சிறுமி பலாத்காரம்: மற்றொரு குற்றவாளி சிக்கினான் டில்லியில் போலீசாருக்கு எதிராக பெரும் போராட்டம்| Dinamalar

சிறுமி பலாத்காரம்: மற்றொரு குற்றவாளி சிக்கினான் டில்லியில் போலீசாருக்கு எதிராக பெரும் போராட்டம்

Updated : ஏப் 23, 2013 | Added : ஏப் 23, 2013 | கருத்துகள் (4)
Advertisement
சிறுமி பலாத்காரம்: மற்றொரு குற்றவாளி சிக்கினான் டில்லியில் போலீசாருக்கு எதிராக பெரும் போராட்டம்

புதுடில்லி:டில்லியில், சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியும், பீகாரில், நேற்று சிக்கினான். எனினும், டில்லியில் போலீசாருக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளதை அடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
டில்லி, காந்தி நகர் பகுதியில், ஐந்து வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசித்த, மனோஜ் குமார், 22, என்ற நபர், தன் வீட்டில், நான்கு நாட்களாக அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, தப்பி ஓடினான்.இந்த கொடூர சம்பவம், டில்லியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அடுத்து, பீகாரில், மாமனார் வீட்டில் பதுங்கியிருந்த, மனோஜ் குமாரை, போலீசார் கைது செய்தனர். இந்த விஷயத்தில், திடீர் திருப்பமாக, மேலும் ஒரு நபருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.இதையடுத்து, கைதான மனோஜ் குமாரிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், மனோஜ் குமாரின் நண்பர், பிரதீப் குமாருக்கும், இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது, உறுதி செய்யப்பட்டது. பிரதீப் குமாரின் சொந்த ஊரான, பீகார் மாநிலத்தில் உள்ள கிராமத்துக்கு, போலீசார் விரைந்தனர்.

அங்கு, தன் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த, பிரதீப் குமாரை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதன்பின், அங்குள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட, பிரதீப் குமார், நேற்றிரவு, டில்லிக்கு அழைத்து வரப்பட்டான்.இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது:மனோஜ் குமாரும், அவனது நண்பரும், கட்டட தொழிலாளியுமான, பிரதீப் குமாரும் சேர்ந்து தான், இந்த கொடூர செயலுக்கான சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர். சிறுமிக்கு, சாக்லேட் கொடுத்து ஏமாற்றி, மனோஜ் குமார், தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான்.அதற்கு பின், இருவரும் சேர்ந்து, சிறுமியை சீரழித்துள்ளனர். ஆனால், சிறுமிக்கு, தான், எந்தவிதமான பாலியல் தொல்லையும் கொடுக்கவில்லை என்றும், சிறுமி இறந்து விட்டதாக கருதி, தப்பி ஓடி விட்டதாகவும், மனோஜ் குமார் கூறியுள்ளான். பிரதீப் குமாரிடமும், விசாரணை நடத்திய பின்பே, என்ன நடந்தது என்ற, உண்மை தெரிய வரும்.இவ்வாறு, போலீசார் கூறினர்.போராட்டம்
சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், டில்லி மக்களிடையே, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "போலீசாரின் மெத்தனமான அணுகுமுறையே, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணம்.

