல்வாதி,போலீஸ் ஆகியோரின் நல்லாசியுடன் நடை பெரும் தொழில்.அதனால் தான் ஒழிப்பது கடினம்.இதை சொல்ல தினமலருக்கு திராணி இல்லை..
Rate this:
Share this comment
Cancel
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
23-ஏப்-201312:48:11 IST Report Abuse
Rajkumar மலிவான விலையில் மது கொடுத்தால் கள்ள சாராயத்தை ஒழிக்கலாம். ஆனால் சமூகம் சீர்கெடும். பெட்டர் மதுவை தடை செய்யுங்கள் ( அப்போ கூட கள்ளச்சாராயம் இருக்கும் )
Rate this:
Share this comment
Cancel
HARINARAYANAN - Chennai,இந்தியா
23-ஏப்-201312:19:43 IST Report Abuse
HARINARAYANAN கள்ள சாராயத்தை ஒழிக்கவே அரசு மது பான கடையை நடத்துகிறதா?.... மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டையா கொளுத்துவார்கள்? ........ மேலும் இத்தனை வருடமாக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளால் இந்த கள்ள சாராயம் ஒழிக்கப்பட்டதா? .... இதுவே சொல்லவில்லையா இதை வைத்து டாஸ்மாக்கை நியாயப்படுத்த முடியாது என்பதை? ..... சாராயம் விலை மலிவான மது என்பதால் அதை நாடுகிறார்கள் என்று தோன்றுகிறது.... மலிவு விலை உணவு கடை மாதிரி மலிவு விலை டாஸ்மாக் கடைகளை அரசு திறந்து ஏழை குடிமகன்களுக்கு உதவலாமே ...... அதையும் ஒரு சாதனையாக பட்டியலில் சேர்த்துக்கொள்ள வசதியாக இருக்கும்... மலிவு விலையில் மது கொடுத்து ஏழை குடிமக்கள் வாட்டம் தீர்த்த முடிசூடா அரசியே..... என்று ப்ளெக்ஸ் போஸ்டர் அடித்து நாடெங்கும் வைக்க வசதியாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23-ஏப்-201310:40:31 IST Report Abuse
kumaresan.m " நிருபர் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறர் என்று யாருக்கும் சரியாக விளங்கவில்லை .....அரசுக்கு பணம் போய் சேரட்டும் என்ற கவலையா அல்லது தனி நபருக்கு வருமானம் போய் விடக்கூடாது என்று சொல்ல வருகிறாரா அல்லது தமிழகத்தில் காவல் துறை மெத்தனமாக செயல்படுகிறது என்று சொல்ல வருகிறாரா என்று விளங்க வில்லை "
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
23-ஏப்-201307:12:54 IST Report Abuse
itashokkumar கடைசி வரை ஒழிக்க முடியாத காரணத்தை சொல்லாத செய்தி. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம். ஆனால் கள்ள சாராயத்தை ஒழிக்க 5 கோடி மட்டுமே செலவு. ஓகே ஓகே ஓகே.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
23-ஏப்-201306:58:46 IST Report Abuse
rajan தமிழக கழக கட்சிகள் குவாட்டர் பிரியாணி கொடுத்து வளர்த்த டாஸ்மாக் வீரர்களின் போதை திறனுக்கு ஏத்த மாதிரி சரக்கு கிடைக்காததால் போதை எதில கிடச்சாலும் சலிக்காம நம்ம வீரர்கள் குடிச்சு ஒரு கை பார்த்துடுவாங்க. இந்நாட்டின் தீர்க்க தரிசிகள் வாழ்ந்த காலம் போய் போதை தரிசிகள் கூத்தாட்டம் தான் நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
23-ஏப்-201306:28:40 IST Report Abuse
Eswaran Eswaran அரசு சாராயத்தில் கிக் குறைவு. அதனால் குடிமக்கள் கிக் மிகுந்த சொந்தத் தயாரிப்புகளை நாடுகின்றனர்.நல்லதைத்தானே வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள்? எனவே குடிமக்கள் விரும்பும் சரக்கை கள்ளச் சாராயம் என்பதை ஆட்சேபிக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.