பார்லி வளாகத்தில் நேற்று...| Dinamalar

பார்லி வளாகத்தில் நேற்று...

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பிரதமர் வேண்டுகோள்

உணவு பாதுகாப்பு மசோதா, நில கையகப்படுத்துதல் மசோதா உட்பட, பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. எனவே, பார்லிமென்டை சுமுகமாக நடத்திச் செல்ல ஒத்துழைப்பு நல்க வேண்டும் என, அனைத்து எதிர்க்கட்சியினரையும் நான் கேட்டுக்
கொள்கிறேன். அனைத்துப் பிரச்னைகளையும், விவாதம் மூலம் பேசித் தீர்க்க தயாராக இருக்கிறோம்.எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பால், பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது போல, மீதமிருக்கும், பிற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்; ஒத்துழைப்பர் என, நம்புகிறேன்.மன்மோகன் சிங்,பிரதமர்.
திரிணமுல் காங்., ஆர்ப்பாட்டம்

"டில்லியில் மம்தா பானர்ஜியை தாக்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை, பார்லிமென்டை சுமுகமாக செயல்பட விட மாட்டோம்' என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர்.இம்மாதம், 9ம் தேதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், அம்மாநில நிதியமைச்சர், அமித் மிஸ்ராவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பான, இந்திய மாணவர்
கூட்டமைப்பினரால் தாக்கப்பட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "மார்க்சிஸ்ட் ரவுடிகளை கைது செய்யும் வரை, பார்லிமென்டை சுமுகமாக செயல்பட விட மாட்டோம்' என, குரல் எழுப்பினர்.

சட்டம் சரியில்லை

டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, இயற்றப்பட்ட சட்டங்கள் கடுமையாக இல்லை என்பதால் தான், பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்ந்து நடக்கின்றன. எனவே, வலுவான சட்டங்கள் அவசியம். உத்தர பிரதேசத்தில், சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. அது குறித்து, பார்லிமென்டின் இரு சபைகளிலும் விவாதிக்க, நோட்டீஸ் கொடுத்து உள்ளோம். "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு வரைவு அறிக்கையை நான் படிக்கவில்லை.மாயாவதி,பகுஜன் சமாஜ்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை