ஆந்திரா, ம.பி., அசாம் மாநிலங்களில் மூன்று சிறுமியர் பாலியல் பலாத்காரம்| Dinamalar

ஆந்திரா, ம.பி., அசாம் மாநிலங்களில் மூன்று சிறுமியர் பாலியல் பலாத்காரம்

Added : ஏப் 23, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

போபால்:குடிக்க தண்ணீர் கேட்டு சென்ற, எட்டு வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த, தந்தை யையும், மகனையும் போலீசார் தேடி வருகின்றனர்.தண்ணீர்ஆந்திரா, சித்தூர் மாவட்டம், காளகஸ்தியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி, தன்னுடன்
படிக்கும் சக மாணவியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.அப்போது, தண்ணீர் தாகம் எடுத்ததால், அருகில் இருந்த ஈஸ்வரய்யா, 25, என்பவரின் வீட்டிக்கு சென்று, தண்ணீர் கேட்டாள். சிறுமியை வீட்டுக்குள் அழைத்த ஈஸ்வரய்யாவும், அவரது தந்தை கோபாலய்யாவும்,60, அவளை பலாத்காரம் செய்தனர்.வீட்டிற்கு திரும்பிய சிறுமி, நடந்த விவரங்களை தன் தாயிடம் கூறினாள். அதிர்ச்சிக்குள் ளான சிறுமியின் தாயார், காளஹஸ்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, கோபாலய்யா மற்றும் ஈஸ்வரய்யாவை தேடிச் சென்ற போது, அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். பாலியல் பலாத்காரம் செய்த இருவரும், சிறுமியின் உறவினர்கள்.இதேபோல், மத்திய பிரதேசம், ஜெய்த்பூரிலும், ஐந்து வயது சிறுமி, 18 வயது வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

முதலில், இதுதொடர்பான புகாரை, முதலில் பெற மறுத்த போலீசார், பின்னர் நடவடிக்கை எடுத்தனர். சிறுமியை பலாத்காரம் செய்த, விஷ்ணு என்ற வாலிபனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.அசாமில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், ஒன்பது வயது சிறுமி, அடையாளம் தெரியாத இரு நபர்களால், பலாத்காரம் செய்யப்பட்டாள். தேயிலை தோட்டம்தேயிலை தோட்டத்தில், மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை, தொழிலாளர்கள் சிலர் கண்டு பிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.அசாம் மாநிலம், கரிம்கஞ்ச் பகுதியில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், பலாத்காரத்திற்கு பின், அவளை கொல்ல முற்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BLACK CAT - Marthandam.,இந்தியா
23-ஏப்-201310:27:08 IST Report Abuse
BLACK CAT இந்திய வல்லரசு ஆகி விட்டது ....... சோனியா இத்தாலி ராணி .... மண் மோகன் இந்திய raja ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை