தேர்தல் கமிஷன் நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு:"கர்நாடகா முதல்வர் பதவியில் நீடிக்க வைப்பதாக கூறி, அத்வானியின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட, பெரும்பாலான பா.ஜ., தலைவர்கள், எடியூரப்பாவிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்' என, கே.ஜே.பி., பிரச்சாரக் குழு தலைவர் தனஞ்செயகுமார் குற்றம் சாட்டினார். இதற்கு விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தனஞ்செயகுமார் மீது, பா.ஜ., - எம்.எல்.சி.,
மதுசூதன் தேர்தல் கமிஷனிடம் கொடுத்துள்ள புகாரில், "தேர்தல் நேரத்தில், அரசியல் ஆதாயம் பெறும் வகையில், பொய்யான குற்றச்சாட்டுகளை தனஞ்செயகுமார் கூறியுள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது தவறு. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, "அத்வானியின் குடும்ப உறுப்பினர்கள், பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருந்தால், தேர்தல் கமிஷனிடம் ஒப்படைத்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, தனஞ்செயகுமாருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை