"அமைச்சர் அஸ்வினிகுமார் ராஜினாமா செய்ய மாட்டார்'| Dinamalar

"அமைச்சர் அஸ்வினிகுமார் ராஜினாமா செய்ய மாட்டார்'

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:""மத்திய சட்ட அமைச்சர், அஸ்வினிகுமார், பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்,'' என, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், கமல்நாத் நேற்று கூறினார்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரித்த, சி.பி.ஐ., அறிக்கையை, மத்திய சட்ட அமைச்சர், அஸ்வினிகுமார் திருத்தியதாக, குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நேற்று, லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர்; இதனால், சபை ஒத்திவைக்கப்பட்டது.அப்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், கமல்நாத், ""எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என, சி.பி.ஐ., கூறிய பிறகு, அமைச்சர் அஸ்வினிகுமார் பதவி விலக வேண்டும் என, கோருவதில், எந்த காரணமும் இல்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதல்ல; அஸ்வினிகுமார் ராஜினாமா செய்ய மாட்டார்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை