ஸ்ரீசைலம்:"நெற்றியில்,
விபூதி அல்லது பொட்டு வைக்காதவர்கள், ஸ்ரீசைலம் கோவிலுக்குள்,
அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, கோவில் நிர்வாகம்
தெரிவித்துள்ளது.ஆந்திராவில், பிரசித்தி பெற்ற ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன
சுவாமி கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள், கடை பிடிக்க வேண்டிய நடைமுறை
பற்றி, கோவில் நிர்வாக அதிகாரி கூறியதாவது:கோவிலுக்கு வரும் பக்தர்கள்,
நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அல்லது பொட்டு தவறாமல் வைக்க
வேண்டும்.நெற்றியில் பொட்டு வைக்காத பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்பட
மாட்டார்கள். பக்தர்களின் வசதிக்காக, கோவிலின் பல இடங்களில் விபூதி,
சந்தனம், குங்குமம் நிரப்பிய பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவில் ஆர்ஜித
சேவையில், கலந்து கொள்ளும் ஆண் பக்தர்கள், வேஷ்டியும், மேல் துண்டும்
அணிந்திருக்க வேணடும்; பெண் பக்தர்கள், சேலை, ரவிக்கை அல்லது
துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் அணிந்திருக்க வேண்டும். கோவில்
சம்பிரதாய நடைமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரி கூறியுள்ளார்.