இதற்கு பொறுப்பேற்று, டில்லி கமிஷனர், நீரஜ் குமார், தன்
பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி, டில்லியில், பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.பெண்கள் அமைப்பினர், பா.ஜ., தொண்டர்கள் மற்றும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஏழை மக்கள் கட்சியினர், பார்லிமென்ட்டை முற்றுகையிடுவதற்காக, ஊர்லமாக சென்றனர். போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.இந்தியா கேட், பார்லிமென்ட், டில்லி போலீஸ் தலைமையகம் போன்ற முக்கிய இடங்களுக்கு செல்லும் சாலைகளில், போலீசார், தடுப்புகளை ஏற்படுத்தி, போக்குவரத்தை தடை செய்தனர்.அதேபோல், பொதுமக்கள் அதிகம் குவிவதை தடுக்கும் வகையில், பிரதமர் மற்றும் காங்., தலைவர், சோனியா வீடு, பார்லிமென்ட் போன்ற பகுதிகளுக்கு அருகே உள்ள, மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டன.முன்னேற்றம்சிறுமி சிகிச்சை பெற்று வரும், எய்ம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர், டாக்டர், டி.கே.சர்மா கூறியதாவது:சிறுமியின் உடல் நிலையில், படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. காயங்களுக்கு போடப்பட்டிருந்த கட்டுகள் அகற்றப்பட்டு, தற்போது, புதிய கட்டுகள் போடப்பட்டுள்ளன. காயங்கள் முழுமையாக குணமடைய, இன்னும் சில நாட்களாகும்.இவ்வாறு, சர்மா கூறினார்.
"நான் ராஜினாமா செய்தால் பிரச்னை சரியாகி விடுமா?'
டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறியதாவது:இந்த பிரச்னைக்கு, பொறுப்பேற்று, என் பதவியை ராஜினாமா செய்வதற்கு, 1,000 மடங்கு தயாராக உள்ளேன். ஆனால், என் ராஜினாமாவால், அனைத்து பிரச்னைகளும் சரியாகி விடுமா? டில்லி சிறுமி விவகாரத்தில், போலீசார், மெத்தனமாக செயல்பட்டதாக கூறுவது தவறு.சம்பவம் நடந்த அன்றே, வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், சிறுமியை கடத்தி, அடைத்து வைத்திருப்பான், என, யாரால் கற்பனை செய்திருக்க முடியும்?இந்த பிரச்னையை பெரிது படுத்தாமல் இருப்பதற்காக, சிறுமியின் பெற்றோருக்கு, போலீசார், லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக, கூறுகின்றனர். அப்படி கூறிய போலீசாரை, அடையாளம் காட்டினால், அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க தயார். ஆனாலும், இந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு போலீசார், ஏற்கனவே, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, நீரஜ் குமார் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BLACK CAT - Marthandam.,இந்தியா
23-ஏப்-201310:28:50 IST Report Abuse
BLACK CAT இவன் கு....... மணியை வெட்ட வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
Karam chand Gandhi - Auroville,இந்தியா
23-ஏப்-201309:41:20 IST Report Abuse
Karam chand Gandhi பைத்தியகார மக்கள். ஒரு தனி மனித பாதுகாப்பிற்கு இவ்வளவு கொதிக்கும் மக்கள். 110 கோடி மக்களின் பணத்தை ஊழல் செய்யும் நபர்களை பார்த்து கொதிக்காதது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
23-ஏப்-201309:20:32 IST Report Abuse
p.manimaran இந்த மாதிரி குற்றவாளிகளை 4-பேரை தலையை வெட்டுங்கள். பிறகு எவனும் செய்ய மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
23-ஏப்-201308:58:31 IST Report Abuse
v.sundaravadivelu லட்சக் கணக்கான கற்பழிப்பு குற்றவாளிகள் இந்த பத்து வருட காலங்களுக்குள் ரிலீஸ் செய்யப் பட்டனர் என்கிற ஓர் செய்தியைப் படித்து கவலையும் ஆச்சர்யமும் பட்டேன்.. இனி மேற்கொண்டாவது இவ்விதம் இல்லாமல் கற்பழிப்பு என்கிற ஓர் தகுதியை மிகவும் சீரியசாக கையாளப் படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. கற்பழிப்புக் குற்றங்களில் கைதாகிற எவனானாலும் அவனுக்கு உயர்ந்த பட்ச தண்டனை அறிவிக்கப் பட வேண்டும் என்பது எல்லாரது எதிர்பார்ப்பும் ஆகும்.. அப்போது தான், இனி மேலாவது கொஞ்சம் அசம்பாவிதங்கள் குறையக் கூடும்.. அல்லவெனில், ரிலீசான உடனேயே கூட இதே தவறில் அவன் இறங்கக் கூடும்.. இன்னும் சொல்லப் போனால் இந்தப் பனாதிப் பேமானிப் பயல்களுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பதில் அரசு அவசரம் காண்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.. நன்றி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை